நடிகை சனா சயீத் | Actress Sana Saeed

சனா சயீத் (Sana Saeed) 1988 செப்டம்பர் 22 அன்று பிறந்த பாலிவுட் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். ‘குச் குச் ஹோத்தா ஹை’ (1998) திரைப்படம் “ஹார் தில் ஜோ பியார் கரேகா]]” (2000) மற்றும் “பாதல்”(2000) ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் “பாபுல் கா ஆங்கன் சோட்டே நா” (2008) மற்றும் “லோ ஹோ கய் பூஜா இஸ் கர் கி” (2008) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தோன்றினார். 2012 ஆம் ஆண்டில், கரண் ஜோஹரின் “ஸ்டூடன்ட் ஆப் தி இயர்” திரைப்படத்தில் துணை நடிகையாக சனா நடித்தார், இது வணிக ரீதியான வெற்றி பெற்றது. 2013இல் “நாச் பாலியே” மற்றும் 2015இல் “ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி” உட்பட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினார்.


தொழில்


விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றத் திரைப்படங்களான குச் குச் ஹோத்தா ஹை (1998) திரைப்படம் “ஹார் தில் ஜோ பியார் கரேகா” (2000) மற்றும் “பாதல்”(2000) ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஸ்டார் பிளஸ்ஸில் பிரபலமான குழந்தைகள் நிகழ்ச்சியான “ஃபாக்ஸ் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை இவர் நடத்தினார், அதில் சாதுர் சாச்சியின் பாத்திரத்தில் நடித்தார். “சோனி தொலைக்காட்சி”யின் “பாபுல் கா ஆங்கன் சோட்டே நா” என்ற நிகழ்ச்சி மற்றும் “சாப் தொலைக்காட்சி”யின் “லோ ஹோ கய் பூஜா இஸ் கர் கி” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினார். சனா “ஜலக் திக்லா ஜா” என்ற நடன நிகழ்ச்சி நிகழ்ச்சியில் ஆறாவது இடம் பிடித்தார், நடனமாடும் தன் ஆற்றலுக்காக வெகுவாக புகழப்பட்டார்.

வெளி இணைப்புகள்

நடிகை சனா சயீத் – விக்கிப்பீடியா

Actress Sana Saeed – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *