நடிகை சுல்தானா | Actress Sultana

சுல்தானா (Sultana ) சுல்தானா ரசாக் என்றும் அழைக்கப்படும் இவர், இந்தியாவைச் சேர்ந்த ஆரம்பகால திரைப்பட நடிகையாவார். மேலும், ஊமைத் திரைப்படங்களிலும், பின்னர் பேசும் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குனரான பாத்திமா பேகமின் மகள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த முன்னணி நடிகையானசுபைதா பேகம் இவரது தங்கை.


மரியாதைக்குரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நடிப்பு என்பது பொருத்தமான தொழிலாக கருதப்படாத நேரத்தில் திரைப்படங்களில் நுழைந்த சில பெண்களில் இவர் ஒருவராக இருந்தார். மேற்கு இந்தியாவில் உள்ள குசராத்தின் சூரத் நகரில் பிறந்தார்.சாச்சின் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றாம் நவாப் சிதி இப்ராஹிம் முஹம்மது யாகுத் கான் மற்றும் பாத்திமா பேகம் ஆகியோரின் மகளாவார். இவருக்கு இரண்டு சகோதரிகள், சுபைதா மற்றும் ஷெஷாதி என்ற இருவர் இருந்தனர். நவாபுக்கும் பாத்திமாவுக்கும் இடையில் ஒரு திருமணம் அல்லது ஒப்பந்தம் நடந்ததாக எந்த பதிவும் இல்லை.


தொழில்


ஊமைத் திரைப்பட யுகத்தில் சுல்தானா ஒரு பிரபலமான நடிகையாக இருந்தார். வழக்கமாக காதலி வேடங்களில் நடித்தார். வீர் அபிமன்யு (1922) திரைப்படத்தில் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பல ஊமைப் படங்களில் நடித்தார். பின்னர், இவர் பேசும் திரைப்படங்களிலும் நடித்தார். 1947இல் இந்தியப் பிரிவினையின்போது, இவர் செல்வந்தரான தனது கணவர் சேத் ரசாக் என்பவருடன் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இவரது மகள் ஜமீலா ரசாக்கையும் பாக்கித்தானியப் படங்களில் நடிக்கும்படி இவர் ஊக்கப்படுத்தினார். மேலும் இவர் பாக்கித்தானில் ஹம் ஈத் ஹைன் (1961) என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்தார். இது பிரபல திரைக்கதை எழுத்தாளர் பயாஸ் ஹாஷ்மி எழுதியது. படம் பகுதி வண்ணத்தில் படமாக்கப்பட்டது. இது அந்த நாட்களில் அரிதாக இருந்தது. ஆனால் படம் மோசமாக தோல்வியடைந்தது. பின்னர் சுல்தானா படங்களைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.


சுல்தானாவின் மகள் ஜமீலா ரசாக், பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வகார் ஹசனை மணந்தார். அவர் திரைப்படத் தயாரிப்பாளர் இக்பால் ஷெஷாத்தின் சகோதரர். கராச்சியில் “நேஷனல் ஃபுட்ஸ்” என்ற பெயரில் ஒரு வணிகத்தை நடத்தி வருகிறார்.


வெளி இணைப்புகள்

நடிகை சுல்தானா – விக்கிப்பீடியா

Actress Sultana – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *