நடிகை நுபுர் மேத்தா | Actress Nupur Mehta

நுபுர் மேத்தா ஒரு இந்தியத் திரைப்பட மற்றும் விளம்பர நடிகை. இவர் இந்தியில் வெளியான ஜோ போலே ஸோ நிஹா திரைப்படத்தில் நடித்துள்ளார். நுபுர், பேன்டா குளிர்பானம், பைரேலி போன்ற விளம்பரங்களிலும் பியாட் வகை காருடைய நாள்காட்டி விளம்பரத்திலும் நடித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்வியர் என்னும் நாளிதழின் 2001-ம் ஆண்டின், சூன் மாத இதழின் அட்டைப்பக்கத்தில் இவருடைய புகைப்படம் வெளிவந்தது. கடந்த ஆண்டு (2011), இந்தியாஸ் பர்ஸ்ட் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வெர்சன்ஸ் (India’s first Mills & Boons versions) என்ற புத்தகத்தின் அட்டைப் பக்கத்திலும் இவருடைய புகைப்படம் வெளிவந்தது.


கிரிக்கெட் சூதாட்ட பிணக்கு


தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்திற்கானத் துடுப்பாட்ட போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சூதாட்டம் செய்யப்பட்டதாகவும், அதில் இந்தி திரைப்பட நடிகை ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அந்நடிகையின் புகைப்படம் சற்று மங்கலாக வெளியிடப்பட்டிருந்தது. அது நுபுர் மேத்தாவின் தோற்றத்துடன் ஒத்துப்போகின்றது. ஆயினும், நுபுர் மேத்தா, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து, அந்நாளிதழுக்கு எதிராக நுபுர் வழக்கு தொடுக்க உள்ளார்.. இப்பிணக்குகளுக்குப் பின்னர், நுபுர் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் தோன்ற அழைப்பு விடப்பட்டுள்ளது. சூன் 11, 2012-ல், நுபுரிடம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சூதாட்ட தடுப்புக்குழு மும்பையில் விசாரணை செய்தது

வெளி இணைப்புகள்

நடிகை நுபுர் மேத்தா – விக்கிப்பீடியா

Actress Nupur Mehta – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *