நடிகை லாவண்யா திரிபாதி | Actress Lavanya Tripathi

இலாவண்யா திரிபாதி ( Lavanya Tripathi பிறப்பு: டிசம்பர் 15, 1990 ) இந்திய நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் முதன்மையாக பணியாற்றுகிறார். வடிவழகியாக பணியாற்றிய இவர் 2006 ஆம் ஆண்டில் மிஸ் உத்தரகண்ட் பட்டத்தை வென்றார். 2012 ஆம் ஆண்டில் அந்தல ரக்சஷாய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தடம் பதித்தார்.


ஆரம்பகால வாழ்க்கை


இலாவண்யா திரிபாதி இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பிறந்தார். உத்தரகாண்ட மாநிலத்தில் தெராதுனில் வளர்ந்தார். இவரது தந்தை உயர் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார். இவரின் தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மூத்த சகோதரியும், ஒரு மூத்த சகோதரரும் உள்ளனர். இலாவண்யா தனது பள்ளிப் படிப்பை தெராதுனில் மார்ஷல் பள்ளியில் பயின்றார். மும்பையில் உள்ள ரிஷி தயாராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.


இலாவண்யா திரிபாதி பள்ளிப் படிப்பை நிறைவு செய்தபின் வடிவழகியாகவும், தொலைக்காட்சி வணிக விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இவர் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றவர். பேல் பேல் மாகடிவோய் திரைப்படத்தில் பரதம் ஆடியுள்ளார்.


விளம்பரங்களில்


இலாவண்யா திரிபாதி தெலுங்கானாவின் போக்குவரத்து காவல் துறையுடன் ஒரு விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரத்திற்காக அவர் ஊதியம் பெறவில்லை. ஃபேர் & லவ்லி (அழகுசாதனப் பொருட்கள்) மற்றும் பினானி சிமென்ட் உள்ளிட்ட சில பிரபலமான வணிக விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.


திரைப்படத்துறையில்


இலாவண்யா திரிபாதி 2012 ஆம் ஆண்டு நண்பர் ஒருவரின் பரிந்துரையினால் தெலுங்கு திரைப்படமான அந்தலா ரக்சாசி திரைப்படத்தின் நடிகர் தேர்வில் கலந்து கொண்டார். அத்திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அந்தலா ரக்சாசி திரைப்படத்தில் மிதூனாவாக நடித்ததற்காக இலாவண்யா விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றதுடன், மா தொலைக்காட்சியின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அடுத்த ஆண்டு இவர் தூசுகெல்தா என்ற திரைப்படத்தில் நடித்தார். இத் திரைப்படமும் வெற்றிப் பெற்றது. 2014 ஆம் ஆண்டில் பிரம்மன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிரம்மன் திரைப்படத்தில் காயத்ரி என்ற பத்திரிகையாளராக நடித்தார். இதைத் தொடர்ந்து நானும் ரவுடி தான் என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் புதிய தயாரிப்பு நிறுவனம் இந்த திரைப்படத் திட்டத்தை எடுத்துக் கொண்டபோது அதிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் பேல் பேல் மாகடிவோய் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நானியுடன் நடித்தார்.


2019 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அவர் 12 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


தொலைக்காட்சியில்


இலாவண்யா திரிபாதி இந்தி தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். 2006-2009 ஆம் ஆண்டுகளில் ஸ்ஸ் கோய் ஹை என்ற தொடரிலும், 2008 ஆம் ஆண்டில் கெட் கார்ஜியஸ் என்ற தொடரிலும், 2009- 2010 ஆம் ஆண்டுகளில் பியார் கா பந்தன் என்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். 2007- 2010 ஆம் ஆண்டுகளில் பிரபலமான தொலைக்காட்சித் தொடரான சி.ஐ.டி இல் சாக்சி என்ற கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.


வெளி இணைப்புகள்

நடிகை லாவண்யா திரிபாதி – விக்கிப்பீடியா

Actress Lavanya Tripathi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *