நடிகை மந்தாகினி | Actress Mandakini

மந்தாகினி (Mandakini) (பிறப்பு சூலை 30, 1963. இயற்பெயர் யாஸ்மின் ஜோசப்) முன்னாள் பாலிவுட் நடிகை. இவர் 1985இல் வெளிவந்த “ராம் தேரி கங்கா மைலி” என்கிற படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.


இளமைப்பருவம்


மந்தாகினி மீரட்டில் ஆங்கிலோ இந்தியர்கள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜோசப் ஒரு பிரித்தானியர். தாய் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்.


தொழில்


மீரட்டில் இருந்து அறியப்படாத பெண்ணாக தனது வாழ்க்கையயைத் தொடங்கினார். இயக்குனர் ரஞ்சித் விர்க் “மஸ்லூம்” என்ற படத்தில் இவரை “மாதுரி” எனப் பெயரிட்டு அறிமுகப்படுத்தினார். 1985ஆம் ஆண்டு இவருடைய 22வது வயதில் ராஜ் கபூர் இவரை “ராம் தேரி கங்கா மைலி” என்கிற தனது படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் தனது இளைய மகன் ராஜீவ் கபூருடன் நடிக்க வைத்தார். படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது, இதற்காக பிலிம்பேர் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினை வழங்கியது. மந்தாகினி மேலும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் டான்ஸ் டான்ஸ் (1987) , ஆதித்ய பஞ்சோலியுடன் காஹான் ஹை கனூன் மற்றும் நடிகர் கோவிந்தாவுடன் பியார் கர்கே தேக்கோ போன்ற வெற்றிப்படங்களை வழங்கினாலும் ஒருபோதும் முதல் படத்தின் வெற்றியை போல இல்லை.


தாவூத்துடன் நெருக்கம்


1994 களில் ஒருசில புகைப்படங்கள் ,இவரையும், நிழலுலக தாதாவான தாவூத் இப்ராகிமையும் இணைத்து வர ஆரம்பித்தன. தாவூத் இப்ராகிம் இந்தி பட தயாரிப்பிற்காக நிதியுதவி செய்துள்ளார். அந்த நேரத்தில் அவர் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார். என்வே, இவ்வதந்தியை திட்டவட்டமாக மந்தாகினி மறுத்தார். அவருடன் நட்புடன் இருப்பதாக ஒப்புக் கொண்ட இவர், ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் எதுவுமில்லை என்று கூறினர்.


தற்போதைய வாழ்க்கை


பின்னர், மந்தாகினியின் வாழ்க்கை ஒரு பெரிய பின்னடைவை சந்தித்தது. 1996 ல் ஜோர்டார் என்ற திரைப்படத்தை விட்டு வெளியேறினார். அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வாழ்ந்தார். அப்போதிருந்து, அவர் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள முயற்சித்தார். அவர் நோ வேகன்சி மற்றும் ஷம்பலா என்ற இரண்டு பாப் இசை ஆல்பங்களை வெளியிட்டார் இதில் எதுவுமே வெற்றிபெறவில்லை. தற்போது, அவர் திபெத்து யோகக் கலை வகுப்புகள் நடத்தி வருகிறார், மற்றும் தலாய் லாமாவை பின்பற்றுகிறார். இவரது கணவருடன், திபெத்திய மருத்துவ மையம் ஒன்றை நடத்தி வருகிறார், இது பொதுவாக திபெத்திய மூலிகை மையம் என்று அழைக்கப்படுகிறது.


சொந்த வாழ்க்கை


1990 ஆம் ஆண்டில், முன்னாள் புத்த துறவியான டாக்டர் காக்யூர் டி. ரின்போக் தாக்கூரை மணந்தார். தாக்கூர் 1970 களில் மற்றும் 1980 களில் மர்பி ரேடியோ விளம்பரங்களில் இடம் பெற்ற குழந்தையாக நடித்து புகழ் பெற்றவர். இவர்களுக்கு ரபீல் என்ற மகனும் ரப்சே இன்னயா தாகூர் என்ற மகளும் உள்ளனர்.


வெளி இணைப்புகள்

நடிகை மந்தாகினி – விக்கிப்பீடியா

Actress Mandakini – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *