நடிகை பிரீடா பின்டோ | Actress Freida Pinto

பிரீடா பின்டோ (Freida Pinto, பிறப்பு: அக்டோபர் 18, 1984) ஒரு இந்திய நடிகையும் தொழில்முறை மாடலும் ஆவார், இவர் தனது அறிமுகப் படமான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் லத்திகா என்னும் பாத்திரத்தில் நடித்தது சிறந்த முறையில் பிரபலமுற்றது, இந்த படம் 2009 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான அகாடமி விருதினைப் பெற்றது. நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதை பின்டோ வென்றார், அத்துடன் துணை பாத்திரத்தின் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.


சொந்த வாழ்க்கை மற்றும் பின்புலம்


ஃபிரிடா பின்டோ மும்பையில் (கோரெகாவ்) செயின்ட் யுனிவர்சல் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருக்கும் சில்வியா பின்டோ மற்றும் பேங்க் ஆஃப் பரோடாவில் மூத்த வங்கி கிளை மேலாளராக பணிபுரியும் பிரெடரிக் பின்டோ தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். ஃபிரிடா பின்டோவின் தந்தை நீருடேவைச் சேர்ந்தவர், தாய் தேரேபெயிலைச் சேர்ந்தவர், இரண்டுமே மங்களூரில் இருக்கும் நகரங்கள். எனவே ஃபிரிடாவும் ஒரு மங்களூர்வாசி. “தான் முழுமையாக ஒரு இந்தியர்” என்று பின்டோ ஒரு நேர்காணலில் கூறினார், அவரது குடும்பம் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தது, அவருடைய முன்னோர்களில் சிலர் அநேகமாக போர்ச்சுகீசிய பின்னணியைக் கொண்டிருந்திருக்கலாம், அதிலிருந்து பின்டோ என்னும் அவரது குடும்ப பெயரின் காரணத்தை விளங்கிக் கொள்ளலாம்.


அவரது மூத்த சகோதரியான ஷரோன் பின்டோ என்டிடிவி செய்தி தொலைக்காட்சியில் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.


மலாத்தில் இருக்கும் கார்மல் ஆஃப் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்த பின்டோ, ஆங்கில இலக்கிய த்தில் தனது இளங்கலை (BA) பட்டத்தை மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் முடித்தார். அவர் இப்போது மும்பையின் புறநகரான, மலாத்தில் வசிக்கிறார்.


இந்திய மரபு நடனத்தின் பல்வேறு வகைகள் மற்றும் சல்சா நடனத்திலும் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.


முன்னர் அவரது விளம்பர நிர்வாகியான ரோஹன் ஆன்டோவுடன் அவருக்கு நிச்சயமாகி இருந்தது, ஆனால் 2009 ஆரம்பத்தில் அந்த நிச்சயத்தை ஃபிரிடா ரத்து செய்து விட்டார். அவர் இப்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் உடன் நடித்த தேவ் படேல் உடன் டேட்டிங் செய்து வருகிறார், தேவ் படேல் இவரைக் காட்டிலும் ஆறு வயது இளையவர். பீபிள் மேகசின் வழங்கிய மிகவும் அழகானவர்கள் பட்டியலிலும் இவருக்கு இடம் கிடைத்தது.


தொழில்வாழ்க்கை


ஸ்லம்டாக் மில்லியனரில் நடிப்பதற்கு முன்னதாக, 2006-08 காலத்தில் ஃபுல் சர்க்கிள் என்னும் சர்வதேச பயண சுற்றுலா நிகழ்ச்சியை ஜீ இன்டர்நேஷனல் ஆசியா பசிபிக் தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ரிக்லீ’ஸ் சூயிங் கம், ஸ்கோடா, வோடஃபோன் இந்தியா, ஏர்டெல், மற்றும் டிபியர்ஸ் ஆகிய தயாரிப்புகளின் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் அச்சு விளம்பரங்களிலும் பின்டோ தோன்றினார். நான்கு வருடங்கள் மாடலிங் செய்த பின்டோ ரன்வே நிகழ்ச்சிகளிலும் பத்திரிகை அட்டைப்படங்களிலும் தோன்றினார். அந்தேரியில் இருக்கும் தி பேரி ஜான்’ஸ் ஆக்டிங் ஸ்டுடியோவில் நடிப்பு பயின்ற அவருக்கு பேரி ஜான் பயிற்சியளித்தார். ஆறு மாத தேர்வுஒத்திகைகளின் பின், ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கான தேர்வு ஒத்திகைக்கு அவர் அழைப்பு பெற்றார். டேனி பாயிலின் தேர்வு ஒத்திகையில் பங்குபெற்ற அவர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்று கடைசியில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பின்டோ தனது திரைப்பட அறிமுகத்தை 2008 இல் துவக்கினார். தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் மும்பை சேரிகளில் இருந்து வந்த ஒரு இளைஞன் மக்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சி முன்னேறுவதையும், அது போட்டி நடத்துபவர் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளறுவதையும் ஸ்லம்டாக் மில்லியனர் கதை சொல்கிறது. இந்த படத்தில், பின்டோ லத்திகா என்னும் பாத்திரத்தை ஏற்றிருந்தார், இந்த பெண் மீது தான் ஜமால் (தேவ் படேல்) காதல் கொள்கிறான். 2008 டொரோன்டோ சர்வதேச சினிமா படவிழாவில், இந்த படம் காடிலாக் பீபிள்’ஸ் சாய்ஸ் விருதைப் பெற்றது. 2009 கோல்டன் குளோப் விருதுகள் விழாவில், இந்த படம் நான்கு விருதுகளை வென்றது. பின்டோவும் 2009 BAFTA விருதுகள் விழாவில் “துணைப் பாத்திரத்திற்கான சிறந்த நடிகை” விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார், அத்துடன் ஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த பிறருடன் பின்டோவுக்கும் நகரும் படத்தில் மிகச் சிறந்த நடிப்பிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது கிடைத்தது.


ஜூலியன் ஸ்க்னபெல் இயக்கும் பிரெஞ்சு-இஸ்ரேலிய படமான மிரல் என்னும் படைப்பில் பின்டோ நடித்து முடித்திருக்கிறார். லண்டனில் உருவாகவிருக்கும் உடி ஆலனின் அடுத்த படத்தில் பின்டோ நடிக்கிறார், இதில் ஆன்டனியோ பான்டரஸ், ஜோஷ் ப்ரோலின், அந்தோனி ஹாப்கின்ஸ், அனுபம் கெர் மற்றும் நயோமி வாட்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.


13 மே 2009 அன்று பின்டோ எல்’ஓரிலின் புதிய ‘தூதராக’ இருப்பதாக அறிவிக்கப்பட்டது, முன்னதாக அவர் அதன் போட்டி அழகுசாதன தயாரிப்பு நிறுவனமான எஸ்டீ லாடர் உடன் “ஆறு இலக்க தொகை ஒப்பந்தத்தில்” கையெழுத்திட இருப்பதாக வதந்திகள் உலவின.

நடித்த திரைப்படங்கள்

2008 ஸ்லம்டாக் மில்லியனர்
2010 மிரல்
2010 பெயரிடப்படாத உடி ஆலனின் லண்டன் திரைப்படம்

வெளி இணைப்புகள்

நடிகை பிரீடா பின்டோ – விக்கிப்பீடியா

Actress Freida Pinto – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *