கனன் தேவி (Kanan Devi) 22 ஏப்ரல் 1916 முதல் 17 ஜூலை 1992 வரை இருந்த இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார். இந்தியத் திரைப்படத்துறையின் ஆரம்பகால பாடல்களில் அவர் இருந்தார், பெங்காலி சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பிரபலமடைந்துள்ளார். அவர் விரைவாக பாடும் பாணியானது, கொல்கத்தாவின் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது.
சுயசரிதை
கனன் தேவி, மேற்கு வங்காளம் ஹவுராவில் ஏப்ரல் 22, 1916இல் பிறந்தார். தனது சுயசரிதையான “சபாரி அமி நாமி” யில், கனன் தன் பெற்றோர்களாக கருதப்பட்டவர்கள் இரத்தின சந்திர தாஸ் மற்றும் ரஜோபாலா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது வளர்ப்பு தந்தையான ரத்தன் சந்திர தாஸ், இறப்புக்குப் பிறகு கனனும் அவரது தாயாரும் தனித்து விடப்பட்டனர். சிலர், கனன்தேவி, ஹௌராஸ் செயிண்ட் ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்தார் எனவும், ஆனால் படிப்பை முழுவதுமாக முடிக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
அவரது நலம் விரும்பியான “காகா பாபு” என்று அவரால் அழைக்கப்பட்ட துளசி பானர்ஜி, அவரை மதன் தியேட்டர்ஸ்/ஜோதி ஸ்டுடியோவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கனனுக்கு வயது 10. 1926இல் வெளிவந்த “ஜெய்தேவ்” என்கிற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, 1927இல் வெளிவந்த “சங்கராச்சார்யா” திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலமாக அவர் கனன் பாலா என்று அறியப்பட்டார்.
அவர் இந்திய திரைப்படத்தின் முக்கிய பிரமுகர்களான கே. எல். சைகல், பங்கஜ் முல்லிக், பிரமாதேஷ் பருவா, பஹரி சன்யால், சபி பிஸ்வாஸ் மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். கனன் தேவி அசோக் மைத்ரா என்பவரை திசம்பர் 1940இல் மணந்து கொண்டார். சில காரணங்களால் 1945இல் விவாகரத்து செய்தார். பின்னர் “ஹரிதாஸ் பட்டாச்சார்ஜி” என்பவரை 1949இல் மணந்து கொண்டார். இந்திய திரையுலகிற்கு தனது பங்களிப்புக்காக கனன் தேவி பெங்காலித் திரையுலகின் முதல் பெண்மணியாக பல விருதுகளைப் பெற்றார். விஷ்வாபாரதியின் கௌரவ பட்டம், 1968 ஆம் ஆண்டில் பத்மசிறீ மற்றும் 1976 ஆம் ஆண்டில் தாதாசாஹேப் பால்கே விருது போன்ற விருதுகளைப் பெற்றார்.
வெளி இணைப்புகள்
நடிகை கனன் தேவி – விக்கிப்பீடியா