சர் ஓம் பூரி (Sir Om Puri, இந்தி: ओम पुरी, அக்டோபர் 18, 1950 – சனவரி 6, 2017) வழக்கமான இந்தியத் திரைப்படங்களிலும் மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ள ஓர் இந்திய நடிகர். இவர் பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
துவக்க வாழ்க்கை
ஓம் பூரி அரியானாவின் அம்பாலா நகரில் 1950இல் பிறந்தார். புனேயில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டில் தேசிய நாடகப் பள்ளியிலும் பயின்றார். அங்கு இவருடன் உடன் மாணவராக நசிருதீன் ஷா பயின்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகர் ஓம் பூரி – விக்கிப்பீடியா