நடிகை மலைக்கா அரோரா | Actress Malaika Arora

மலைக்கா அரோரா (Malaika Arora) ஒரு இந்திய நடிகை, நடனமாடுபவர்,விளம்பர நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஆவார். “சைய்யா சைய்யி” (1998), “குர் நாலோ இஸ்க் மித்தா” (1998), மாகி வே” (2002), “கல் தமால்” (2005) மற்றும் “முன்னி பத்னாம் ஹூ” (2010) போன்ற பல படங்களில் இவரது நடனத்திற்காக மிகவும் புகழ் பெற்றது. மேலும் தனது முன்னால் கணவர் அர்பாஸ் கானுடன் இணைந்து பல படங்களைத் தயாரித்துள்ளார். அவர்களது நிறுவனம் “அர்பாஸ் கான் புரொடக்சன்ஸ்”, “டபாங்க்” (2010) மற்றும் “டபாங் 2” (2012) போன்ற திரைப்படங்களை வெளியிட்டது.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி


மலைக்கா அரோரா என்பது சுவாகிலி மொழியில் அழைக்கப்படும் ஒரு பெயராகும் ,”மலைக்கா” என்பது “தேவதை” எனப் பொருள்படும். மகாராட்டிர மாநிலம் தானேவில் பிறந்துள்ளார். அவளுடைய பெற்றோர் இவருக்கு 11 வயதாக இருந்தபோது விவாகரத்து செய்தனர். எனவே அவரது தாய் மற்றும் சகோதரி அமிர்தாவுடன் செம்பூர் சென்றார். இவரது தாய் ஜாய்ஸ் பாலிகார்ப் ஒரு மலையாளக் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர், இவரது தந்தை அனில் அரோரா பஞ்சாபி, இவர் இந்திய எல்லையில் உள்ள ஃபாஸில்கா, மெர்ச்சன்ட் கடற்படையில் பணியாற்றியவர்.


இவர் தனது உயர் நிலைப்பள்ளியை செம்பூரிலுள்ள சுவாமி விவேகனந்தா பள்ளியில் முடித்துள்ளார். இவரது அத்தை கிரேஸ் பாலிகிராப் அப்பள்ளியின் முதல்வராக இருந்தார். அவர் ஹோலி கிராஸ் உயர்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் ஒன்பதாவது வகுப்பு வரை படித்தார். சர்ச்கேட்டிலுள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் இருந்து கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார், ஆனால் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக அதை முடிக்கவில்லை.


தொழில்


எம்.டி.வி இந்தியா தனது செயற்பாடுகளை தொடங்கும்போது அதில் அரோரா ஊடக நபர்களில் (வீஜே) ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், “கிளப் எம்.டி.வி” என்ற நிகழ்ச்சியில் அவர் ஒரு பேட்டியாளராக பணிபுரிந்தார், பின்னர் “சைரஸ் பரச்சா” உடன் இணைந்து “லவ் லைன்” மற்றும் “ஸ்டைல் செக்” போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், மாலிகா பின்னர் விளம்பர உலகத்தில் நுழைந்து பல விளம்பரங்களில் தோன்றினார், 2000 ஆம் ஆண்டுகளில், பல்வேறு படங்களில் குத்தாட்ட பாடல்கள் தவிர ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் தோன்றினார். 2008 ஆம் ஆண்டில், “எமி” திரைப்படத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார், ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை.


சொந்த வாழ்க்கை


மல்லிகா 1998 ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகர்-இயக்குனர்-தயாரிப்பாளர் “அர்பாஸ் கான்” என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, தனித்தனி பிரச்சனைகளை மேற்கோள் காட்டி மே 11, 2017 அன்று அவர் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அவர்கள் ஒரு மகனான அர்ஹான் 2002 நவம்பர் 9 அன்று பிறந்தார்.

வெளி இணைப்புகள்

நடிகை மலைக்கா அரோரா – விக்கிப்பீடியா

Actress Malaika Arora – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *