நடிகர் சௌபின் ஷாஹிர் | Actor Soubin Shahir

சௌபின் ஷாஹிர்(Soubin Shahir) (12 அக்டோபர் 1983) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனருமாவார். 2003ஆம் ஆண்டில் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பல இயக்குநர்களின் கீழ் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் அன்னையும் ரசூலும் படத்தில் துணை வேடத்தில் நடித்து அறிமுகமானார். பறவா (2017) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில், சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இந்த படமும் ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.


ஆரம்ப கால வாழ்க்கை


இந்தியாவின் கேரளாவில் கோட்டை கொச்சியில் சௌபின் பிறந்து வளர்ந்தார். இவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உள்ளனர். இவரது தந்தை பாபு சாகிர் உதவி இயக்குநராகவும், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளராகவும் இருந்தார். இவர் மணிச்சித்ரதாழ், காட்பாதர், இன் ஹரிஹர் நகர் போன்ற படங்களில் பணியாற்றியவர்.


சௌபின் தனது திரைப்பட வாழ்க்கையை சித்திக்கின் குரோனிக்கல் பேச்சிலர் (2003) மூலம் உதவி இயக்குநராகத் தொடங்கினார். பாசில், சித்திக், இரபி-மெகார்டின், பி. சுகுமார், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல் நீரத் போன்ற இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக இருந்தார். உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, பாசிலின் கையேத்தும் தூரத் (2002) படத்தில் நடிகராக அறிமுகமானார். அல்போன்சு புத்திரனின் பிரேமம் (2015) படத்தில் ஒரு உடற்கல்வி ஆசிரியராக இவர் நடித்தார். இது இவரை ஒரு நடிகராக பிரபலமடைய வழிவகுத்தது. இவரது பிரபலமான வேடங்களில் சார்லி (2015), மகேசிண்ட பிரதிகாரம் (2016), கலி (2016), டார்விண்டே பரிணாமம் (2016), கம்மதிபாதம் (2016), காமாட்டிபாடம் (2016), அனுராகா கரிக்கின் வேள்ளம் (2016), மாயநதி (2017), காம்ரெட் இன் அமெரிக்கா (2017), கும்பளங்கி நைட்ஸ் ஆகியவையும் அடங்கும். இவர் சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்ததற்காக 2018 சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.


தனிப்பட்ட வாழ்க்கை


2017 திசம்பர் 16 அன்று, இவர் ஜாமியா ஜாகீரை மணந்தார். ஜாமியா ஒரு சந்தைப்படுத்தல் நிபுணராக, கொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறார். தம்பதியருக்கு 2019 மே மாதம் ஒரு மகன் பிறந்தார்.


வெளி இணைப்புகள்

நடிகர் சௌபின் ஷாஹிர் – விக்கிப்பீடியா

Actor Soubin Shahir – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *