மாலா சின்ஹா (Mala Sinha) அல்டா சின்ஹா என்ற இயற்பெயருடன் 1936 நவம்பர் 11 அன்று பிறந்துள்ளார். ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையான் இவர் இந்தி, பெங்காலி மற்றும் நேபாளி திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது திறமை மற்றும் அழகுக்காக, பாலிவுட்டின் ஒரு முன்னணி நடிகையாக ஆனார் 1950 கள், 1960 கள் மற்றும் 1970 களின் முற்பகுதியில். சின்ஹா நூறு திரைப்பட தயாரிப்புகளில் நடித்தார் , குறிப்பாக “பியாசா” (1957), “அன்பத்” (1962), தில் தேரா தீவானா” (1962), “கும்ராஹ்” (1963), “பஹ்ரானி” (1963), கேரா தாஹ்”, அப்னே ஹுயா பராயே” , “ஜகன் ஆரா”, “ஹிமாலயா கி காட் மேயின்” (1965), ” நை ரோஷினி” (1967) , “ஆங்கென்” (1968), “மர்யாதா” (1971) மற்றும் “பாபு” (1985) போன்றப் படங்களில் நடித்துள்ளார். .
நடிகர் தர்மேந்திரா, ராஜ்குமார், ராஜேந்திர குமார், பிஸ்வாஜித், கிஷோர் குமார், மனோஜ் குமார் மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோருடன் தொடர்ந்து நடித்து வந்தார். 1958-65 ஆம் ஆண்டுகளில் வைஜெயந்திமாலாவிற்கு அடுத்த மிக அதிக சம்பளம் பெற்ற நடிகை ஆவார். பின்னர் 1968-1971 ஆம் ஆண்டுகளில் ஷர்மிளா தாகூருடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்தும் 1972-73 இல் சாதனா மற்றும் நந்தாவுடன் மூன்றாவது இடம் பெற்றும் இருந்துள்ளார்.[சான்று தேவை]
ஆரம்ப வாழ்க்கை
மாலா சின்ஹா நேபாளி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பெயர் ஆல்பர்ட் சின்ஹா மற்றும் அவர் ஒரு நேபாள கிறிஸ்தவர். மால்காவின் முதல் பெயர் ஆல்டா என்பதாகும். கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தாவில்) பள்ளியில் பயிலும்போது அவரது நண்பர்கள் அவரை “டால்டா” (காய்கறி எண்ணெய்) என அழைத்துள்ளனர். குழந்தைப் பருவக் கலைஞராக தனது பெயரை பேபி நாஸ்மா என மாற்றிக்கொண்டார். பின்னர், வயது வந்த நடிகை என்ற முறையில், மாலா சின்ஹா என்ற பெயரை மாற்றிக் கொண்டார். ஒரு குழந்தையாக, அவர் நடனம் மற்றும் பாடல்களை பாடினார். வானொலியில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாடகியாக இருந்த போதிலும், அவர் திரைப்படங்களில் பின்னணிப்பாடல்களைப் பாடியதில்லை. ஒரு பாடகியாக, 1947 முதல் 1975 வரை அவர் பல மொழிகளில் மேடை நிகழ்ச்சிகளை செய்துள்ளார்.
தொழில்
மலா சின்ஹா பெங்காலி திரைப்படங்களில் குழந்தைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் – :ஜெய் வைஷ்னோ தேவி” ,அதன் பிறகு “ஸ்ரீகிருஷ்ண லீலா” , “ஜோக் பியோக்” மற்றும் “தோலி” போன்ற படங்களில் நடித்துள்ளார். ககுறிப்பிடத்தக்க பெங்காலி இயக்குனர் அர்தெந்து போஸ் ஒரு பள்ளி நாடகத்தில் இவரது நடிப்பைக் கண்டார், அவரது தந்தையின் அனுமதி பெற்று, அவரது பெங்காளி திரைப்படமான “ரோசனாரா” (1952), படத்தில் அறிமுக கதாநாயகியாக நடிக்கவைத்தார்.
குடும்ப வாழ்க்கை
மாலா சின்ஹா நேபாளி பெற்றோருக்கு மகளாக பிறந்துள்ளார். இவர் பிறந்த பின்னர் அங்கிருந்து மேற்கு வங்காளம் புலம் பெயர்ந்தனர். சின்ஹா நேபாளி நடிகர் சிதம்பர் பிரசாத் லோஹானியை திருமணம் செய்து கொண்டார். லோஹனி ஒரு எஸ்டேட் நிறுவன வியாபாரத்தை கொண்டிருந்தார் . சின்ஹா தனது திருமணத்திற்குப் பிறகு, நடிப்பதற்காக மும்பை வந்து தங்கினார். அவரது கணவர் நேபாளத்தில் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தார். இவருக்கு பிரதிபா சின்ஹா என்ற ஒரு மகளுண்டு. இவரும் ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையாவார். 1990 களின் பிற்பகுதியிலிருந்து, இந்த இணை மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூவரும் மும்பை, பாந்த்ராவில் ஒரு பங்களாவில் வசிக்க ஆரம்பித்தனர். ஏப்ரல் 2017 ல் மாலா இறக்கும் வரை அவரது வீட்டில் பிரதிபா சின்ஹா வசித்து வந்தார். பின்னர் மாலா சின்ஹா வீட்டிலிருந்தே நாய்களை கவனித்துக்கொள்கிறார்.