சுர்பி ஜியோதி (Surbhi Jyoti) 1988 மே 29 அன்று பிறந்த ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகையாவார். காதலுக்கு சலாம் என்ற தொடரில் நடித்ததற்காக நன்கு அறியப்படுகிறார். தற்போது கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரான நாகினி 3 என்ற தொடரில் “பேலா” என்ற பாத்திரத்தில் தோன்றுகிறார்.
இளமை வாழ்க்கை
ஜியோதி இந்தியாவின் பஞ்சாப் பகுதியிலுள்ள ஜலந்தர் என்ற இடத்தில் பிறந்தார். ஜியோதி தனது ஆரம்பகால கல்வியை “சிவ் ஜோதி பப்ளிக் பள்ளி”யில் பயின்று, பின்னர் “ஹன்ஸ் ராஜ் மஹிலா மகா வித்தியாலயா”வில் பட்டம் பெற்றார். இவர் “அபீஜி நுண்கலைக் கல்லூரி”யில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
தொழில்
ஜியோதி தனது வாழ்க்கையை பிராந்திய நாடக மற்றும் திரைப்படங்களுடன் தொடங்கினார். அவர் ஒரு ரேடியோ ஜாக்கியும் கூட. அவர் பஞ்சாபி மொழித் திரைப்படங்களான “இக் குடி பஞ்சாப் டி]” , “ராவுலா பாய் கயா” , “முண்டே பாட்டியாலா டி” மற்றும் பஞ்சாபி தொலைக்காட்சி தொடர்களான “அக்கிய்யான் டூ டோர் ஜெயன் நா” மற்றும் “கச் தியான் வங்கா” போன்றற்றிலும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டின் முடிவில், 4 லயன்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் “ஜீ தொலைக்காட்சி”யில் ஒளிபரப்பப்பட்ட காதலுக்கு சலாம் என்ற தொடர் இவருக்கு கிடைத்தது. அதில் ஜோயா ஃபாரூகி என்ற பாத்திரத்தில் நடித்தார். அந்த பாத்திரத்தின் சித்தரிப்புக்கு, அவர் GR8 இன் விருதை வென்றார். 2013இல் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அகாடமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஜீ கோல்ட் விருது ஆகியவற்றை பெற்றார். கரண் சிங் குரோவருடன் சிறந்த ஜோடி விருதை வென்றார். 2014இல், காதலுக்கு சலாம் என்ற தொடரை மீண்டும் துவங்கினார், இதில் சனம் செஹர் என்ற இரட்டைப் பாத்திரத்தில் நடித்தார்
ஜூன் 2018 வரை கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரான நாகினி 3 என்ற தொடரில் “பேலா” என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார்.
வெளி இணைப்புகள்
நடிகை சுர்பி ஜியோதி – விக்கிப்பீடியா