இலீலா தேசாய் (Leela Desai) 1930-1940களில் நடித்து வந்த ஒரு இந்திய நடிகையாவார். இவர் 1900களின் முற்பகுதியில் இசைக்கலைஞரான உமேத்ராம் லால்பாய் தேசாய் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சத்யபாலா தேவி ஆகியோரின் மகளாவார்.
இவரது பெற்றோர் 3 வருட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தபோது நியூ செர்சியிலுள்ள நுவார்க்கில் பிறந்தார். இவரது தந்தை குசராத்தியாவார். இவரது தாயார் இந்தியாவின் பீகாரைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவில் வளர்ந்தார். இவர் 11 இந்திய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், 1961இல் காபூலிவாலி என்றத் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். 1944ஆம் ஆண்டில், இவர் தனது சகோதரி இரமோலாவுடன் சேர்ந்து கலியான் என்றத் திரைப்படத்தில் நடித்தார்.
தொழில்
சோஹன்லால் மற்றும் லச்சுமஹாராஜின் கீழ் பாரம்பரிய நடனத்தில் முறையான கல்வியையும், மோரிஸ் கல்லூரியில் (லக்னோ) இசையையும் பெற்றார். 1943இல் விஷ்ராம் பெடேகர் தயாரித்த நாகநாராயண் என்றத் திரைப்படத்தில் நடித்தார். 1941இல் பெங்களூர் இடைநிலைக் கல்லூரி மாணவர்களால் அழைக்கப்பட்டார். “நியூ தியேட்டர்ஸ்” மற்றும் “பிரபாத் பிலிம் கோ” போன்ற நிறுவனங்கள் தயாரித்த படங்களின் விழாக்களை நடத்துவதில் இக்கல்லூரிக்கு பெருமை இருந்தது. தேசாய் ஒரு நடனக் கலைஞராகவும், சோஹன் லாலை பின்பற்றுபவராகவும் இருந்தார். இவர் 1926இல் லக்னோவில் நிறுவப்பட்ட “பட்கண்டே இசை நுறுவனத்தில் பயிற்சி பெற்றார்.
1939இல் வெளியிடப்பட்ட கபல் குந்தலா என்ற படத்தின் மூன்றாவது பதிப்பு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1949இல் வெளியானது. இப்படத்தை நிதின் போஸ் மற்றும் பானி மஜும்தார் இருவரும் இயக்கியிருந்த இப்படத்தில் இவர் நடித்திருந்தார். பானி மஜும்தார் இவரது சகோதரி மோனிகா தேசாயை மணந்தார். டார்ஜீலிங்கில் “லில்லி காட்டேஜ்” என்று ஒரு வீடு இவருக்கு இருந்தது. இவரது தாயார் சத்யபாலா தேவி இறக்கும் வரை அங்கே வாழ்ந்தார்.
வெளி இணைப்புகள்
நடிகை இலீலா தேசாய் – விக்கிப்பீடியா