நடிகை கிரோன் கெர் | Actress Kirron Anupam Kher

கிரோன் அனுபம் கெர் (Kirron Anupam Kher) “கிரன்” என்ற பெயருடன் 1955 ஜூன் 14 அன்று பிறந்த ஒரு இந்திய நாடக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். மே 2014 இல், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.


குடும்பம்


கிரன் கெர் 14 ஜூன் 1955 இல் ஒரு ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார், சண்டிகரில் வளர்ந்தார். அவரது பெற்றோர்களால் “கிரன்” என்ற பெயரிடப்பட்டது, அவருடைய முழுப்பெயர் “கிரன் தாக்கர் சிங்” என்பதாகும். கவுதம் பெர்ரிக்கு தனது முதல் திருமணத்தின் போது, அவர் “கிரன் பெர்ரி” என்று அழைக்கப்பட்டார். அனுபம் கெருடன் திருமணம் செய்தபோது, அவர் தனது முதல் பெயரை மறுபடியும் தனது கணவரின் குடும்பத்தோடு சேர்த்து, “கிரண் தாக்கர் சிங் கெர்” என்று மற்றிக்கொண்டார். பின்னர் எண் சோதிடத்தை நம்பினார் ,மற்றும் 2003இல் தனது 48 வய்தில் எண் கணித அடிப்படையில் தனது பெயரை “கிரன் என்பதிலிருந்து ” கிரோன்” என் மாற்றிகொ கொண்டார். அவர் தனது ஆரம்பப் பெயர்களை கைவிட்டு, “கிர்ரோன் கெர்” என்று அறியப்பட்டார். அவர் சில நேரங்களில் “இந்தியாவின் பாட்டி” என்று அழைக்கப்படுகிறார்.


இளமைப் பருவம்


கிரோன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் தனது பள்ளி படிப்பை மேற்கொண்டார். ம்ற்றும் சண்டிகரில் படிப்பைத் தொடர்ந்தார், மேலும் சண்டிகர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்திய நாடகத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பை சார்ந்த தொழிலதிபராக கௌதம் பெர்ரியை மணந்தார்,அவருக்கு சிக்கந்தர் கெர் என்ற ஒரு மகன் இருக்கிறார்.


அரசியல்


பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து மே 2014 இல்,இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.


விமர்சனம்


சண்டிகரில் ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஒரு பெண் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பெண்கள் அந்நியர்களோடு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இவர் கூறுயது எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் விமர்சனங்களை பெற்றது.

வெளி இணைப்புகள்

நடிகை கிரோன் கெர் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *