நடிகை சுப்ரியா பதக் | Actress Supriya Pathak

சுப்ரியா பதக் கபூர் (Supriya Pathak Kapur) 1961 ஜனவரி 7 அன்று பிறந்த இவர் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாட்கத்தில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகையாவார். கிக்டியில் ஹன்சா பரேக், சஞ்சய் லீலா பன்சாலியின் “தன்கோர் பா” , கோலியான் கி ராஸ்லீலா ராம்-லீலா, மற்றும் மற்றும் அமராவதியில் வைபவ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பிரபலமாக உள்ளார்


ஆரம்ப வாழ்க்கை


சுப்ரியா பதக் குசராத்தி நாடகத்திற்காகவே பிறந்த ஒரு கலைஞர் மற்றும் மூத்த நடிகர் ஆவார், தாயார் தினா பதக் மற்றும் கத்தியவாடி குஜராத்தியான தந்தை, பல்தேவ் பதக் .இவரது தந்தை நடிகர்கள் ராஜேஷ் கன்னா மற்றும் திலிப் குமார் ஆகியோருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தார் . அவருக்கு ரத்னா பதக் என்ற இளைய சகோதரி இருக்கிறார். அவரும் ஒரு நாடக கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். சுப்ரியா மும்பையின் தாதர் பகுதியில் பார்சி காலனியில் வளர்ந்தார் , ஆரம்பக்கல்வியை ஜே. பி. வச்சா பள்ளியில் பயின்ற இவர், நுண்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தின் நலாந்தா நடன ஆராய்ச்சி மையத்தில் பரதநாட்டியம் கற்றார்.


தொழில்


பதக்கின் முதல் நடிப்பு “மைனா கர்ஜாரி” என்ற நாடகத்தின் மூலம் தற்செயலாக தனது தாயின் வழிகாட்டுதலின் கீழ் தினேஷ் தாக்கூருடன் ஆரம்பம் ஆனது. இது பிரஞ்சு நாடக ஆசிரியரான மோலியர்என்பாரது “பிவியோன் கா மதெர்ஸ” என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரமிட் தியேட்டரில் நடத்தப்பட்டது. சசி கபூரின் மனைவியாகப் போகும் ஜெனிபர் கெண்டால் என்பவர் சியாம் பெனகலிடம் இவரை தனது சொந்தத் தயாரிப்பான மகாபாரதத்தின் தழுவலான கல்யுக் (1981) என்றத் திரைப்படத்தில் சுபத்திரை வேடத்திற்கு அறிமுகப்படுத்தினார். இவரது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.


“விஜேதா” (1982), “பஸார்” (1982), “மசூம்” (1983) மற்றும் “மிர்ச் மசாலா” (1985) போன்ற படங்களில் அவர் சிறந்த நடிப்பை வழங்கினார். மேலும், 1982 இல் காந்தி (1982) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார் மற்றும் 1988 இல் சினிமா ஆஃப் பிரான்ஸ் என்ற பிரஞ்சு திரைப்படத்திலும், “பெங்காலி நைட்” மற்றும் “ராக்” (1989) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் சிறிய திரையில் “இதார் உதார்” , “ஏக் மஹால் ஹோ சப்னோ கா” , “கிக்டி” , “பா பஹோ அவுர் பேபி” மற்றும் “சஞ்சான்” போன்ற அவரது பாத்திரங்களால் அறியப்படுகிறார்


1994 இல், தனது கணவர் பங்கஜ் கபூருடன் சேர்ந்து தங்களது சொந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான “கிராஸ் கம்பெனி” ஐத் தொடங்கினார். “மோகன்தாஸ் பி.ஏ.எல்.எல்.பி” என்ற முதல் தொடர் இவர்களது தயாரிக்கப்பட்டது. 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அவர் 2005 இல் “சர்கார்” திரைப்படத்தில் நடித்தார், அதன் தொடர்ச்சியாக 2008 இல் “சர்கார் ராஜ்” என்றத் திரைப்படத்தில் நடித்தார். “வேக் அப் சித்” (2009) என்ற படத்தில் தனது மகனுடன் தலைமுறை இடைவெளியை நிரப்ப கடினமாக முயற்சி செய்கின்ற ஒரு தாயாக நடித்ததற்காக இவர் பாராட்டப்பட்டார். 2013இல் “டாங்கர் பா” , “கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா” ஆகியவை அவரது தொழில் வாழ்க்கையின் நீரோட்டமாக கௌரவமான நடிப்பை தந்துள்ளார் என ஃபிலிம்பேர் பத்திரிகை வெளியிட்டது. 2016 “கேரி ஆன் கேசர்” என்ற தனது குஜராத்தி படத்தில் நடித்துள்ளார்.


தனிப்பட்ட வாழ்க்கை


22 வயதில், பதக் தனது தாயின் நண்பர்களில் ஒருவரின் மகனை மணந்தார். எனினும், ஒரு வருடத்திற்குள் அவர்கள் பிரிந்தனர். 1986 ஆம் ஆண்டில், சாகர் சர்ஹாடியின் “ஆக்லா மாஸ்ஸம்” படத்தின் போது தற்போதைய கணவர் பங்கஜ் கபூரைச் சந்தித்தார், ஆனால் அத்திரைப்படம் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னர் கதக் நடனக் கலைஞரும், நடிகருமான நீலிமா அஸீம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,நடிகர் ஷாஹித் கபூர் அவர்களது மகன் ஆவார். ரத்னா பதக் , நசிருதீன் ஷா , ஷாஹித் கபூர் , இமாத் ஷா மற்றும் விவான் ஷா ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர்.

வெளி இணைப்புகள்

நடிகை சுப்ரியா பதக் – விக்கிப்பீடியா

Actress Supriya Pathak – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *