நடிகை மதுர் ஜாஃபரீ | Actress Madhur Jaffrey

மதுர் ஜாஃபரீ (Madhur Jaffrey), (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1933) இந்தியாவில்-பிறந்த நடிகை, உணவு மற்றும் பயண எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் எழுதிய முதல் சமையல் புத்தகமான , இந்தியன் க்யூசைன்(1973) 2006 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை குக்புக் ஹால் ஆஃப் ஃபேமில் வைக்கப்பட்டது. இந்நூலின் மூலம் இந்திய உணவுமுறை அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்றது. அதன்பின் பல சமையல் நூல்களை எழுதியுள்ளார். சமையல் தொடர்பான பல தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இந்தியன் குக்கரி , இது இங்கிலாந்தில் 1982 இல் தொலைக்காட்சியில் வெளிவந்தது. நியூ யார்க் நகரத்தில் உள்ள தவத் என்ற இந்திய உணவகம் பல உணவு விமர்சகர்களால் பாராட்டப்பெற்றது. இவ்வுணவகத்திற்கு ஆலோசகராக மதுர் ஜாஃபரீ பணியாற்றுகிறார்.


இவர் ஷேக்ஸ்பியர் வால்லா (1965) போன்ற பல படங்களில் நடித்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகையாக 15ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றார். ரேடியோ, மேடை மற்றும் தொலைக்காட்சியில் நாடகங்களில் அவர் தோன்றினார்.


ஆரம்ப வாழ்க்கை


ஜாஃபிரி சிவில் லைன்ஸ், தில்லியில் , ஒரு காயஸ்தா இந்து கூட்டு குடும்பத்தில் பிறந்தார் . லாலா ராஜ் பான்ஸ் பகதூர் (1899-1974) மற்றும் அவரது மனைவி காஷ்மீரன் ராணிக்கு (1903-1971) பிறந்த ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார். மதுராவின் தாத்தா, ராய் பஹதூர் ராஜ் நரேன் (1864-1950), தோட்டங்களின் மத்தியில், யமுனை ஆற்றின் கரையில் எண் 7 ராஜ் நாராயண் மார்க் என்ற பெயரில் ஒரு பரந்த வீட்டைக் கட்டினார்.[சான்று தேவை]

வெளி இணைப்புகள்

நடிகை மதுர் ஜாஃபரீ – விக்கிப்பீடியா

Actress Madhur Jaffrey – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *