“லிசா ஹேடன்” (Lisa Haydon) என்கிற எலிசபெத் மேரி, ஜூன் 17, 1986இல் பிறந்த ஒரு ஆஸ்திரேலிய நடிகை ஆவார். இவர், முக்கியமாக இந்தி படங்களில் நடிப்பவர். மேலும், இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மற்றும் விளம்பர நடிகையாகவும் உள்ளார். இந்தி படங்களில், ஹேடன் 2010 இல் காதல் நகைச்சுவை திரைப்படமான ஆயிஷாவில் ஒரு துணை பாத்திரத்தில் அறிமுகமானார், மேலும் நகைச்சுவை நாடகமான குயின்ஸில் அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார், இத் திரைப்படம், இவருக்கு பரவலான அங்கீகாரத்தையும், பிலிம்ஃபேரில் சிறந்த துணை நடிகைக்கான பரிந்துரையையும் பெற்றுத்தந்தது. ஹேடன் பின்னர் வணிக ரீதியாக வெற்றிபெற்ற காதல் நகைச்சுவை திரைப்படம், ஹவுஸ்ஃபுல் 3 இல் நடித்தார் மற்றும் கரன் ஜோஹார் -இயக்கத்தில் வெளிவந்த காதல் நாடகமான ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் 2016இல் வெளிவந்தன.
இவர், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் விளம்பரங்களுக்கு, நடிகையாக நடித்துள்ளார். இவர், பல பிரபல பத்திரிகைகளின் அட்டைப் பக்கத்தில் வந்துள்ளார். குறிப்பாக, ஹார்பர்ஸ் பஜார் க்ராஜியா (இந்தியா) , காஸ்மோபொலிட்டன் (பத்திரிகை) , எல்லே (இந்தியா) , வர்வெ , வோக் இந்தியா , ஃபெமினா (இந்தியா) , எப்.ஹெச்.எம். (பத்திரிகை) , ஹலோ! (பத்திரிகை) , மற்றும் எல்’ஆபிசியல் பத்திரிகை போன்றவற்றில் இவரின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
ஆரம்ப வாழ்க்கை
எலிசபெத் மேரி ஹேடன் இந்தியாவிலுள்ள சென்னையில், தமிழரான வெங்கட் என்பவருக்கும் மற்றும் ஆஸ்திரேலியரான தாய், பெர்னடேட் மரியா ஹேடன் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். அவரது சகோதரி டி.ஜே. மாலிகா ஹேடன் விளம்பர நடிகையாக உள்ளார். ஹேடன் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்து வந்தார். 2007 இல் இந்தியாவிற்கு வந்து விளம்பர நடிகையாக நடிக்கத் தொடங்கினார்.
தொழில்
ஹேடன் 18 வயதில் யோகா ஆசிரியராக இருக்க விரும்பினார். கல்லூரியில் உளவியல் படிப்பைப் படிக்கும்போது, படிப்பிற்காகவும், வாடகை கொடுப்பதற்காகவும், தன் நண்பரின் ஆலோசனையை ஏற்று, விளம்பரத் துறையில் நடிக்கத் தொடங்கினார். முதலில் ஆஸ்திரேலியாவில் மாடலிங் செய்யத் தொடங்கினார். இந்தியாவில் தனது சகோதரியின் மாடலிங் நிகழ்ச்சிகளால் ஊக்கமடைந்த இவர், 2007 இல் இந்தியாவில் மாடலிங் தொழில் தொடங்குவதற்காக இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில், வில்ஸ் லைப்ஸ்டைல் இந்தியா ஃபேஷன் வீக் மற்றும் ஹெச்.டி.ஐ.எல்.-ஐ.சி.டபிள்யு. போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், இவர், லக்மே, ஹூண்டாய் ஐ 20 , இண்டிகோநேஷன், மைண்ட்ரா.காம் மற்றும் பிளெண்டர்’ஸ் பிரைட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் இடம்பெற்றிருக்கிறார். 2010 இல், இவர் ஹ்ரிதிக் ரோஷனுடன் ஒரு வணிகரீதியான விளம்பரத்தில் நடித்துள்ளார். புகழ்பெற்ற புகைப்படக்காரரான பீட்டர் லிண்ட்பெர்குடன், நீரவ் மோடிக்கு ரோஸி ஹண்டிங்டன்-வைட்லெ மற்றும் ஆண்ட்ரீ தியாகோனுடன் இணைந்து நடித்தார்.
வெளி இணைப்புகள்
நடிகை லிசா ஹேடன் – விக்கிப்பீடியா