உத்தரா பாவ்கர் (Uttara Baokar) இந்திய மேடை, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். முக்யமந்திரியில் பத்மாவதி, மேனா குர்ஜாரியில் மேனா, சேக்சுபியரின் ஒத்தெல்லோவில் டெஸ்டிமோனா, நாடக ஆசிரியர் கிரீஷ் கர்னாட்டின் துக்ளக்கின் தாய், சோட்டே சையத் படே சையத்தில் ஆடல் கணிகை, உம்ராவ் ஜானில் முக்கிய கதாபாத்திரம் போன்ற பல குறிப்பிடத்தக்க நாடகங்களில் இவர் நடித்துள்ளார். 1978ஆம் ஆண்டில், குசும்குமாரின் இந்தி மொழிபெயர்ப்பில், ஜெயவந்த் தால்வியின் சந்தியா சாயா என்ற நாடகத்தை இயக்கியுள்ளார்.
1984 ஆம் ஆண்டில், இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக வழங்கப்படும் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. மராத்தித் திரைப் படமான தோகி (1995), என்ற படத்தில் சதாஷிவ் அம்ராபுர்கர், ரேணுகா தப்தர்தார் ஆகியோருடனும், உத்தராயன் (2005), ஷெவ்ரி (2006), ரெஸ்டாரண்ட் (2006) ஆகிய படங்களில் சோனாலி குல்கர்னியுடன் நடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
புது தில்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து இப்ராஹிம் அல்காசியின் கீழ் நடிப்புப் பயிற்சி பெற்று 1968இல் பட்டம் பெற்றார்.
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகை உத்தரா பாவ்கர் – விக்கிப்பீடியா
Actress Uttara Baokar – Wikipedia