சிரேயசு தள்பதே (Shreyas Talpade, சிரேயாஸ் தள்படே, மராத்தி: श्रेयस तळपदे, பிறப்பு: சனவரி 27, 1976) மராட்டியிலும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தள்பதே மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
தள்பதே தனது நடிப்பு வாழ்க்கையை மராத்தி தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் தோன்றியதிலிருந்து தொடங்கினார். அத்துடன் அவர் மகாராட்டிரா முழுவதும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் “சீ டிவி சோப் ஓப்பரா வோஃகு” (1997) தொடரில் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார். “டாமினி” என்ற பிரபலமான மராத்தி தொடரில் அவரது பாத்திரமான “தேச்சாசு” மராத்திய நேயர்களிடையே மிகுந்த வரவேற்புடன் இருந்தது. அவர் நாகேசு குகுனூரின் இக்பால் திரைப்படம் வழியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதில் அவர் கிரிக்கெட் வீரராகும் இலட்சியத்தைக் கொண்ட காதுகேளாத இளைஞராக நடித்தார். அந்தத் திரைப்படமும் அவரது நடிப்பும் இரசிகர்களாலும் விமர்சகர்களாலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நாகேசு குகுனூரின் டோர் அவரது அடுத்த படமாக இருந்தது. அதில் அவர் பல மாறுவேடங்களைப் போடும் பெஃகுரூபியா என்ற நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
2006 ஆம் ஆண்டில் அப்னா சப்னா மனி மனி என்ற நகைச்சுவைத் திரைப்படத்திலும் நடித்தார். மேலும் 2007 ஆம் ஆண்டில் அவர் பராஃகு கானின் ஓம் சாந்தி ஓம் என்ற மிகப் பெரிய வெற்றித் திரைப்படத்தில் சாருக்கான் உடன் இணைந்து நடித்தார். அதில் அவர் பப்பு மாஸ்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் நாகேசு குகுனூரின் பாம்பே டூ பேங்காக் என்ற மாறுபட்ட கலாச்சார நகைச்சுவைத் திரைப்படத்தில் தோன்றினார். அவர் சனாய் சௌக்ஃகாடே என்ற மராத்தியத் திரைப்படத்தையும் தயாரித்தார். அப்படம் அதே ஆண்டில் வெளியானது. சியாம் பெனகலின் வெல்கம் டூ சச்சன்பூர் , கோல்மால் ரிட்டன்சு மற்றும் சங்கீத் சிவனின் திகில் படமான கிளிக் ஆகியவை அவரது மிகவும் அண்மைய திரைப்படங்கள் ஆகும்.
விருதுகள்
நடித்த திரைப்படங்கள்
2002 | ஆன்கேன் |
---|---|
2004 | பச்சாத்லேலா |
2005 | இக்பால் |
த ஃகேங்மேன் | |
ரேவதி | |
2006 | ஆய் ஷப்பாத்..! |
அப்னா அப்னா மணி மணி | |
டோர் | |
2007 | ஆக்கர் |
தில் தோஸ்தி எக்ஸட்ரா | |
ஓம் சாந்தி ஓம் | |
2008 | பாம்பே டூ பேங்காக் |
தசாவதார் | |
வெல்கம் டூ சச்சன்பூர் | |
கோல்மால் ரிட்டன்ஸ் | |
சனாய் சௌக்ஃகாடே | |
2009 | பேயிங் கெஸ்ட் |
கூக் யா குரூக் | |
ஆசாயேயின் | |
ஆகே சே ரைட் | |
2010 | கிளிக் (2010 திரைப்படம்) |
சீசன்ஸ் கிரீட்டிங்க்ஸ் (2009 திரைப்படம்) |
வெளி இணைப்புகள்
சிரேயாஸ் தள்படே – விக்கிப்பீடியா
Actor Shreyas Talpade – Wikipedia