நடிகை ரஷ்மி தேசாய் | Actress Rashami Desai

ரஷ்மி தேசாய் என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் உத்தரன் என்ற இந்தி தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். மேலும் இந்தி தொலைக்காட்சிகளின் நடன மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் தில் ஸே தில் தக் என்ற கலர்ஸ் டிவியின் தொடரில் நடித்து வருகிறார்.


சின்னத்திரை வாழ்க்கை


தொடக்கத்தில் போஜ்புரி பட நடிகையாக அறியப்பட்ட ரஷ்மி தேசாய் 2006ஆம் ஆண்டு ஜீ டிவியின் ராவண் என்ற தொடரில் மண்டோதரியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருசில தொடர்களில் நடித்திருந்தாலும் அவர் பரவலாக அறியப்படவில்லை. பிறகு 2008 ஆம் ஆண்டு அவர் நடித்த உத்தரன் தொடர் அவரது சின்னத்திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் சித்தார்த் ஷுக்லாவிற்கு ஜோடியாக தில் ஸே தில் தக் என்ற தொடரில் நடித்து வருகிறார்.


ரஷ்மி தேசாய் ஜலக் திக்லா ஜா, கத்ரோன் கே கிலாடி உள்ளிட்ட பல நடன மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்டார் ப்ளஸ் டிவியின் நச் பலியே-7 நடன நிகழ்ச்சியில் தன் கணவர் நந்திஷ் சந்துவுடன் கலந்து கொண்டு அதில் இரண்டாம் இடம் வென்றார்.


சொந்த வாழ்க்கை


ரஷ்மி தேசாய் 2012 ஆண்டு தன்னுடன் உத்தரன் தொடரில் நடித்த நந்திஷ் சந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2016 ஆம் ஆண்டு மணமுறிவு செய்தனர்.

வெளி இணைப்புகள்

நடிகை ரஷ்மி தேசாய் – விக்கிப்பீடியா

Actress Rashami Desai – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *