நடிகர் தி கிரேட் காளீ | Actor The Great Khali

தலீப் சிங் ரானா (பஞ்சாபி: ਦਲੀਪ ਸਿੰਘ ਰਾਨਾ) (பிறந்தது ஆகஸ்ட் 27, 1972), தி க்ரேட் காளீ என்ற புனைப்பெயருடன் திகழும் இவர் ஒரு இந்திய தொழில்முறை மல்யுத்த வீரரும், நடிகரும்ஆவார். மற்றும் 1995 , 1996 ஆம் வருடங்களின் இந்திய ஆணழகன் பட்டத்தை வென்ற முன்னாள் எடை தூக்கும் வீரருமாவார். தற்பொழுது உலக மல்யுத்த கேளிக்கை அமைப்பின் (வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட், டபிள்யூ டபிள்யூ ஈ ) ஸ்மேக்டவுன் வர்த்தகச்சின்னத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளார். தொழில்நிலை மல்யுத்த வீரராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பஞ்சாப் மாநில காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.


சிங் ஒரு காலத்தில் உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரராக டபிள்யூ டபிள்யூ ஈ -ல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தி லாங்கஸ்ட் யார்ட் (2005) மற்றும் கெட் ஸ்மார்ட் (2008) போன்ற படங்களிலும் தோன்றியுள்ளார்.


தொழில் வாழ்க்கை


ஜையன்ட் சிங் என்ற புனைப் பெயரில் அமெரிக்காவின் ஆல் ப்ரோ ரெஸ்லிங் எனும் மல்யுத்த அபிவிருத்தி முகமையில் முதல் தொழில் முறை மல்யுத்த வீரராக பொறுப்பேற்ற அவர், 2000 ம் ஆண்டு அக்டோபர்-ல் டோனி ஜோன்ஸோடு அணி சேர்ந்து வெஸ்ட்சைட் ப்ளேயஸ் அணிக்கு எதிராக ஆடினார்.


நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணி (2001–2002)


2001 ஆகஸ்டில், குழு 2000-ன் அணித்தலைவரான மஸாஹிரோ சோனோவால் ஜையன்ட் சிங்காக நியு ஜப்பான் புரோ ரெஸ்லிங் அணியில்(என் ஜே பி டபிள்யூ) மற்றொரு மாமனிதனாம் ஜையன்ட் சில்வாவோடு கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்டார் சிங். தொழில் நிலை மல்யுத்த வரலாற்றில் சராசரி உயரமாக 7 அடி 2½ அங்குலங்களையும் கூட்டு எடையாக 805 பவுண்டுகளையும் கொண்ட உயரமான இணைக் குழு இவர்கள். இவ்விருவரும் முதன் முதலில் அக்டோபர் மாதம் டோக்கியோ டோம் விளையாட்டரங்கத்தில் அணிசேர்ந்தனர். சோனோவால் கிளப் 7 என்று அடையாளங்காணப்பட்ட இவர்கள் யுடாகா யோஷீ, கென்சோ சுசுகி, ஹிரோஷி டனாஷி மற்றும் வெற்றாறு இனோ ஆகியோரை சம பலமற்ற அணிகளின் போட்டி(ஹேன்டிகேப் மேட்ச்)ஒன்றில் தோற்கடித்தனர். இப்போட்டியில் சில்வா டனாஷி மற்றும் இனோ ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் வீழ்த்தினார். ஜனவரி 2002-ல் ஹிரோயோஷி டென்சானால் தொட்டில் நுணுக்கம்{கிராடில்}மூலம் வீழ்த்தப்பட்டதின் விளைவாக இணை போட்டிகளில் சிங் தனது முதல் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. மார்ச் மாதத்தில் மனாபு நகானிஷி எனும் வீரரால் ஜெர்மன் சூப்ளக்ஸ் பின் எனும் மல்யுத்த நுணுக்கத்தின் மூலம் வீழ்த்தப்பட்டதால் இணைப் போட்டியின் மற்றொரு பெரிய தோல்வியை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்டு மாதம் டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் ஒருநபர் போட்டி ஒன்றில் சில்வாவால் வீழ்த்தப்பட்டதின் நிமித்தம் முக்கியத்துவம் வாய்ந்த தோல்வி ஒன்றை தழுவினார் சிங்.


வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (2006 முதல் இன்று வரை)


2 ஜனவரி 2006 இல் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்(டபிள்யூ டபிள்யூ ஈ ) எனப்படும் உலக மல்யுத்த கேளிக்கை அமைப்புடன் ஒப்பந்தமேற்படுத்திக் கொண்ட முதல் இந்திய தொழில் நிலை மல்யுத்த வீரரானார்; அவ்வமைப்பின் மேம்பாட்டு சம்மேளனமான டீப் சவுத் ரெஸ்லிங்கை கவனித்து வந்த அவர் தனது பூர்வாங்க பெயரிலேயே ஆடிக் கொண்டிருந்தார்.


டைவரி-ஐ தனது மேலாளராகக் கொண்ட, 2006 ம் ஆண்டின் ஏப்ரல் 7 ம் தேதி டபிள்யூ டபிள்யூ ஈ தொலைகாட்சி நிகழ்ச்சியான ஸ்மாக்டவு னில், தனது பூர்வாங்க பெயரில் தி அண்டர்டேக்கருடனான மார்க் ஹென்றியின் ஆட்டத்தில் அறிமுகமான சிங், அண்டர்டேக்கரைத் தாக்கி போட்டியற்ற நிலையை உருவாக்கினார். அதற்கடுத்த வாரம் தி க்ரேட் காளீ என அறிமுகப்படுத்தப்பட்டார். இவ்வாறு இறுதியில் தி அண்டர்டேக்கரை வீழ்த்த தனக்கொரு வீரர் கிடைத்தார் என்று விவரித்தார் டைவரி (முஹம்மது ஹசன் மற்றும் மார்க் ஹென்றியின் தோற்றுவிட்ட முயற்சிகளுக்குப் பிறகு). ஏப்ரல் 21 ஸ்மாக்டவு னின் அறிமுக மல்யுத்த ஆட்டகள நிகழ்ச்சியில் ஃபுனாகியைத் தோற்கடித்தார் சிங்.


மே 12 ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் உலக முன்னணி குத்துச்சண்டை வீரரான ரே மிஸ்டீரியோவுக்கெதிராக ஜான் பிராட்ஷா லேஃபீல்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருந்தேர்வு காளீ ஆவார். மிஸ்டீரியோவை ஒரு ஸ்குவாஷ் போட்டியில் வீழ்த்திய காளீக்கு மிகப் பெரிய சாதகமாக அமைந்தது அவரது இரண்டடி அதிக உயரமும் 250 பவுண்டுகள் அதிக எடையுமே. ஜட்ஜ்மென்ட் டே என்று பெயரிடப்பட்ட குத்துச்சண்டை நிகழ்ச்சியில் டைவரியின் சட்டத்திற்குப் புறம்பான யோசனைகள் சிலவற்றைப் பெற்ற பின்பு, காளீ தி அண்டர்டேக்கரைத் தலையில் உதைத்து தோற்கடித்தார். பின்வந்த பல வாரங்கள் சம பலமற்ற அணி போட்டிகளை வெல்லுதல், சக்தியைப் பிரகடனம் செய்து கொண்டிருந்த அசகாய சூரர்களையெல்லாம் வீழ்த்துதல், தி அண்டர்டேக்கரின் வீழ்த்தும் விதம் மற்றும் வெற்றிச் சாடைகளை எள்ளிநகையாடல் என காளீ தனது அட்டகாசத்தைத் தொடர்ந்தார்.


தி க்ரேட் அமெரிக்கன் பாஷ் எனும் நிகழ்ச்சியில் நடத்தப்படவிருந்த பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் எனும் போட்டியில் பங்கேற்குமாறு தி அண்டர்டேக்கருக்கு சவால் விட்டார் சிங். எனினும் மருத்துவ தகுதியின்மையால் காளீ அப்போட்டியில் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. பிக் ஷோ எனும் மல்யுத்தவீரர் அவருக்குப் பதிலாகக் களமிறங்கி காளீயின் தலையீட்டுக்குப் பின்னும் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. மருத்துவத்தகுதி பெற்றபின் சம்மர்ஸ்லாமில் லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங் மேட்ச் என்றழைக்கப்படும் மயங்க வைக்கும் அடி போட்டியில் கலந்துகொள்ளுமாறு காளீக்கு தி அண்டர்டேக்கரிடமிருந்து சவால் விடப்பட்டது. போட்டி ஸ்மாக்டவுன் நிகழ்ச்சிக்கு மாற்றப்பட்டு சம்மர்ஸ்லாமுக்கு சற்று முன்பே அண்டர்டேக்கரால் வெற்றிவாகை சூடப்பட்டு, காளீக்கு டபிள்யூ டபிள்யூ ஈ -ன் முதல் தீர்மானமான தோல்வியைக் கொடுத்தது.


2006 அக்டோபர் 31 ஒளிபரப்பான ஈ சீ டபிள்யூ ஆன் ஸைஃபீ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்தேறிய ஈ சீ டபிள்யூ அறிமுக ஆட்டத்திற்குப் பிறகு டைவரியும், தி க்ரேட் காளீயும் அதிகாரப்பூர்வமாக ஈ சீ டபிள்யூ வணிகச் சின்னத்துக்கு மாற்றப்பட்டனர். மிக விரைவாக நடத்தப்பட்ட போட்டி ஒன்றில் டைவரி “தி ரிஜக்ட்” என்றழைக்கப்படும் ஷானன் மூர்-ஐத் தோற்கடித்தார். ஒலிவாங்கியில் டைவரியின் பூர்வாங்க கருப்பொருளுடைய இசையுடன் அவரது பெர்சிய உளறல்களும் பிரயோகிக்கப்பட்டன. பின்னர் மூர் தி கிரேட் காளீயால் முரட்டுத்தனமாக இழுக்கப்பட்டார். அடுத்துவந்த பல வாரங்கள் நீடித்த டைவரியின் ஈ சீ டபிள்யூ வெற்றிமுகத்திற்குப் பிறகு, அவரது எதிராளிகள் மீதான தி கிரேட் காளீ யின் சோக் பாம் நுணுக்கம் போட்டி வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருந்தது. டிசம்பர் டு டிஸ்மெம்பர் என்ற மல்யுத்தப் போட்டியில் பந்தயத் தொகையுடனான தொடர் சூதாடுதலுக்குப்(ரோல்-அப்) பிறகு டைவரி டாமி ட்ரீமரை வெற்றி கொண்டார். ஆட்டக்களத்துக்கு வெளியே டைவரியை துரத்திச் சென்றார் ட்ரீமர்; அவ்வேளையில் தி கிரேட் காளீ தோன்றி ட்ரீமரைப் பிடித்து சோக் பாம் நுணுக்கத்தின் வாயிலாக இரும்பினாலான சாய்தளத்தின் மேல் நிறுத்தினார்


ஜனவரி 8 ரா நிகழ்ச்சியில், வர்ணனையாளர் ஜோனதன் கோச்மான் காளீ ராவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்(மேலாளர் டைவரி இல்லாமல்)பிரதான போட்டியில் ஜான் செனாவுக்கெதிராக விளையாட இருப்பதாகவும் அறிவித்தார். செனா அர்மன்டோ எஸ்ட்ராடா பிடித்துக் கொண்டிருந்த இரும்பு நாற்காலியைப் பிடுங்கி காளீயைத் தாக்கியதால் விளையாடும் தகுதி இழந்தார். எனவே காளீ வெற்றி பெற நேர்ந்தது. போட்டி முடிந்த பின் காளீ சோக்ஸ்லாம் நுணுக்கத்தின் வாயிலாக செனாவைத் தரைவிரிப்பு மீது தள்ள செனா உமாகாவின் தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது.


பிப்ரவரி 19 ரா நிகழ்ச்சியின் பொழுது, தி ஹைலாண்டர்ஸின் அணியை எளிதாகத் தோற்கடித்த காளீக்கு இதை விட சிறந்த போட்டி தேவைப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு ஸ்மாக்டவு னில் கேனுக்கும் கிங் பூக்கருக்கும் இடையேயான ஃபால்ஸ் கவுண்ட் எனிவேர், மணி இன் தி பேங்க் தகுதிபெறு போட்டியில் குறுக்கிட்டார் காளீ. கேனின் வெற்றிவாய்ப்பைத் தட்டிப்பறித்தார் காளீ. இச்செயலால் விளைந்த விரோதம் ரெஸ்ஸில்மேனியா 23 க்கு வழிவகுத்தது. ரெஸ்ஸில்மேனியாவில் காளீயின் முதல் தோற்றமானது ரெஸ்ஸில்மேனியா 23 -ல் காளீ பாம் பிரயோகத்தாலான இழிவான தோற்கடிப்புக்குட்பட்ட கேனின் அவல நிலையை உள்ளடக்கியது. போட்டி முடிவுற்றவுடன் காளீ கொக்கியையும் சங்கிலியையும் வைத்து கேனை நெரித்தார்.


ரா வின் ஏப்ரல் 30 நிகழ்ச்சியில் ஷான் மைக்கேல்ஸ், எட்ஜ், மாற்றம் ரேன்டி ஆர்டன்(டபிள்யூ டபிள்யூ ஈ வகையக முதல் மூன்று போட்டியாளர்கள்) ஆகிய மூவரையும் ஆட்டகளத்துக்கு வெளியே தாக்கினார் காளீ. பின்னர் டபிள்யூ டபிள்யூ ஈ முதல்நிலை வீரரான ஜான் செனாவைத் தாக்கிய அவர் செனாவின் பட்டத்தின் மீது தனக்கிருந்த மோகத்தை வெளிக்காட்டினார். அதற்கடுத்த வாரம் ரா வில் ஜட்ஜ்மென்ட் டே நிகழ்ச்சியின் மிகச் சிறந்த போட்டியாளருக்கான தேர்வில் காளீ மைக்கேல்ஸைத் தோற்கடித்தார். முதல் முறையாக அடிபணிதல் முறையில் எஸ் டி எஃப் யு என்றழைக்கப்படும் முடிவுறு வித்தையை செய்த ஜான் செனாவிடம் டேப் அவுட் முறையில் வாபஸ் வாங்கியதால் காளீ தோல்வியடைய நேர்ந்தது. எனினும் ஜட்ஜ்மென்ட் டேயில் காளீ டேப் அவுட் செய்த பொழுது அவரது பாதம் கயிற்றின் அடியில் இருந்தது நடுவரால் கவனிக்கப்படவில்லை. பின் வந்த இரவு ரா நிகழ்ச்சியில் காளீ தனது மொழிபெயர்ப்பாளர் மூலம் நடந்த செயலைக் குறித்த தனது கோபத்தை வெளிக்காட்டினார். ஒன் நைட் ஸ்டாண்ட் நிகழ்ச்சியில் ஆட்டகள பரப்பை விட்டு எஃப் யு செய்யப்பட்டதால் செனாவிடம் காளீ தோற்க நேர்ந்தது. ஒருநபர்ப் போட்டியில் தி கிரேட் காளீ பின் நுணுக்கத்தின் மூலம் வீழ்த்தப்பட்டது அதுவே முதல் முறையாகும்.


2007 டபிள்யூ டபிள்யூ ஈ வரைவின் ஒரு பகுதியாக ரா வின் ஜூன் 11 ஒளிபரப்பில், காளீ ராவிலிருந்து ஸ்மாக்டவு னுக்கு ஸ்மாக்டவுனின் முதல் வரைவுத் தேர்வாக முன்வரையப்பட்டார். ஜூலையில் டேவ் பேடிஸ்டாவோடு சண்டையிட நேர்ந்தது. தி க்ரேட் அமெரிக்கன் பாஷ் நிகழ்ச்சியில் அவரகள் இருவரும் போட்டியிடவிருந்தனர். எனினும் உலக முன்னணி குத்துச்சண்டை வீரருக்கான போட்டியில் எட்ஜ் காயம்பட்டு வெளியேறியதால், அதற்கு பதிலாக ஸ்மாக்டவு னின் ஜூலை 20 நிகழ்ச்சியில் ட்வென்டி மேன் பேட்டில் ராயல் எனும் போட்டி நடத்தப்பட்டது. ஒரே நகர்த்தலில் கேன், பேடிஸ்டா ஆகிய இருவரையுமே வீழ்த்தி காளீ வெற்றி பெற்றார். அதே வாரம் நடந்த க்ரேட் அமெரிக்கன் பாஷ் நிகழ்ச்சியின் ட்ரிபிள் த்ரெட் போட்டியில் காளீ , பேடிஸ்டா மற்றும் கேனை வீழ்த்தி வெற்றி கொண்டார். “காளீ வைஸ் க்ரிப்” என்றழைக்கப்பட்ட கிடுக்கிப்பிடி முடிவுறு வித்தையை அறிமுகப்படுத்திய காளீ அதைப் பிரயோகித்து ரிக் ஃப்ளேர், பேடிஸ்டா மற்றும் கேன் ஆகியோரை வீழ்த்தினார். சம்மர்ஸ்லாமில் இரும்பு நாற்காலி பிரயோகத்தால் ஏற்பட்ட தகுதியிழப்பின் காரணமாக காளீ தோற்றாலும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.


ரே மிஸ்டீரியோவின் “வெற்றிவீரருக்கான போட்டி” ஒன்றின் வெற்றிக்குப்பின், அவருடன் தனது ஆட்டத்தை வைத்துக்கொள்ள விரும்பிய காளீ அவரை தனது முதல் ஆட்ட எதிரியாகக் கருதினார். ஸ்மாக்டவு னின் செப்டம்பர் 7 நிகழ்ச்சியில் நடந்த “ஐ க்விட்” ரக போட்டியில், மிஸ்டீரியோ சேவோ க்வெரெரோவை வீழ்த்திய பின், பேடிஸ்டா அபயமளிக்க வரும் வரை மிஸ்டீரியோ மீதான தனது கிடுக்கிப்பிடியை இறுக்கினார் காளீ . தாக்குதலுக்குப் பின் உலக முன்னணி குத்துச்சண்டை வீரருக்கான பட்டத்தை ஸ்பைன்பஸ்டர் நுணுக்கத்தால் பேடிஸ்டாவிடம் இழந்த காளீ, அப்பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள அன்ஃபர்கிவனில் ரே மிஸ்டீரியோ மற்றும் பேடிஸ்டா ஆகியோரை உள்ளடக்கிய மும்முனைத் தாக்குதல் போட்டியை (ட்ரிபிள் த்ரெட் மேட்ச்)எதிர்கொள்ள வேண்டும் என்று பொது மேலாளர் தியோடர் லாங்தெரிவித்தார். நோ மெர்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற பஞ்சாபி ப்ரிஸன் மேட்ச் என்ற போட்டியில் மறுபோட்டிக்கு பேடிஸ்டாவை சவால் விட்டழைத்த காளீ அவருக்கு முன்பதாக பஞ்சாபி ப்ரிஸனை விட்டு வெளியேறாத காரணத்தால் தோற்றுப்போனார்.


2007 இறுதியில் மற்றும் 2008 ஆரம்பத்தில் காளீ, பின்லேவை உள்ளடக்கிய ஆட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். பொதுவாக ஹார்ன்ஸ்வோகிளை காளீ தாக்க முற்பட, பின்லே அவரைத் தடுக்கும் விதமாக அப்போட்டி அமைக்கப்பட்டிருந்தது. நோ வே அவுட் என்ற நிகழ்ச்சியில் காளீ, எலிமினேஷன் சேம்பர் மேட்ச் என்ற போட்டியில் கலந்து கொண்டு, தி அண்டர்டேக்கரால் தோற்கடிக்கப்பட்டார். ஈ சீ டபிள்யூ வெற்றி வீரர் சேவோ க்வேரரோக்கு எதிராக அன்று மாலையே ஆடும் வாய்ப்பைப் பெற்றுத்தரவல்ல ட்வென்டி – போர் மென் பேட்டில் ராயல் போட்டியை உள்ளடக்கிய ரெஸ்ஸில்மேனியா XXIV என்ற நிகழ்ச்சியில் காளீ பங்குபெற்றார். இப்போட்டியில் கேன் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். காளீ பின்னர் பிக் ஷோவுடனான போட்டியில் ஈடுபட முற்பட்டார். இதன் காரணமாக பேக் லாஷில் நடந்த போட்டி ஒன்றில் பிக் ஷோ வெற்றிபெற்றார்..


ஜூலை மாதம் ட்ரிபிள் ஹெச் , டபிள்யூ டபிள்யூ ஈ வெற்றி வீரரானதன் நிமித்தம் அவருடன் போட்டியிட முற்பட்டார் காளீ. ஸ்மாக்டவு னின் ஜூலை 25 நிகழ்ச்சியில் பிக் ஷோ, ஜெஃப் ஹார்டி, மிஸ்டர்.கென்னெடி, உமாகா, மற்றும் மாண்டல் வோண்டேவியஸ் போர்டர் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டில் ராயலை வென்று ட்ரிபிள் ஹெச்-ஐ சம்மர்ஸ்லாமில் எதிர்கொள்ளும் உரிமையைப் பெற்றார் காளீ. அப்போட்டியில் ட்ரிபிள் ஹெச்சிடம் பெடிக்ரீ நுணுக்கத்தின் வாயிலாகத் தோல்வியைத் தழுவினார் காளீ . டபிள்யூ டபிள்யூ ஈ போட்டியை வெல்ல காளீக்கு மற்றொரு தருணம் அளிக்கப்பட்டது. அன்ஃபர்கிவனில் ஜெஃப் ஹார்டீக்கெதிராக நடந்த போட்டிவெற்றிக்கான போராட்டமே அது. ட்ரிபிள் ஹெச் அப்போட்டிக்கான தரநிர்ணயப் போட்டியில் ஜெப் ஹர்டீக்குதவியாக “சேர் ஷாட்”டைப் பிரயோகிக்க, அப்போட்டியிலிருந்து காளீ விலக நேர்ந்தது.


அக்டோபர் 3 ல், டேர்டெவில் என்றழைக்கப்படும் ஜானீ நாக்ஸ்வைல் www.jackassworld.com என்ற இணையதளத்தில் காளீயை அவரது மொழிபெயர்ப்பாளர் மூலமாக நேர்கண்டு ஒளிபரப்பினார். நாக்ஸ்வைல் காளீயின் “ஆணுறுப்”பைப் பற்றி வினவிய பொழுது காளீ மனம் வருந்தி நேர்காணல் மேஜையை நாக்ஸ்வைல் மேல் சாய்க்கப் போவதாகப் பயமுறுத்தினார். பின்பு காளீ நாக்ஸ்வைலை ரா வின் அக்டோபர் 13 நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்க, அங்கு காளீ மற்றும் டபிள்யூ டபிள்யூ ஈ தேவதை பெத் ஃபீனிக்ஸ் ஆகியோரால் தாக்கப்பட்டார் நாக்ஸ்வைல்.


காளீ “வேடிக்கை விளையாட்டு” மிக்கவராய் தோன்றும்படி மேம்பட்டார்; அவரும் ரஞ்சின் சிங்கும் வாராந்திர நிகழ்ச்சியான “காளீ கிஸ் கேம்” என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தனர். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே அமர்ந்திருக்கும் பகட்டு மகளிரை குறிப்பிட்ட இலக்கின்றி காளீ முத்தமிட அழைக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது.


டால்ஃப் சிக்ளருடன் சண்டையிட முனைந்த போது சிக்ளர் இரும்பு நாற்காலியால் தன்னைத் தாக்கியதால் நேர்ந்த தகுதியிழப்புக் காரணமாக க்ரேட் காளீ வெற்றிபெற நேர்ந்தது. அடுத்துவந்த சில வாரங்கள் காளீ சிக்ளரிடம் கவுண்ட் அவுட் முறையிலும், இரும்பு நாற்காலியால் தான் சிக்ளரைத் தாக்கியதைப் போன்றதொரு தோற்றத்தை அவர் உருவாக்கியதால் தகுதியிழப்பு வாயிலாகவும் தோற்க நேர்ந்தது. தி பாஷ் நிகழ்ச்சியில் கேன் திரும்பி வந்து காளீயைத் தாக்கியபோது பின்ஃபால் முறை மூலம் சிக்ளரிடம் தோற்றுப் போனார். சில காலத்துக்குப் பின், கதையம்சத்தின் சூழலில் காளீயின் குத்துச்சண்டை தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ரஞ்சின் சிங் காளீயின் சகோதரர் என்பது தெரியவந்தது. கேனுடனான சண்டை முனைப்பு சம்மர்ஸ்லாம் போட்டிக்கு வழிவகுத்தது. இதில் காளீயின் கவனத்தைக் கலைப்பதற்காக சிங்கை உபயோகித்தப் பின், ரன்னிங் டி டி ட்டி என்ற நுணுக்கத்தை இயற்றி கேன் காளீயைத் தோற்கடித்தார். பின்னர் முதன்முதலில் வந்த டபிள்யூ டபிள்யூ ஈ முறிவுப் புள்ளி நிகழ்ச்சியில்(டபிள்யூ டபிள்யூ ஈ பிரேக்கிங் பாய்ண்ட் எவென்ட்) காளீ மீண்டும் கேனிடம் தோற்றுப்போனார்.


காளீக்கு முழங்கால் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால் போட்டி ஒன்றில் கேன் காளீயை வட்டஅடிகள்(ரிங் ஸ்டெப்ஸ்) முறையின் மூலம் தாக்க காளீக்கு சிறிது காலஅவகாசம் கிடைக்க வழிவகுத்தது. காயமடைந்திருக்கும் பொழுது ரஞ்சின் சிங், ஆஸீ ஆஸ்பர்ன் மற்றும் அவரது மனைவி ஷேரன் ஆகியோரோடு நவம்பர் 2 ரா நிகழ்ச்சியில் “ரா’ஸ் காட் டேலன்ட்” என்ற பகுதியின் நடுவராகத் திடீரெனத் தோன்றினார்.


மல்யுத்தத்தில்


 • முடிவுறுநிலை நடவடிக்கைகள்


 • ப்ரெயின் சாப் – 2006; 2007 முதல் இன்று வரை வாடிக்கையான நடவடிக்கையாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
  காளீ வைஸ் க்ரிப் (டூ ஹேண்டட் ஸ்கல் வைஸ்) – 2007 இறுதியில், 2008–இன்று வரை
  பஞ்சாபி ப்ளஞ்ச் / காளீ பாம் (டூ ஹேண்டட் சோக்ஸ்லாம் )

 • ப்ரெயின் சாப் – 2006; 2007 முதல் இன்று வரை வாடிக்கையான நடவடிக்கையாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

 • காளீ வைஸ் க்ரிப் (டூ ஹேண்டட் ஸ்கல் வைஸ்) – 2007 இறுதியில், 2008–இன்று வரை

 • பஞ்சாபி ப்ளஞ்ச் / காளீ பாம் (டூ ஹேண்டட் சோக்ஸ்லாம் )

 • தனித்துவம் வாய்ந்த உத்திகள்


 • பிக் பூட்
  க்ளோத்ஸ்லைன்
  டிலேய்ட் ஸ்கூப் ஸ்லாம்
  ஹெட் பட்
  சோக்ஸ்லாம்
  லெக் டிராப்
  நெர்வ் ஹோல்ட்
  ஓரங்கட்டப்பட்ட எதிராளிக்கு கொடுக்கப்படும் பின் முழங்கைத் தொடர் அடிகள்
  ஷார்ட்–ஆர்ம் க்ளோத்ஸ்லைன்
  முன்னே வரும் எதிராளிக்குக் கொடுக்கப்படும் சுழற்று உதை

 • பிக் பூட்

 • க்ளோத்ஸ்லைன்

 • டிலேய்ட் ஸ்கூப் ஸ்லாம்

 • ஹெட் பட்

 • சோக்ஸ்லாம்

 • லெக் டிராப்

 • நெர்வ் ஹோல்ட்

 • ஓரங்கட்டப்பட்ட எதிராளிக்கு கொடுக்கப்படும் பின் முழங்கைத் தொடர் அடிகள்

 • ஷார்ட்–ஆர்ம் க்ளோத்ஸ்லைன்

 • முன்னே வரும் எதிராளிக்குக் கொடுக்கப்படும் சுழற்று உதை

 • மேலாளர்கள்
  மஸாஹிரோ சோனோ
  டைவரி
  ரஞ்சின் சிங்

 • மஸாஹிரோ சோனோ

 • டைவரி

 • ரஞ்சின் சிங்

 • புனைப்பெயர்கள்
  “தி பஞ்சாபி நைட்மேர்”
  “தி பஞ்சாபி ப்ளேபாய்” (ரஞ்சின் சிங்கால் அளிக்கப்பட்டது)
  தி பிரின்ஸ் ஆஃப் தி லேண்ட் ஆஃப் பைவ் ரிவர்ஸ் (2009-)

 • “தி பஞ்சாபி நைட்மேர்”

 • “தி பஞ்சாபி ப்ளேபாய்” (ரஞ்சின் சிங்கால் அளிக்கப்பட்டது)
  தி பிரின்ஸ் ஆஃப் தி லேண்ட் ஆஃப் பைவ் ரிவர்ஸ் (2009-)

 • தி பிரின்ஸ் ஆஃப் தி லேண்ட் ஆஃப் பைவ் ரிவர்ஸ் (2009-)

 • நுழைவு கருப்பொருட்கள்
  “டா.ங்கர்”,ஜிம் ஜான்ஸ்டன் (2006–2008)
  “லேண்ட் ஆஃப் பைவ் ரிவர்ஸ்” பஞ்சாபி எம் சி யால் நிகழ்த்தப்பட்டது.(2008–தற்பொழுது வரை)

 • “டா.ங்கர்”,ஜிம் ஜான்ஸ்டன் (2006–2008)

 • “லேண்ட் ஆஃப் பைவ் ரிவர்ஸ்” பஞ்சாபி எம் சி யால் நிகழ்த்தப்பட்டது.(2008–தற்பொழுது வரை)

 • வெற்றிகள் மாறும் சாதனைகள்


 • நியூ ஜப்பான் ப்ரோ ரெஸ்லிங்
  டீசன் ஹால் சிக்ஸ்-மேன் டூர்னமன்ட் (2002) –மஸாஹிரோ சோனோ மற்றும் ஜையன்ட் சில்வா வுடன்

 • டீசன் ஹால் சிக்ஸ்-மேன் டூர்னமன்ட் (2002) –மஸாஹிரோ சோனோ மற்றும் ஜையன்ட் சில்வா வுடன்

 • ப்ரோ ரெஸ்லிங் இல்லஸ்ட்ரேடட்
  பி டபிள்யூ ஐ 2008-ன், முதல் 500 ஒருநபரணி மல்யுத்த வீரர்களுக்கான போட்டியான பி டபிள்யூ ஐ 500 காளீக்கு #83 ம் இடமளித்தது.

 • பி டபிள்யூ ஐ 2008-ன், முதல் 500 ஒருநபரணி மல்யுத்த வீரர்களுக்கான போட்டியான பி டபிள்யூ ஐ 500 காளீக்கு #83 ம் இடமளித்தது.

 • வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மன்ட்
  உலக குத்துச்சண்டை வகையகம் (1 முறை)
  ஸ்லாமி அவார்ட் பார் “டாம்

 • உலக குத்துச்சண்டை வகையகம் (1 முறை)

 • ஸ்லாமி அவார்ட் பார் “டாம்

 • !” மொமென்ட் ஆஃப் தி இயர் (2008)


 • ரெஸ்லிங் அப்சர்வர் நியூஸ்லெட்டர் அவார்ட்ஸ்
  மோஸ்ட் ஓவர்ரேடட் (2007)
  வொர்ஸ்ட் ஜிம்மிக் (2008)

 • மோஸ்ட் ஓவர்ரேடட் (2007)

 • வொர்ஸ்ட் ஜிம்மிக் (2008)

 • பட பட்டியல்


 • தி லாங்கஸ்ட் யார்ட் (2005)ல் டர்லியாக

 • கெட் ஸ்மார்ட் (2008)ல் தலீப்பாக

 • பிரையன் ஆங் நிகழ்வு


  மே 28, 2001 ல் பிரையன் ஆங், சிங்கிடமிருந்து பெற்ற ஃபிளாப்ஜேக்கினால் உயிரிழக்க நேர்ந்தது. ஆங் அப்போட்டித்தொடரில் முன்னதாக ஒரு உட்காயத்துக்கு உள்ளானார். ஆனால் காயங்களைத் தடுக்கத் தவறியதாக மட்டும் கூறி சூழ்நிலையின் கடுமையை குறைத்து எடைபோட்ட பயிற்சியாளர்கள் பயிற்சியைத் தொடரும்படி கூறினர். மேலும் ஆங் பாதுகாப்புக் கவசங்களையோ மேற்பார்வையையோ ஆல் ப்ரோ ரெஸ்லிங் (ஏ பி டபிள்யூ )நிர்வாகிகளிடமிருந்து பெறவில்லை என்று நிரூபிக்கப்பட்டது. இரண்டாவதாக அவர் பெற்ற உட்காயம் அவரது உயிருக்கு ஆபத்தானதாக முடிந்தது. கவனக்குறைவாக சிங் அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதால் ஆங்கின் குடும்பம் ஏ பி டபிள்யூ -க்கெதிராக வழக்கு தொடர்ந்தனர். ஒரு நாளுக்கும் குறைவான காலத்தை எடுத்துக்கொண்ட ஆழ்ந்த ஆய்வின் முடிவில், அவர்கள் பொறுப்பற்றதன்மைக்கு இலக்கானவர்கள் என கண்டறியப்பட்டு நஷ்டஈடாக ஆங்கின் குடும்பத்துக்கு $1.3 மில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டது.


  சொந்த வாழ்க்கை


  சிங் ஜ்வாலா ராமுக்கும் (தந்தை)தன்டி தேவிக்கும்(தாய்)பிறந்தவர்; இந்தர் சிங் . மற்றும் மங்கத் சிங் ரானா . ஆகியோரை உள்ளடக்கிய ஏழு உடன்பிறந்தவர்களுள் ஒருவர் அவர். பிப்ரவரி 27, 2002-ல் சிங் ஹர்மீந்தர் கவுரை மணந்தார். அவர் தான் புகையிலையையும் மதுவையும் வெறுப்பதாகக் கூறுகிறார்.


  அவர் தனது புனைப்பெயரான “தி கிரேட் காளீ” தெய்வீக சக்தியை உள்ளடக்கிய இந்து பெண் தெய்வமான காளியிடமிருந்தே உருவானது என்று கூறுகிறார். அவரது பெற்றோர் சராசரி உயரமுடையவர்களாகவே இருந்த போதிலும் அவரது தாத்தா 6 அடி 6 அங்குல உயரமுடையவராக இருந்தார்.


  சிங்கின் பயிற்சி அட்டவணை நாள்தோறும் காலையும் மாலையும் இரண்டு மணிநேர எடைப்பயிற்சியை உள்ளடக்கியது. அவர் தனது உடல்பருமனைக் கட்டுக்குள் வைக்க கடுமையான தினசரி உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது: ஒரு கேலன் பால், ஐந்து கோழிகள் மற்றும் இரண்டு டஜன் முட்டைகள், இவற்றுடன் சப்பாத்திகள், பழரசம் மற்றும் பழங்கள் ஆகியனவைகளைக் கொண்டது அது.


  வெளி இணைப்புகள்

  நடிகர் தி கிரேட் காளீ – விக்கிப்பீடியா

  Actor The Great Khali – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *