நடிகை சுரையா | Actress Suraiya

சுரையா ஜமால் ஷேக் (Suraiya Jamaal Sheikh) (15 சூன் 1929 – 31 ஜனவரி 2004), புகழ்பெற்ற இந்தி / இந்துசுத்தானி திரைப்பட நடிகை மற்றும் பாலிவுட்டின் பின்னணிப் பாடகர் ஆவார். 1936 முதல் 1963 வரை அவர் நடிப்புத்துறையில் இருந்தார்.


1936 முதல் 1963 வரையிலான திரை வாழ்க்கையில், சூரையா 67 படங்களில் நடித்து 338 பாடல்களைப் பாடியுள்ளார். 1940 கள் மற்றும் 1950 களில் பாலிவுட்டில் முன்னணி பெண்மணி மற்றும் இந்தி சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராகவும் இருந்தார். பாலிவுட்டில் தனது படங்களுக்குப் பெரும்பாலும் சொந்தமாகத் தானே பாடினார். நய் துனியா (1942) படத்தில் 12 வயதிருக்கும்பொழுது அவர் தனது முதல் திரைப்பாடலைப் பாடினார்.


சூரையா இந்து நடிகரான தேவ் ஆனந்த் உடன் உறவு கொண்டிருந்தார். இவர்களுடனான காதல் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. எனினும், அவரது தாய்வழி பாட்டி அவரை ஒரு இந்துவை திருமணம் செய்ய அனுமதிக்காததால் அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, சூரையா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார், 2004 ஜனவரி 31 ஆம் தேதி 74 வயதில் மாரடைப்பு நோயால் இறந்தார்.


ஆரம்ப வாழ்க்கை


சுரையா சூன் 15, 1929 அன்று லாகூரில் அஜிஸ் ஜமால் ஷேக் மற்றும் முக்தாஸ் ஷேக் ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு ஒரு வயது இருக்கும் பொழுது மும்பைக்கு (முன்னர், பாம்பே என்று அழைக்கப்பட்டது) குடியேறினார். பம்பாய் திரைப்படத் தொழிலில் பத்தொன்பது வயதில் நன்கு அறியப்பட்ட வில்லனான அவர்களது தாய்வழி மாமா எம்.ஜஹூருடன் இணைந்தனர். பாம்பே கோட்டை மாவட்டதில் , தற்போது ஜே.பி. பெட்டிட் உயர்நிலைப் பள்ளி என அறியப்படும் புதிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். சூரையாவின் சிறுவயது நண்பர்களில் ராஜ் கபூர் மற்றும் மதன் மோகன் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் குழந்தைகள் வானொலி நிகழ்ச்சிகளில் அனைத்திந்திய வானொலியில் பாடினார் சுரையா.


தொழில் வாழ்க்கை


சுரையா 1936 ஆம் ஆண்டு மேடம் பேஷன் என்னும் படத்தில் நடிகை நர்கிசுடன் குழந்தை நட்சத்திரமாக, பேபி ராணி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்தில் நர்கிசின் தாய் ஜட்டன் பாய் கதாநாயகியாக நடித்து, பாட்டெழுதி, இசையமத்து, பாடி, படத்தையும் இயக்கினார்.

வெளி இணைப்புகள்

நடிகை சுரையா – விக்கிப்பீடியா

Actress Suraiya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *