அகில் (Akhil, பிறப்பு: 03 மே 1988) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
2007 ஆவது ஆண்டில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த தமன்னாவும் இப்படத்திலேயே அறிமுகமானார். நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதிற்காகவும் பரிந்துரைக்கப்பட்டார். தொடர்ந்து மீரா நந்தனுடன் இணைந்து நடித்த வால்மீகி திரைப்படமும், சனுசாவுடன் இணைந்து நடித்த நந்தி திரைப்படமும் தோல்வியைப் பெற்றன. 2010 ஆவது ஆண்டில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்களாக நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
2010 ஆவது ஆண்டில் அதிரடி நடிகராக நடித்த நகர்புறம் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2007 | கல்லூரி |
2009 | வால்மீகி |
2011 | நந்தி |
2013 | மாசாணி |
2014 | ரெட்டை வாலு |
கல்கண்டு | |
2016 | அழகுக் குட்டிச் செல்லம் |
இளமி | |
2017 | பகடி ஆட்டம் |
படை வீரன் | |
நகர்புறம் | |
அலைபேசி |