நடிகை சாரா கான் | Actress Sara Khan

சாரா கான் (Sara Khan) ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார்.. இவர் 2007 இல் மிஸ் போபால் பட்டம் வென்றுள்ளார். மத்தியப் பிரதேச தூர்தர்ஷன் மற்றும் ஈ.டி.வி ஆகியவற்றிற்காக இவர் நடித்துள்ளார். அவர் ஸ்டார் பிளஸ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சப்னா பாபுல் கா பிடாயில் சாதனா என்ற பாத்திரத்தின் மூலம் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.. கான் மற்றும் அங்கத் ஆகியோர் 2008 ஆம் ஆண்டில் ஸ்டார் பரிவார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 2010 இல் பிக் பாஸ் 4 இல் ஒரு போட்டியாளர் ஆவார். அவரது அடுத்த படம் எம்3 – மிட்சம்மர் மிட்நைட் மும்பை, இது 16 மே 2014 அன்று வெளியானது. சாரா தனது படங்களை, வீடியோக்களை மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை இடுகையிட பயன்படுத்தினார். சாரா பாக்கிஸ்தான் தொடர்களில் நடித்துள்ளார்.


தொழில்


கான் தனது தொழில் வாழ்க்கையை ஒரு விளம்பர நடிகையாகத் தொடங்கினார். பிரபலமான ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சப்னா பாபுல் கா பிடாய்யில் அவர் அறிமுகமானார் (2007-2010). 4 ஆண்டுகளாக அங்கத் ஹஸிஜாவுக்கு எதிரான பிரதான முன்னணி கதாபாத்திரத்தில் சாதனாவாக நடித்தார், சாதானா பாத்திரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக 2010 ஜூன் மாதம் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். 2010 இல் சாரா ஜீ டி.வி நிகழ்ச்சியில் ப்ரீட் சீ பண்டி யே டோரி ராம் மிலாயி ஜோடி என்ற தொடரில் (2010-2012) பிரீயல் கோர் என்ற நடிகை நடித்து வந்த மோனா என்ற பாத்திரத்தில் நடித்தார்.


2013 ஆம் ஆண்டில், சாரா லைஃப் ஓகே என்றத் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஜுனூன் -அய்சி நஃப்ரத் தோ கியாஷா இஷ்க் என்ற தொடர் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர், 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பிரபலமான கலர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மூன்று முடிச்சு தொடரில் இச்சாதாரி நாகமாக நடித்தார். வி தி சீரியல், பியார் ட்யூன் க்யா கியா, என்கவுண்டர் மற்றும் பாக்கிஸ்தான் நாடகம் துஜ்சே ஹாய் ராப்டா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.


2015 ஆம் ஆண்டில், & டிவி என்ற தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்றத் தொடரில் பவித்ரா என்ற பாத்திரத்திலும், பின்னர் 2016 ஆம் ஆண்டில், அவர் & டிவி நிகழ்ச்சியில் சௌபாக்யலட்சுமி என்றத் தொடரில் குகூ எனற பாத்திரத்திலும் நடித்தார். 2017 ஆம் ஆண்டில், கான் டில் பாலே ஓபராய் என்றத் தொடரில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார். மேலும் இஷ்காபாஷ் என்ற ஒரு நிகழ்ச்சியில் மோகினியாக நடித்தார். பின்னர் அவர் ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான ஜானா நா தில் சே தூர் என்றத் தொடரில் கங்கனாவாக நடித்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை


சாரா கான் ஒரு சுன்னி முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர் ஆவார். அவருக்கு ஆயா கான் என்ற ஒரு சகோதரி உள்ளார். சாரா 2010 இல் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இஸ்லாமிய திருமண விழாவில் ஷியா முஸ்லீமான அலி மெர்ச்சன்ட், என்ற தொலைகாட்சி நடிகரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார். இவரது நெருங்கிய நண்பர்கள் இத் திருமணத்திற்கு கலர்ஸ் தொலைகாட்சி ₹5 மில்லியன்
(US$65,550) ஊதியம் வழங்கியதாக தெரிவித்தனர். ஆனால் தொலைக்காட்சி நிறுவனம் இதை மறுத்ததுடன், திருமணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியது. சாரா விவாகரத்துக்குப் பிறகு திருமணத்தை ஒரு கனவு என விளித்தார். சச்சார் கா சாம்னா என்ற நிகழ்ச்சியில் மெர்ச்சன்ட் சாரவை தான் திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையில் மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாக கூறினார்.

வெளி இணைப்புகள்

நடிகை சாரா கான் – விக்கிப்பீடியா

Actress Sara Khan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *