சாண்டோ எஸ். எஸ். கொக்கோ (இறப்பு: 1944) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 1930களிலும் 40களிலும் சாகசக் காட்சிகளில், வாள் சண்டை உட்பட சண்டைக் காட்சிகளிலும் நடித்த ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர்.
எஸ். எஸ். கொக்கோவின் இயற்பெயர் பசுபலேட்டி சிறீராமுலு நாயுடு என்பதாகும். இவரது தாய்மொழி தெலுங்கு. ஆனாலும் தமிழ் உட்பட பல இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், பர்மிய, சீன, மலேசிய, சிங்கள மொழிகளும் இவருக்குத் தெரிந்திருந்தது. மௌனப் படங்கள் முதல் பின்னர் பேசும் படங்கள் வரை நடித்தவர். பி.ஆர்.லட்சுமிதேவியுடன் டூஃபான் குயின் என்ற இந்திப் படத்திலும் இவர் நடித்திருந்தார். நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நாடகக் குழு இலங்கைக்கும் சென்று நாடகங்களை நடத்தியுள்ளது.
இவர் நடித்த திரைப்படங்கள்
இறுதிக் காலம்
எஸ். எஸ். கொக்கோ சென்னையில் மாம்பலம் பாண்டி பஜாரில் ஒர் அறையில் தனிமையில் வாழ்த்து வந்தார். வறுமை, மது போன்றவற்றால் 1944-ஆம் ஆண்டில் மயிலாப்பூர் குளத்தங்கரை ஒன்றில் இவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.