நடிகை சிதாராதேவி | Actress Sitara Devi

சிதாராதேவி (Sitara Devi) (8 நவம்பர் 1920 – 25 நவம்பர் 2014) இந்தியாவின் புகழ் பெற்ற கதக் நாட்டியக் கலைஞர் ஆவார். தனது 16வது அகவையில் முதல் கதக் நாட்டியம் அரங்கேற்றம் செய்தவர். கதக் நாட்டியத்தின் இராணி என்ற அடைமொழியுடன் விளங்குபவர்.இரவீந்திரநாத் தாகூரால் நாட்டியப் பேரரசி எனப் பாராட்டு பெற்றவர்.


சிதாராதேவி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கதக் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளர். குறிப்பாக 1967ல் இலண்டன் ஆல்பர்ட் அரச மண்டபத்திலும், 1976ல் நியூயார்க் கமேஜி மண்டபத்திலும் கதக் நடனம் ஆடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.


இளமை


சிதாரா தேவி, வாராணசியின் அந்தணத் தம்பதியரான சுகதேவர் – மத்சயகுமாரிக்கு கொல்கத்தாவில் 8 நவம்பர் 1920ல் தனலெட்சுமி எனும் இயற்பெயருடன் பிறந்தவர். சுகதேவர் நேபாள மன்னரவை நாட்டியக் கலைஞராக இருந்தவர். பின்னர் மீண்டும் வாரணாசியில் தங்கி தன் மகள்களான சிதராதேவியுடன், தாரா மற்றும் அலக்நந்தா ஆகியவர்களுக்கு நாட்டியப் பயிற்சி அளித்தார்.


சிதாராதேவி தனது 16வது அகவையில் மும்பையின் ஒரு மண்டபத்தில் கதக் நாட்டியத்தை முதல் முறையாக அரங்கேற்றம் செய்தார்.


மும்பை இந்தி திரைப்பட இயக்குனரான நிரஞ்சன் சர்மா, சிதாரா தேவிக்கு திரைப்பட நடன யுக்திகளை கற்று கொடுத்தார். உஷா ஹரன் (1940), நாகினா (1951), ரோட்டி (1942), அஞ்சலி (1957), மதர் இந்தியா (1957) முதலிய் இந்தித் திரைப்படங்களில் சிதாராதேவி நாட்டியக் கலைஞராக நடித்தார்.


குடும்பம்


சிதாரா தேவி, பிரதாப் பரோத் என்பவரை மணந்து இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார்.


விருதுகளும், சிறப்புகளும்


  • சங்கீத நாடக அகாதமி விருது, 1969. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி

  • பத்ம ஸ்ரீ, 1973

  • காளிதாஸ் சம்மன் விருது, 1995

  • இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கிய போது, அதை பெற மறுத்துவிட்டார்.

  • இவரது 97வது பிறந்த நாளான 8 நவம்பர் 2017ஐ சிறப்பிக்கு பொருட்டு, கூகுள் டூடிலில் சித்திரம் வெளியிட்டது.

  • பிந்தைய வாழ்க்கை


    சிதாரா தேவி கதக் நாட்டியக் கலைஞராக இருந்த போதும், பரத நாட்டியம், உருசியாவின் பாலே நடனத்தையும் அறிந்தவர். இந்தி திரைப்பட கலைஞர்களுக்கு கதக் நாட்டியப் பயிற்சி வழங்கியவர்.


    சிதாரா தேவி நீண்ட கால நோய் காரணமாக தனது 94வது அகவையில் மறைந்தார்.


    வெளி இணைப்புகள்

    நடிகை சிதாராதேவி – விக்கிப்பீடியா

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *