ஓஹானா சிவானந்த் (Ohanna Shivanand) “ஷில்பா ஆனந்த்” என்ற பெயருடன் இவர் ஒரு ஒரு இந்திய விளம்பர நடிகை, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். “தில் மில் காயே” என்றத் தொலைக்காட்சித் தொடரில் இவரது இரு வேறுபட்ட பாத்திரங்களான “டாக்டர்ரித்திமா குப்தா” மற்றும் “டாக்டர் ஷில்பா மல்ஹோத்ரா” என்ற பெயரில் நடித்தற்காக நன்கு அறியப்பட்டார். அவர் திரைப்படம் மற்றும் இசை வெளியீடுகளில் நடித்தார்
இளமை வாழ்க்கை
தென்னாப்பிரிக்காவில் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆனந்த் பிறந்தார். அவரது பெற்றோர் இந்தியாவிற்கு வந்தனர், பின்னர் அவர் இந்தியா சென்றார். 2015 ஆம் ஆண்டில் அவர் தனது பெயரை “ஓஹானா சிவானந்த்” என மாற்றினார் . கர்நாடக மாநிலத்தில் பிரபலமான நடிகை சாக்ஷி சிவானந்த், இவரது இளைய சகோதரி ஆவார். 2000 முதல் 2003 வரை பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகரில், பயன்பாட்டு மென்பொருளில் முதுகலைப் பட்டம் ‘(எம்.சி.ஏ)’ பெற்றார். ஐந்து வருடங்களுக்கு “ஜாவா” “J2EE” மற்றும் மின்-கற்றல் பயன்பாட்டு அபிவிருத்தியாளராக பணியாற்றினார்.
தொழில்
விளம்பர நடிகையாக
ஆனந்த் தனது தொழில் வாழ்க்கையை ஒரு விளம்பர நடிகையாக ஆரம்பித்தார். “கோகோ-கோலா” விளம்பரத்தை ஆமிர் கானுடன், “லக்ஸ் சோப்” விளம்பரத்தை ஐஸ்வர்யா ராயுடன், “டாபர் புடின் ஹரா” மற்றும் “நெரோலாக் பெயிண்ட்” விளம்பரத்தை அமிதாப் பச்சன் ஆகியோருடன் 40க்கும் மேற்பட்ட விளம்பரங்களை அவர் செய்துள்ளார். பல்வேறு வகை தயாரிப்புகளுக்கு விளம்பரமாகவும் அவர் பணிபுரிந்தார்.
திரை வாழ்க்கை
ஆனந்த் தென்னிந்திய திரைப்படமான “பெசவாடா போலிஸ் ஸ்டேஷன்” (2002) என்றப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரவி சங்கரின் படமான “இக்ரார் பை சான்ஸ்” (2006) படத்தில் “ராஷ்மி மெஹ்ரா” என்ற பாத்திரத்தில் பாலிவுட் படங்களில் அறிமுகமானார்.
தொலைக்காட்சி
ஆனந்த் ஒரு தொலைக்காட்சி நடிகையும் ஆவார். “ஸ்டார் ஒன்” தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மருத்துவ நிகழ்ச்சியான “தில் மில் கயே” என்ற ஒரு நிகழ்ச்சியில் “டாக்டர் ரித்திமா குப்தா” என்ற வேடத்தில் தோன்றினார். அவர் மே 2008 இல் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேரி, மீண்டும் 2010 இல் திரும்பினார், அதே நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில் “டாக்டர் ஷில்பா மல்ஹோத்ரா” என்ற ஒரு பாத்திரத்தில் நடித்தார். 2012 “பிக்” தொலைக்காட்சியான “மஹிசாகர்” என்ற ஒரு “மேஜிக்” நிகழ்ச்சியில் இவர் “கேமியோ” பாத்திரத்தை செய்தார்.
இசை வெளியீடுகள்
2007 ஆம் ஆண்டில் “கோல் கோல் அக்” (2002) மற்றும் “குச் டெர் தக்” (2007) ஆகிய இசை நிகழ்ச்சிகளில் தோன்றினார். மேலும் “பராஸ் அரோரா” மற்றும் “ஜுபெர்” ஆகியோருடன் “கச்சிச்சியன்” (2014) , “சகேல் ஓஸ்வால்” உடன் “குவாஷேய்ன்” (2014), “தர்சீம் ஜாசர்” உடன் மற்றும் “ஓவர் அண்டர்” (2016) ஆகியவற்றில் தோன்றியுள்ளார்.