கவிதா கௌசிக் (Kavita Kaushik ) (பிறப்பு: 1981 பிப்ரவரி 15) இவர் ஓர் இந்திய நடிகையாகவார். தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவர் அறிமுகமானார். சோனி சாப் தொலைக்காட்சியில் இடம்பெற்ற தொடரான எஃப். ஐ. ஆரில் சந்திரமுகி சௌதலா என்ற வேடத்தில் நடித்ததற்காக கவிதா கௌசிக் மிகவும் பிரபலமானவர். இது இந்திய தொலைக்காட்சித் துறையில் இவரது வாழ்க்கையை நிலை நிறுத்தியது. மேலும் இவருக்கு ஒரு நல்லப் பெயரையும் பெற்றுத் தந்தது. கவிதா கௌசிக் நடன மெய்ம்மை நிகழ்ச்சியான நாச் பாலியேவில் பங்கேற்றார். மேலும் ஜலக் டிக்லா ஜாவின் எட்டாவது பருவத்திலும் இவர் பங்கேற்றார் சோனி சாப் தொலைக்காட்சியில் வெளியான டாக்டர் பானுமதி ஆன் டூட்டி என்ற தொடரில் கவிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
கவிதா கௌசிக் 1981 பிப்ரவரி 15 அன்று தில்லியில் பிறந்தார். இவர் முன்னாள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான தினேஷ் சந்திர கௌசிக் என்பவரின் மகளாவார். இவர் தில்லியின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் தத்துவத்தில் பட்டம் பெற்றார்.
தொழில்
அறிமுகம் (2001-06)
கவிதா கௌசிக் தனது கல்லூரி நாட்களில் விளம்பரம், நிகழ்ச்சிகளை தொகுத்தல் மற்றும் நிகழ்ச்சியினை தொகுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். 2001ஆம் ஆண்டில் இவர் குடும்பம் என்றத் தொடருக்காக புதுதில்லிக்குச் சென்று பின்னர் மும்பைக்குச் சென்றார். குடும்பம் சோப் ஓபராவில் பணிபுரிந்த பிறகு, கவிதா கௌசிக் கஹானி கர் கர் கீயில் என்றத் தொடரில் மன்யா தோஷியின் பாத்திரத்தை சித்தரித்தார். பின்னர் இவர் நைனா குல்கர்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்த குங்குமம் – ஏக் பியாரா சே பந்தன் தினமும் பிற்பகலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. மேலும் பியா கா கர் மற்றொரு பிரபல தொலைக்காட்சி தொடரான ரீமிக்ஸ், என்பதில் இவர் பல்லவி என்ற வேடத்தில் நடித்திருந்தார். தும்ஹரி திஷா என்ற தொடரிலும், சி.ஐ.டி சப் இன்ஸ்பெக்டர் என்றத் தொடரில் அனுஷ்கா என்ற ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.
திருப்புமுனை மற்றும் வெற்றி (2006–15)
தொழில்துறையில் தனது ஆரம்ப நாட்களில், கவிதா கௌசிக் தனது உயரமான சட்டகம் மற்றும் கவர்ச்சியான ஆளுமை காரணமாக பெரும்பாலும் கவர்ச்சியான மற்றும் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்து வந்தார். 2006ஆம் ஆண்டில் எஃப்.ஐ.ஆரில் சந்திரமுகி சௌதாலா என்ற பாத்திரத்தில் நடிக்கக் தொடங்கினார். இது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை வழங்கியது. மேலும் அந்த நேரத்தில் இவருக்கு வழங்கப்படும் எதிர்மறை வேடங்களில் இருந்து ஒரு முறிவை ஏற்படுத்தியது. சிட்காம் ஒரு வணிக மற்றும் விமர்சன வெற்றியை நிரூபித்தது. 1000 அத்தியாயங்களை நிறைவு செய்தது. ஹரியானவி உச்சரிப்பில் பேசும் ஒரு துணிச்சலான பெண் காவலரின் பாத்திரம் கௌசிக் இந்திய தொலைக்காட்சியின் புகழ்பெற்ற முகமாக மாறியதுடன், இவருக்காக பல பாராட்டுகளையும் பெற்றது. சந்திரமுகி சௌதாலாவின் கதாபாத்திரம் இந்திய தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை
கவிதா கௌசிக் சக தொலைக்காட்சி நடிகர் கரண் குரோவருடன் உறவு கொண்டிருந்தார். மேலும் இவர்கள் பிரபல ஜோடிகளின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான நாச் பாலியே 3 இல் பங்கேற்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்த ஜோடி பிரிந்தது. இவர் தனது சிறந்த நண்பர் ரோனிட் பிஸ்வாஸை 2017இல் திருமணம் செய்து கொண்டார்.