கரிஷ்மா தன்னா (Karishma Tanna) 1983 டிசம்பர் 21 அன்று பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகர் ஆவார். “குயின்கி சாஸ் பி கபி பாகு தி” , “நாகர்ஜுனா – ஏக் யோதா” மற்றும் “கயமத் கி ராத்” ஆகியவற்றில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர், 2014 இல் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் இரண்டாமிடத்திலும் வந்துள்ளார். மேலும், “சாரா நாச்கே டிக்கா” (2008), “நாக் பாலியே” (2015) மற்றும் “ஜாலக் டிக்லா ஜா” போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவரது பாலிவுட் அறிமுகமான “கிராண்ட் மஸ்தி”க்கு பிறகு, டினா & லோலோ படத்தில் நடித்துள்ளார். அத்துடன் சஞ்சய் தத்தின் வாழ்க்கைத் திரைப்படமான’ “சஞ்சூ”, என்பதில் ரன்பீர் கபூருக்கு இணையாக நடித்துள்ளார். கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏக்தா கபூரின் நாகினி 3 தொடரில்”நாகின் ரூகி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான “கயாமத் கி ராத்” என்ற தொடரில் கௌரி / வைதேகி என்ற முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
தன்னா குஜராத்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரது தாயாருடன் வாழ்கிறார் இவரது தந்தை அக்டோபர் 2012 இல் இறந்தார் 2014 ஆம் ஆண்டில் நடிகர் உபேன் படேலை தன்னா “பிக் பாஸ்” வீட்டிற்குள் சந்தித்தார், பின்னர் அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு, 2016 ல், அவர்கள் பிரிந்தனர்.
தொழில்
தொலைக்காட்சி (2000 முதல் தற்போது வரை)
பாலாஜி டெலிபிலிம்ஸாரின் நெடுந்தொடரான “குயின்கி சாஸ் பி கபி பாகு தி” என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் தொழிலை துவங்கினார். அத்தொடரில் (ஜூலை 2000 முதல் 2008 நவம்பர் வரை), இவர் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பாலாஜி டெலிபிலிம்ஸ் நாடக தயாரிப்பான ” கஹி டூ மிலேங்கே” (நவம்பர் 2002 -2003 என்றத் தொடரிலும் நடித்துள்ளார்.. “கோய் தில் மெயின் கே” (டிசம்பர் 2003 – பிப்ரவரி 2005) என்றத் தொலைக்காட்சித் தொடரில் கிருத்திகா என்ற வேடத்தில் நடித்தார்.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பப்பட்ட ஒரு மாயாஜால தொலைக்காட்சி நிகழ்ச்சியான “இந்தியாவின் மேஜிக் ஸ்டார்” என்பதில் பங்கேற்றார். “பால் வீர்” என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ராணி பாரி” என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ளார். செப்டம்பர் 2014 இல் “கலர்” தொலைக்காட்சி நடத்திய பிரபலமான சர்ச்சைக்குரிய “பிக்பாஸ் 8 ” நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளராகத் திகழ்ந்த தன்னா, அந்த வீட்டில் 4 மாதங்கள் கழித்து ஒரு இறுதிப் போட்டியாளராகவும் , இரண்டாவது இடத்திலும் வந்தார்.
படங்களில் அறிமுகம் (2005 முதல் தற்போது வரை)
தன்னா “தோஸ்தி: பிரன்ட்ஸ் பாரெவெர்” என்ற பாலிவுட் படத்தில் “நந்தினி தப்பார் “என்ற பாத்திரத்தில் டிசம்பர் 2005இல் அறிமுகமானார். கன்னடத் திரையுலகில் “ஐ ஆம் சாரி மாத் பன்னி பிரீத்சோனா” என்ற படத்தின் மூலம் “சேத்தனா” பெயர் கொண்ட வேடத்தில் அறிமுகமானார். இப்படம் ஜூன் 2011இல் வெளிவந்தது. செப்டம்பர் 2013 இல், “கிராண்ட் மஸ்தி” என்ற ஒரு பாலிவுட் பாலியல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இது 2004இல் வெளிவந்த “மஸ்தி” படத்தின் தொடர்ச்சியாகும். மேலும், “ஸ்டேபிரீ”, “லைப்பாய்” (சோப்) மற்றும் “நிர்மா” உட்பட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தன்னா நடித்துள்ளார்.