நடிகர் அக்‌ஷய் குமார் | Actor Akshay Kumar

அக்‌ஷய் குமார் ,இந்தி: अक्षय कुमार என்ற ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா 1967ல் செப்டம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். அவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.

1990களில் குமார் ,பாலிவுட்டின் அதிரடி படங்களான கிலாடி (1992),மோஹ்ரா (1994) மற்றும் சப்ஸே படா கிலாடி (1995)ஆகிய படங்களிலும் மற்றும் ‘கிலாடி தொடர்வரிசைகளிலும் நடித்தார், இவர் யே தில்லாகி (1994) மற்றும் டாட்கன் (2000) போன்ற காதல் படங்களிலும், அதேபோல ஏக் ரஸ்தா (2001) போன்ற நாடக படத்திலும் நடித்து தன் திறமையை நிரூபித்துக் காட்டினார். குமார் பிறகு நகைச்சுவைப் படங்களிலும் நடித்தார்..அவரது நகைச்சுவை நடிப்புத்திறனை ஹேரே பேரி (2000),முஜ்ஜேஸே ஷாதி கரோகி ( 2004),கரம் மசாலா (2005) மற்றும் ஜான்-இ-மான் (2006) படங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார்.2008ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அது அவரின் இந்தியத் திரைத்துறைக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்குரிய அங்கீகாரமாகும்.2009ல், அவர் இந்திய அரசாங்கத்தாரால் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

அக்க்ஷய் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஓர் அரசாங்கப் பணியாளர் ஆவார்.இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.குமார் டெல்லி சாந்தினி சௌக் சுற்றுப் புறத்தில் வளர்ந்தார். அதன்பின்னரே அவர் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். அங்கே, அவர் கோலிவாடா அதாவது பஞ்சாபியர்கள் நிறைந்த பகுதியில் குடிபுகுந்தார். அவர் டான்பாஸ்கோ பள்ளியில் கல்வி பயின்றார். பிறகு கல்சா கல்லூரியில் பயின்றார், அங்குதான் அவர் ஜான்பால் சிங்க் உடன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.

பாங்காக்கில் தற்காப்புக் கலைகள் பயின்றவர்,அங்கு ஒரு தலைமைச் சமையல்காரர் ஆகவும் பணிபுரிந்தார். பிறகு மும்பை திரும்பி, தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார், பின்னர் விளம்பரத் தோற்றம் காட்டலிலும் ஈடுபட்டார். இரண்டு மாத விளம்பரத் தோற்றம் காட்டுதலில் ஈடுபட்ட பிறகு, அவருக்கு தயாரிப்பாளர் பிரமோத் சக்ரவர்த்தியின் டீதார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் வழங்கப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

1990

குமார் பாலிவுட்டில் 1991ல் சௌகான்ந் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து, 1992ல் சிலிர்ப்பூட்டும் திரைப்படமான கிலாடி யில் நடித்தார். 1994ல் அதிரடி திரைப்படங்களான மெயின் கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் அவ்ஆண்டிலேயே அதிக மொத்த பணம் வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது.. அதேவருடம் பிற்பாதியில், யாஷ் சோப்ரா அவருடைய காதற்காவியப் படமான யேஹ் தில்லகி யில் அவரை நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தார், அதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு திறமைக்க பாராட்டுதலைப் பெற்றார். இப்படத்தில் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்திருந்தார், இது அவர் முன்பு நடித்திருந்த அதிரடி பாணியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது வேறுபட்டிருந்தது. அதன்விளைவாக அவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பிலிம்ஃபேர் விருதிற்காகவும், ஸ்டார் ஸ்கிரின் விழாவுக்காகவும் முன்மொழியப்பட்டார். அதே ஆண்டு மேலும் குமாருக்கு , சுஹாக் மற்றும் குறைந்த செலவு படமான ஏலன் ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த எல்லா வெற்றிகளும், குமாரை அந்த வருடத்தின் ஒரு வெற்றிகரமான நடிகராக்கியது.

1995ல், அவருடைய வெற்றிபெறாத திரைப்படங்களுக்கிடையில், கிலாடி திரைப்பட வரிசையில் இவர் நடித்த மூன்றாவது படமான சப்ஸே படா கிலாடி வெற்றி பெற்றது.கிலாடி வரிசையில் நான்காவது வெற்றிப்படமாக அமைந்த கிலாடியோன் கா கிலாடி திரைப்படத்தில் ரேகா மற்றும்ரவீணா தாண்டன் இவருக்கு ஜோடியாக நடித்தனர். அது அவ்வருட திரைப்படங்களுள் அதிக மொத்தவசூல் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்தது .

1997ல், யாஷ் சோப்ராவின் வெற்றிப் படமான தில் டு பாகல் ஹை அதில் துணை நடிகராக நடித்தார், அப்படம் அவருக்கு [[ மிகச்சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது]]க்கு முன்மொழிய வைத்தது. அதே வருடம், கிலாடி வரிசையில் ஐந்தாவது திரைப்படமான, மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் கிலாடியில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் மற்ற கிலாடி படங்கள் போல் அல்லாமல், இது வியாபாரரீதியாக தோல்வியைத் தழுவியது. அதேபோல் பின்வரும் வருடங்களில் வெளிவந்த, கிலாடி வரிசை படங்கள் வெற்றி பெறவில்லை. 1999ல், குமார் அவரது படங்களானசாங்கார்ஷ் மற்றும் ஜான்வார் போன்றவற்றில் ஏற்றிருந்த கதாபாத்திரங்களுக்காக விமர்சனப் பாராட்டுதல்கள் பெற்றார். அதில் முதலில் வெளியான சாங்கார்ஷ் வெற்றிபெறவில்லை, பின்னர் வெளியான ஜான்வார் மிகப்பெரும் வெற்றிபெற்றது.

2000

2000ல் நகைச்சுவைத் திரைப்படமான ஹேரா பேரியில் (2000) நடித்தார். அது வியாபாரரீதியில் வெற்றி அடைந்தது, அவர் டாட்கான் என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார், அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது. 2001ல், குமார்ஆஜனாபி திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு மிகுந்த பாராட்டுதலையும் சிறந்த வில்லன் நடிகருக்கான முதல் பிலிம்ஃபேர் விருதையும் பெறவைத்தது. ஆங்கேன் திரைப்படத்தில் குருடர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

ஹேரா பேரி திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ஆவாரா பாகல் தீவானா(2002), முஜ்ஷஸே ஷாதி கரோகி(2004)மற்றும் கரம் மசாலா (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. கரம் மசாலா திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நகைச்சுவைநடிகர் என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ஏக்ரிஷ்டா (2001) ஆங்கன் (2002)பிவாபா (2005) மற்றும் வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம் (2005).

2006ல் ஹேரா பேரிக்குத் பின்தொடர்ச்சியாக வந்த பிர் ஹேரா பேரியில் நடித்தார். அது முன்னது போலவே, பாக்ஸ் ஆபீஸில் மகத்தான வெற்றி கண்டது. பிறகு சல்மான்கானுடன் இசை காதற்காவியமான ஜான் ஈ மான் திரைப்படத்தில் நடித்தார். அது முன்கூட்டி எதிர்பார்க்கப்பட்ட படமாகும், விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற போதிலும், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்ப்பிற்கிணங்க வெற்றி பெறவில்லை. படம் குறைந்த வெற்றிபெற்றிருந்த போதும், அவர் ஏற்றிருந்த வெட்கப்படும், மந்தமான கதாப்பாத்திரம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. அவ்வருடம் வெளிவந்த நகைச்சுவைப் படம் பாகம் பாக் ஒருசிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. அதேவருடம், அவர் ஹீட் 2006 உலகச்சுற்றுப் பயணத்தை தனது சக நடிகர்களான சைப் அலிகான் மற்றும் பிரீத்தி ஜிந்தா,,சுஸ்மிதா சென் மற்றும் செலீனா ஜெயிட்லி ஆகியோருடன் மேற்கொண்டார்.

2007 அவருக்கு மிக வெற்றிதரும் ஆண்டாக அமைந்தது, அது அவரது தொழில்வாழ்க்கையில் ஒரு மகத்தான பெரும் சிறப்பான ஆண்டாக விளங்கியது, விமர்சகர்கள், “இதுவரையில்லாத அளவுக்கு அவரால் மிகச்சிறந்த நான்கு மகத்தான வெற்றிப்படங்கள் அதில் ஒன்று கூடத் தோல்வி தழுவாதது” என்று பாராட்டும்படி அமைந்தது. அவரது முதல் வெளியீடு,நமஸ்தே லண்டன் விமர்சனம் மற்றும் வியாபாரரீதியாக வெற்றியைக் குவித்தது. அவரது நடிப்புத்திறன் மீண்டும் மிகச்சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத்தந்தது. திறனாய்வாளர் டாரான் ஆதர்ஷ் அவரது திறன்பற்றி விமர்சனம் செய்கையில்,”அவர் நிச்சயமாக திரைப்படம் காணச் செல்லும் லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் ஒரு அதிபயங்கரமான நடிப்பை இப்படம் வாயிலாக இடம்பெறச் செய்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அடுத்த இரண்டு படங்களான, ஹேய் பேபீ மற்றும் பூல் புலாய்யா, பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களாயின. அவரது அவ்வாண்டின் கடைசிப்படம் வெல்கம், மிகப்பிரமாதமான உன்னத வெற்றி பெற்றது, அது அவரது ஐந்தாவது தொடர்வெற்றி கண்ட திரைப்படமாகும். அவ்வாண்டு வெளிவந்த அவரின் அனைத்துப்படங்களும் வெளிநாட்டு சந்தையிலே நன்கு விற்பனை ஆனது.

2008ல் முதல்படமான, டாஷன்,, 11 ஆண்டுகளுக்குப்பிறகு யாஷ் சோப்ரா பிலிம்ஸ் பதாகையின் கீழ்வெளிவந்த திரைப்படமாகும். மிகுந்த எதிர்பார்ப்புகள் இருப்பினும் அப்படம் விமர்சனம், வியாபார ரீதிகளில் தோல்வியையேச் சந்தித்தது. அவ்வருடத்தின் இரண்டாம் படம், சிங் ஈஸ் கிங் பாக்ஸ் ஆபீஸில் பெரும்வெற்றி பெற்றது, ஓம் ஷாந்தி ஓம் படத்தின் உலக சாதனையை அது முறியடித்தது. அவரது அடுத்த படம் ஜம்போ என்ற அசைவுப்படம் ஆகும். அதே ஆண்டு குமார் சின்னத்திரையில் வெற்றியார்ந்த நிகழ்ச்சியான ஃபியர் ஃபாக்டர்- க்ஹத்ரோன் கே கில்லாடி தொகுப்பாளராக அறிமுகமானார். 2009ல் இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பதிப்பிலும் தொகுப்பாளராக வந்தார்.

2009ல், குமார் தீபிகா பட்கோனேவுடன் இணைந்து நடித்த நிகில் அத்வானி இயக்கிய வார்னர் பிரதாஸ்-ரோஹன் சிப்பி தயாரிப்பில் வெளிவந்த சாந்தினிசௌக் டு சைனா திரைப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வியைத் தழுவியது. குமாரின் அடுத்த படம் 8×10 டாஸ்வீர் நாகேஷ் குகுனூர் என்பவரின் இயக்கத்தில், வெளிவந்த இப்படம் விமர்சனம் மற்றும் வியாபார ரீதியில் தோல்வி கண்டது. அவரது அடுத்தப்படம் கம்பாக்கத் இஷக். குமாரின் திரைப்படம் ப்ளு 2009 அக்டோபர் 16 ஆம்தேதி வெளிவந்தது. அது பாக்ஸ் ஆபிஸில் ரூ.20 கோடிகள் வசூல் செய்தது. 2009ல் பிரியதர்சன் இயக்கத்தில் டி டன டன் என்ற திரைப்படம் வெளிவந்தது.

2010ல் வெளிவந்த சஜித் கான் இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான , ஹவுஸ் ஃபுல் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் வெளியான வார இறுதியில் மிகப்பெரும் வசூல் சாதனைப்படைத்தது. இந்திய பாக்ஸ் ஆபீசில் இப்படம் மிகபெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான்.

2009 ஏப்ரல் வகோலா காவல்துறையினர் அக்க்ஷய்குமார் மற்றும் டுவிங்கிள் கண்ணா இருவர் மீதும், லக்மே பேஷன் வாரம் நடைபெற்றபோது அக்க்ஷயின் உரப்புக் காற்சட்டை பட்டன்களை டுவிங்கிள் அவிழ்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியக் குற்றவியல் சட்டம் 294 பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

திரைப்பட விவரம்

ஆசியன் பிலிம் விருது சிறந்த நடிகருக்காக.

நடித்த திரைப்படங்கள்

1991 ஸெவ்காந்த
1992 டான்சர்
மிஸ்டர்.பாண்டு
ஷத்ரன்ஜ் கே க்ஹிலடி
தீடர்
1993 அஷான்ட்
தில் கி பாசி
கய்டா கனூன்
வாகத் ஹமாரா ஹாய்
சைனிக்
1994 இலான்
யே தில்லாகி
ஜெய் கிஷேன்
மொஹ்ர
மெயின் கிலாடி டு அனாரி
இக்கே பே இக்க
அமானத்
சுஹாக்
நசர் கி சம்னே
சாக்மி தில்
சாலிம்
ஹம் ஹே பெமிசால்
1995 பாண்டவ்
மைடன் -எ -சுங்
சப்ஸ் பட கிலாடி
1996 து சோர் மெயின் சிபஹி
கில்லடியோன் க கிலாடி
சபூட்
1997 லகூ கே டூ ரங்
இன்சாப்: தி ஃபைனல் ஜஸ்டிஸ்
தாவ
தரசு
மிஸ்டர் மற்றும் மிஸர்ஸ் கிலாடி
தில் தோ பாகல் ஹை
அப்லாடூன்
அங்காரே
பரூது
1999 ஆர்ஜூ
இன்டர்நேஷனல் கிலாடி
சூல்மி
சங்கர்ஷ்
ஜான்வார்
2000 ஹேரா பேரி
டாட்கான்
கிலாடி 420
2001 எக் ரிஷ்டா: தி பாண்ட் ஒப் லவ்
அஜநபீ
2002 ஹான் மைனே பீ ப்யார் கிய
ஆன்கேன்
அவர பாகல் தீவான
ஜானி துஷ்மன்: எக் அநோக்ஹி கஹனி
2003 டாலஸ்: தி ஹன்ட் பெகின்ஸ்…
ஆண்டாஸ்
2004 கர் க்ரிஹாஸ்தி
காகி
போலிஸ் ஃபோர்ஸ்: ஏன் இன்சைடு ஸ்டோரி
ஆன்: மென் அட் வொர்க்
மேரி பிவி க ஜவாப் நகின்
முஜ்சே ஷாதி கரோகி
ஹத்ய: தி மர்டர்
ஐத்ராஸ்
அப் தும்ஹரே ஹவாலே வாடன் சாதியோ
2005 இன்சான்
பேவாபா
வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்
கரம் மசாலா
தீவானே ஹுயே பாகல்
தோஸ்தி : ப்ரண்ட்ஸ் பார் எவர்
2006 பேமிலி- டைஸ் ஒப் ப்ளட்
மேரே ஜீவன் சாதி
ஹும்கோ தீவான கற் கையே
பிர் ஹேரா பேரி
ஜான் ஈ மான்
பாகம் பாக்
2007 நமஸ்தே லண்டன்
ஹே பேபி
பூல் புலாய்யா
ஓம் சாந்தி ஓம்
வெல்கம் (திரைப்படம்)
2008 தஷன்
சிங் ஈஸ் கிங்
ஜம்போ
டில்லி-6
2009 சாந்தினி சொவ்க் டு சீனா
8 X 10 டாஸ்வீர்
கம்பாக்கத் இஷக்
ப்ளூ
டி டன டன்
2010 ஜானே கஹன் சே ஆயி ஹை
ஹவுஸ் ஃபுல்
காட்ட மீட்ட
ஹலோ இந்திய
ஆக்‌ஷன் ரீப்ளே
ஆக்‌ஷன் ரீப்ளே
டீஸ் மார் கான் தப்ரேஸ்
2011 டீஸ் மார் கான் தப்ரேஸ்
தேன்க் யு
கொமகட மறு

வெளி இணைப்புகள்

நடிகர் அக்‌ஷய் குமார் – விக்கிப்பீடியா

Actor Akshay Kumar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *