நடிகை பூர்ணா ஜெகன்நாதன் | Actress Poorna Jagannathan

பூர்ணா ஜெகன்நாதன் (Poorna Jagannathan) என்பவர் அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். டெல்லி பெல்லி எனும் இந்தித் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நிர்பயா எனும் நாடகத்தைத் தயாரித்தார். அதனை எழுதி இயக்கியவர் ஈல் ஃபேர்பர் . இதன் மையக் கருவானது பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மௌனத்தை களைவது ஆகும். இவரின் நாடகமானது 2013 ஆம் ஆண்டின் பன்னாட்டு மன்னிப்பு அவை விருதினைப் பெற்றது. இதனை டெலிகிராப் பத்திரிகையானது நீங்கள் திரையரங்கில் இதுவரை பார்த்ததிலேயே சிறப்பானதொரு அனுபவத்தைப் பார்க்க இருக்கிறீகள் எனக் கூறியது. ஃபெமினா இதழ் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவின் அழகிய 50 பெண்களின் பட்டியலில் இவருக்கு 10 ஆவது இடம் கிடைத்தது. 2014 ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த 50 பெண்களின் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்தது. மேலும் இவர் நாடோடி (ஜிப்சி), நெற்ஃபிளிக்சு , எச்பிஓ குழுமத்தின் அறை 104 போன்றவற்றில் நடித்துவருகிறார்.


ஆரம்பகால வாழ்க்கை


பூர்ணா ஜெகன்நாதனின் பெற்றொர் இந்திய தூதரகத்தில் பணிபுரிந்தனர். இவர் தூனிஸ், தூனிசியாவில் பிறந்தார்.பாக்கித்தான், அயர்லாந்து, பிரேசில், இந்தியா, மற்றும் அர்கெந்தீனா போன்ற நாடுகளிலும் வாழ்ந்துள்ளார். இவர் ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேய மொழி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்தவர். தன்னுடைய கல்லூரிப் படிப்பை பிரேசிலில் உள்ள பிரேசிலியா எனும் பல்கலைக்கழகத்தில் துவங்கினார். ஆனால் மேரிலன்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் பட்டம் பெற்றார். தன்னுடைய மேற்படிப்பை நடிகர்களின் படமனை (தெ ஆக்டர்ஸ் ஸ்டூடியோ) எனும் உலகப் புகழ் பெற்ற நாடகப் பள்ளியில் பயின்றார். ஆனால் முதல் வருடத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.


தொழில்


பூர்ணா ஜெகன்நாதன் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறிப்பாக அட்டை வீடு (ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்), சட்டம் ,ஒழுங்கு: பாதிக்கப்பட்டவர்களின் தொகுப்பு (லா அண்ட் ஆர்டர்: ஸ்பெசல் விக்டிம்ஸ் யூனிட்) போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும் தலைப்பற்ற பிப்பா வெள்ளைத் திட்டம் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை எ24 பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


செப்டம்பர் 2016 இல் ஜெகன்நாதன் நாடோடி எனும் தொடரில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. நயோமி வாட்ஸ் இயக்கிய இந்தத் தொடரை நெற்ஃபிளிக்சு தயாரித்து சூன் 30, 2017 இல் வெளியிட்டது.


அங்கீகாரங்கள்


டெல்லி பெல்லி திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த பெண் துணை நடிகைக்கான ஸ்டார்டஸ்ட் விருதைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டில் வெர்வெ எனும் இதழ் வெளியிட்ட இந்தியாவின் 50 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றது. ஃபெமினா இதழின் இந்தியாவின் 50 அழகிகள் பட்டியலில் இவருக்கு 10 ஆவது இடம் கிடைத்தது. வோக் வெளியிட்ட சிறந்த பாங்கு பெண்களின் பட்டியலில் 2012,2014, 2015 ஆம் ஆண்டுகளில் இவருடைய பெயர் இடம் பெற்றிருந்தது. 2014 ஆம் ஆண்டுகளில் கிரேசியா விருதுகளில் சிறந்த ஆடை அணிபவருக்கான விருது கிடைத்தது. டேசி கிளப் 2011, 2013 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் நடத்திய வாக்கெடுப்பில் அமைதியான (கூலஸ்ட்) 50 இந்திய பெண்களில் இவருக்கும் இடம் கிடைத்தது. விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (பீட்டா) என்பதில் தூதராகவும் உள்ளார்.


திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்


2004


சட்டம் மற்றும் ஒழுங்கு, அவள் என்னை வெறுக்கிறாள்,


2005


சட்டம் மற்றும் ஒழுங்கு, ஜானி பூஜ்ஜியம், டீல் பிரேக்கர், காலநிலை மனிதன்(தெ வெதர்மேன்) நவீன யுகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்


2006


லவ் மங்கி (அன்பான குரங்கு), என்னைக் காப்பாற்று, சட்டம் மற்றும் ஒழுங்கு.


2016


தெ நைட் ஆஃப், கேரி பில்பி


2017


நடோடி, வட்டம், சட்டம் மற்றும் ஒழுங்கு: பாதிக்கப்பட்டவர்களின் தொகுதி


வெளி இணைப்புகள்

நடிகை பூர்ணா ஜெகன்நாதன் – விக்கிப்பீடியா

Actress Poorna Jagannathan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *