நடிகர் தாரா சிங் | Actor Dara Singh

தாரா சிங் (பஞ்சாபி: ਦਾਰਾ ਸਿੰਘ; 19 நவம்பர் 1928 – 12 ஜுலை 2012) ஒரு பஞ்சாபி மல்யுத்த வீரராக இருந்து பிறகு நடிகரானவர். 1952-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், இந்தியாவின் ராஜ்ய சபாவிற்கு முதலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆகஸ்ட் 2003 – ஆகஸ்ட் 2009 வரை பணியாற்றினார்.


இவர் ஜுலை 12, 2012-ம் நாள் காலை 7.30 மணிக்கு அவருடைய மும்பை வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்


தாரா சிங், சூரத் சிங் மற்றும் பல்வந்த் கவுர் என்ற் சீக்கியர்களுக்கு மகனாக நவம்பர் 19, 1928-ல் அமிர்தரஸ் மாவட்டத்தில் உள்ள தர்முசக் கிராமத்தில் பிறந்தார்.


மல்யுத்தம்


இவர், 132 கிலோ எடையும், 6’2″ அடி உயரமும் இருந்தார். இவர் ஆரம்பகாலத்தில் கரலாகட்டை என்னும் பெலவானி வகை மல்யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் பல்வேறு அரசர்கள் முன்னிலையிலும், வெளிநாடுகளிலும் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.


விருதுகளும் அங்கீகாரமும்


  • 1947-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றும், மலேசியாவில் நடைபெற்ற போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளார்.

  • 1960 ஆம் ஆண்டு உலக மல்யுத்தப் பட்டம்

  • திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும்


    1952-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் (சாங்க்திள்) நடிக்க ஆரம்பித்தார். 1960 முதல் 69 வரை முன்னனி நடிகராக இருந்த இவர் அதன் பிறகு பிற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 140 திரைப்படங்களில் நடித்துள்ளார். 6 தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இராமாயன் தொடரில் நடித்த அனுமான் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.


    தாரா படப்பிடிப்பகம்


    1978-முதல் பெரிய அளவில் மொஹாலியில் உள்ள தாரா படப்பிடிப்பகத்தின் உரிமையாளரும் இவரே. அனைத்து வசதிகளுமுடைய இப்படப்பிடிப்பகத்தினை சிறிய நகரம் என்றும் கூறுவர்.


    வெளி இணைப்புகள்

    நடிகர் தாரா சிங் – விக்கிப்பீடியா

    Actor Dara Singh – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *