பிந்து (Bindu) 1951 ஏப்ரல் 17 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய நடிகையாவார். 1970 களில் பிரபலமானவர், பல விருதுகளுக்கான பரிந்துரைகளை பெற்றார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும், “காடி படாங்”(1970) படத்தில் “சப்னம்” என்ற அவரது பாத்திரத்திற்காக மிகவும் நினைவுபடுத்தப்பட்டவர்
ஆரம்ப வாழ்க்கை
குசராத்துமாநிலம் வல்சாடு மாவட்டம், ஹனுமான் பக்தா என்ற சிறு கிராமத்தில் திரைப்பட தயாரிப்பாளர் நானுபாய் தேசாய் மற்றும் அவரது மனைவி ஜோத்ஸனா ஆகியோருக்கு பிந்து பிறந்தார். பிந்துவின் வெற்றிக்கான பாதை எளிதான ஒன்று அல்ல. 13 வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். மூத்த மகளாக இருந்ததால், பணத்தை சம்பாதிப்பது இவர் மேல் சுமத்தப்பட்டது, குடும்ப பாரம் இவரது தோள்களில் விழுந்தது. பிந்து கல்லூரி பட்டதாரி மானவியாக “அன்பத்” (1962) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அப்போது அவர் 11 வயதில் இருந்தார்.
தொழில்
1969 இல் பிந்து நடித்த “இட்டஃபக்” மற்றும் “தொ ரஸ்த்” ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது. இங்கிருந்து அவர் சக்தி சாமந்தாவின் “காடி பத்தாங்” (1970) படத்தில் தனது வெற்றி கதையை எழுதினார், அதில் “மேரா நாம் சப்னம்” என்ற பாடலுக்கு இவர் நடனமாடியது இன்றும் கூட இது ஒரு சிறப்பம்சமாகும்
சொந்த வாழ்க்கை
பிந்து அவரது குழந்தை பருவ அன்பானதாகும், இவர் தனது அடுத்த அண்டைவீட்டுக்காரரான் சம்பக்லால் ஜவேரியை மணந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தற்போது அவர் புனே கோர்காவன் பார்க் என்ற இடத்தில் வசிக்கிறார். அவர் டெர்பியில் உறுப்பினராக உள்ளார், மேலும் புனேயில் ரேஸ் கோட்டத்தில் அடிக்கடி காணப்பட்டார்.