நடிகை லலிதா பவார் | Actress Lalita Pawar

லலிதா பவார் (Lalita Pawar) (18 ஏப்ரல் 1916 – 24 பிப்ரவரி 1998) இந்தி, மராத்தி மற்றும் குசராத்து திரைப்படங்களில் 700 படங்களுக்கும் மேலாக குணசித்திர வேடங்களில் நடித்த நடிகையாவார். இவருடைய படங்களில் பாலாஜி பந்தேர்க்கரின் “நேதாஜி பால்க்கர்” (1938), நியூ ஹனா பிக்சர்ஸின், “சான்ட் தாமாஜி”, நவயுக சித்ரபதியின் “அம்ரிட்” மற்றும் சய்யா பிலிம்ஸ்ன் “கோரா கும்பார்” போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. அவரது மறக்கமுடியாத திரைக் கதாப்பாத்திரங்கள் “அனாரி” ‘(1959),” “420” மற்றும் “திரு & திருமதி 55” ஆகியவற்றிலும் , ராமானந்த் சாகரின் தொலைக்காட்சி காவிய தொடரான ராமாயனில் “மந்தரை” வேடத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.


சுயசரிதை


அம்பா லக்‌ஷ்மண் ராவ் சாகுன் என்ற பெயர் கொண்ட பவார் 1916 ஏப்ரல் 18 அன்று நாசிக்கின் யியோலாவில் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை லக்‌ஷ்மண் ராவ் சாகுன் ஒரு பணக்கார பட்டு மற்றும் பருத்தி துணிகள் விற்கும் ஒரு வணிகராவார். “ராஜா ஹரிசந்திரா ” (1928) என்ற திரைப்படத்தில் தனது ஒன்பது வயதில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார், பின்னர் பேசாத திரைப்படங்கள் வந்த 1940 இன் காலகட்டங்களில் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து அவரது இறப்பு வரை எழுபது ஆண்டுகள் குணசித்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். 1942 ல் கைலாஷ் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகவும் நடித்தும் இருந்தார். மேலும், 1938 ல் “துனியா கியா ஹே” என்ற திரைப்படத்தை தயாரித்தார்.


1942 ஆம் ஆண்டில், ‘ஜங்-இ-ஆசாதி’ படத்தில் ஒரு காட்சியின் நடிகர் பகவான் தாதாவுடன் நடிக்கும்போது அவர் தற்செயலாக மிகவும் கடினமாகக் அறைந்து விடுகிறார். இதனால் இவருக்கு முகத்தில் ஒரு வெட்டு காயம் ஏற்பட்டும், இடது கண் நரம்பும் பாதிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சிகிச்சை பெற்று திரும்பிய இவர் முன்னணி கதாப்பாத்திரங்களை கைவிட்டு, குணசித்திர வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்து பெரும் புகழை பெற்றத்தந்தது. இவர் குறிப்பாக மருமகளைத் துன்பப்படுத்தும் மாமியார் வேடங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார். மேலும் இருசிகேசு முகர்ச்சி இயக்கத்தில் இந்தி நடிகர் ராஜ் கபூருடன் அனாரி படத்தில் நடித்தது அவர் வாழ்நாளின் ஒரு சிறந்த நடிப்பாக அமைந்தது. இப்படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகைக்கான விருதினைப் பெற்றார். மேலும் “பேராசிரியர் (1962 திரைப்படம்) “(1962) மற்றும் ராமானந்த் சாகர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “மந்தரை” போன்ற பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கதாகும். 1961 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என இந்திய அரசால் இவர் கௌரவிக்கப்பட்டார்.


சொந்த வாழ்க்கை


கண்பத்ரோ பவாருடன் இவரது முதல் திருமணம் நடைபெற்றது , இவருடைய இளைய சகோதரியிடம் தனது கணவரின் கவனம் சென்றதால் அவருடன் விவகாரத்து பெற்று, பின்னர் பாம்பே அம்பிகா ஸ்டூடியோவின் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்பிரகாஷ் குப்தாவை மணந்தார். 1988 பிப்ரவரி 24 அன்று புனேவில் காலமானார்.


விருதுகள்


 • 1959: அனார் படத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது

 • 1961: நடிப்பிற்காக- சங்கீத நாடக அகாதமி விருது

 • வெளி இணைப்புகள்

  நடிகை லலிதா பவார் – விக்கிப்பீடியா

  Actress Lalita Pawar – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *