ராதிகா மதன் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். ஆரம்பத்தில், ராதிகா மதன் புதுதில்லியில் நடன பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டில், கலர்ஸ் டிவியின் மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகர் சக்தி அரோராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இத் தொலைக்காட்சி தொடர் 2016 ஆம் நிறைவடைந்தது. பின்னர், விஷால் பரத்வாஜின் நகைச்சுவை-நாடக படகா (2018) திரைப்படத்தின் மூலம் ராதிகா மதன் பாலிவுட்டில் அறிமுகமானார். படகா திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விழாவில் சிறந்த அறிமுக (பெண்) மற்றும் சிறந்த நடிகைகான (விமர்சகர்கள்) பரிந்துரைகளைப் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
ராதிகா மதன் டெல்லியைச் சேர்ந்தவர்.கலர்ஸ் டிவியில் ஒன்றரை வருடம் ஒளிபரப்பான மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து தனது நடிப்புபணியை தொடங்கினார். இவர் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஜலக் டிக்லா ஜா (சீசன் 8) இல் பங்குபற்றினார்
தொலைக்காட்சி தொடரில் தடித்த பின், சன்யா மல்ஹோத்ராவுடன் விஷால் பரத்வாஜின் நகைச்சுவை நாடகமான படகா திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமானார். இத் திரைப்படம் சரண் சிங் பாதிக் எழுதிய டூ பெஹ்னென் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பாத்திக்கின் சகோதரர்களின் மனைவிகளை அடிப்படையாகக் கொண்ட கதை. மதன் மற்றும் மல்ஹோத்ரா இருவரும் பேச்சுவழக்கு மற்றும் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களுக்காக உண்மையான பெண்களை சந்தித்தனர். இப் படத்திற்காக மல்ஹோத்ரா மற்றும் மதன் இருவரும் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ரோன்சி கிராமத்தில் தங்கி ராஜஸ்தானி பேச்சுவழக்கு கற்றுக்கொண்டனர். எருமைகளில் இருந்து பால் கறத்தல், கூரைகளை வேய்தல், சுவர்களை சாணத்தால் பூசுதல், மற்றும் நீண்ட தூரம் நடந்து செல்லல் போன்றவற்றையும் அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர். மேலும் இந்த படத்திற்காக அவர்கள் 10 கிலோ உடல் எடையையும் அதிகரிக்க வேண்டியிருந்தது.
ராதிகா மதன் இயக்குனர் வாசன் பாலாவின் ஆக்சன் காமெடி மார்ட் கோ டார்ட் நஹி ஹோட்டாவில் தோன்றினார். இது 2018 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் மிட்நைட் மேட்னஸ் பிரிவில் திரையிடப்பட்டு, அதில் மக்கள் தேர்வு விருதை வென்றது. இந்த படம் 2018 மமி திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
தொலைக்காட்சி நாடகம்
2014-2016 | மேரி ஆஷிகி தும் சே ஹாய் |
---|
ரியாலிட்டி நிகழ்ச்சிகள்
2014 | ஜலக் டிக்லா ஜா 7 |
---|---|
2014-15 | பெட்டி கிரிக்கெட் லீக் |
2015 | ஜலக் டிக்லா ஜா 8 |
2015 | நாச் பாலியே 7 |
திரைப்படங்கள்
2018 | படகா |
---|---|
2019 | மார்ட் கோ டார்ட் நஹி ஹோட்டா |
2020 | ஆங்ரேஸி நடுத்தர |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
2015 | ஜீ தங்க விருதுகள் |
---|
2018 | ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் |
---|---|
2019 | ஸீ சினி விருதுகள் |
2019 | பாலிவுட் திரைப்பட பத்திரிகையாளர் விருதுகள் |
2019 | 64வது பிலிம்பேர் விருதிகள் |
வெளி இணைப்புகள்
நடிகை ராதிகா மதன் – விக்கிப்பீடியா