தீப்தி நவால் (Deepti Naval) 1952 பிப்ரவரி3இல் பிறந்துள்ள இந்திய நடிகை, இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைத்துரையில் தீவிரப் பணியாற்றியுள்ளார். இவ் நடிகை , இயக்குனர், மற்றும் எழுத்தாளரும் ஆவார். கலை சினிமாவின் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். இந்தியாவில் உள்ள பெண்களின் மாறிவரும் பாத்திரங்களை வலியுறுத்தினார், அவரின் முக்கிய மற்றும் நெருங்கிய வாழ்க்கை கதாப்பாத்திரங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். அவருக்கு ஓவியம் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றிலும் விருப்பம் உள்ளது.
ஆரம்ப வாழ்க்கை
பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரசு என்ற ஊரில் நவால் பிறந்துள்ளார் , நியூயார்க்கின் சிட்டி பல்கலை கழகத்தில் அவரது தந்தைக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது, எனவே இவரது குடும்பம் நியூயார்க் நகரம் நகருக்கு நகர்ந்தது. அங்கு அவர் ஹன்டர் கல்லூரியில் நுண்கலை பயின்றார்.
நடிப்புத் தொழில்
நவால் 1978இல் இயக்குனர் சியாம் பெனகல் இயக்கிய “ஜுனூன்” திரைப்படத்தில் அறிமுகமானார். இரண்டு வருடத்திற்கு பிறகு, “ஏக் பார் பீர்” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.. 1980களில் சுமிதா பட்டீல் மற்றும் சபனா ஆசுமி ஆகியோரது காலத்தில் இவரும் திரைத்துறையில் நடித்துள்ளார். மேலும், “கம்லா”(1984) மற்றும் “அன்காகே” (1985) போன்ற படங்களில் தோன்றியுள்ளார்.
பிற பணிகள்
மனிஷா கொய்ராலா மற்றும் ரஜித் கபூர் இணைந்து நடித்த “தோ பைசே தூப்” மற்றும் சார் அனே கி பாரிஷ்” என்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். நியூ யார்க் இந்திய திரைப்படத் திருவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை. அவர் வலுவான பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரான “தோடா எஸ் ஆஸ்மான்” எழுதி மற்றும் இயக்கியுள்ளார், மற்றும் ” த பாத் லெஸ் டிராவெல்டு” என்ற ஒரு பயண நிகழ்ச்சியை தயாரித்தார்.
சொந்த வாழ்க்கை
நவால் திரைப்படத் தயாரிப்பாளரான பிரகாஷ் ஜாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் திஷா என்ற ஒரு தத்தெடுத்தனர்.