நடிகை மினாட்டி மிஸ்ரா | Actress Minati Mishra

மினாட்டி மிஸ்ரா (Minati Mishra, 1929 – சனவரி 6 2020) என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடிகை ஆவார். இவர் இந்திய பாரம்பரிய நடன வடிவமான ஒடிசியில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகிறார். இவர் 2011 இல் மிக வயது முதிர்ந்த ஒடிசி கலைஞராக அறிவிக்கப்பட்டார். இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை 2012 இல் மிஸ்ராவுக்கு வழங்கி கௌரவித்தது.


ஆரம்ப கால வாழ்க்கை


மினாட்டி மிஸ்ரா எனப்படும் மினாட்டி தாஸ், 1929 ஆம் ஆண்டில் தற்போதைய இந்திய மாநிலமான ஒடிசாவின், கட்டக்கில் உள்ளூர் பள்ளியின் தலைமை ஆசிரியரான பசாந்தா குமார் தாசுக்கு மகளாக பிறந்தார், பசந்தாவின் மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவர் சிறு வயதிலேயே நடனம் மற்றும் இசையை கற்கத் தொடங்கினார். அஜித் கோஷின் பயிற்சியில் தீம் சார்ந்த நடனமும், ஒடிசி நடனக் கலைஞரான கபிச்சந்திரா கலிச்சரன் பட்நாயக்கிடமிருந்து பனபிஹாரி மைட்டி மற்றும் ஒடிசி ஆகியவற்றைக் கற்றார். 1950 ஆம் ஆண்டில், மினடி மிஸ்ரா புகழ்பெற்ற ஒடிசி குருவான கேளுச்சரண மகோபாத்திராவின் கீழ் நடனத்தைக் கற்கத் தொடங்கினார்.


1954 ஆம் ஆண்டு மினாட்டி மிஸ்ரா, ஒடிசா அரசாங்கத்தின் உதவித்தொகையைப் பெற்று, ருக்மிணி தேவி அருண்டேலின் கலாசேத்திராவில் சேர்ந்தார். மேலும் குட்டி சரதா மற்றும் பெரிய சரதா ஆகியோரிடம் ஒரு ஆண்டு பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு, இவர் இந்திய இலவச கலை கல்வி நிறுவனத்தில் இணைந்து, அங்கு பந்த வள்ளூர் பிள்ளை சொக்கலிங்கம் மற்றும் மினாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரின் கீழ் பயிற்சிபெற்றார். 1956 ஆம் ஆண்டில் மேடை ஏறிய இவர், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 1959 ஆம் ஆண்டில், இவர் சர்வதேச ஒளிப்படக் கழகத்தால் சுவிட்சர்லாந்திற்கு அழைக்கப்பட்டார், மேலும் சூரிச், லூசெர்ன், ஜெனீவா மற்றும் வின்டர்தர் ஆகிய இடங்களில் தன் ஆடலை நிகழ்த்தினார். மூன்று ஆண்டுகள் கழித்து, ஜெர்மனியின் மார்பர்க்கின் பிலியப் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலில் நாட்டியசாஸ்திரம் குறித்த ஆய்வறிக்கைக்கையை சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றார். 1963 ஆம் ஆண்டில், பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டார். இவர் வெளிப்படுத்திய பாவம் மற்றும் அபிநயம் ஆகிய திறன்களுக்காக புகழ் பெற்றார்.


நடிப்பு வாழ்க்கை


மிஸ்ரா ஐந்து ஒடியா படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் சூர்யமுகி 1963 இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜீவன் சத்தி, சாதனா மற்றும் அருந்ததி ஆகிய படங்களில் நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களும் ஒடியாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றன. 1963 ஆம் ஆண்டு வங்காள மொழித் திரைப்படமான நிர்ஜனா சாய்கேட்டிலும் இவர் நடித்தார், அதில் இவர் கேளுச்சரண மகோபாத்திராவின் நடன இயக்கத்தில் பல ஒடிசி நடனங்களை ஆடினார். இவர் திரைப்படங்களில் நடித்து மட்டுமல்லாமல் தவிர, அனைத்திந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராகவும் இருந்தார். மேலும் இந்துஸ்தானி குரல் இசைக்காக சங்கீத் பிரபாகர் பட்டத்தையும் பெற்றார்.


புவனேஸ்வரில் உள்ள உத்கல் இசை மகாவித்யாலயாவின் முதல்வராக மிஸ்ரா 1964 முதல் 1989 வரை இருந்தார். அங்கு இவர் பணியாற்றிய காலத்தில், நிறுவனம் அதன் பாடத்திட்டத்தை ஒழுங்குபடுத்தியது, கல்வி பாடத்திட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட ஒடிசி நடனம் மற்றும் இசைப் பயிற்சி, நாடக அம்சங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. மற்றும் தேர்வு வழிகாட்டுதல்களை அமைத்தது, இவை அனைத்தும் ஒடிசியின் மறுமலர்ச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது. ஒடிசியின் முதல் தலைமுறை குருக்களான பங்கஜ் சரண் தாஸ் மற்றும் தேபா பிரசாத் தாஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் இந்த நிறுவனம் வழங்கியது.


ஓய்வு


1980 ஆம் ஆண்டில் பொறியாளராக இருந்த இவரது கணவர் நித்யானந்தா மிஸ்ரா இறந்தவுடன், மிஸ்ரா நடன நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மேலும் 1990 இல் முறைப்படி ஓய்வு பெற்றார். பின்னர் இவர் சுவிட்சர்லாந்தில் குடியேறினார் மேலும் சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் இந்தியாவில் நடன விழாக்கள், செயல்விளக்க சுற்றுப்பயணங்கள் மற்றும் பட்டறைகளில் தனது நேரத்தை செலவிட்டார்.


இவர் 2020 சனவரி 6, அன்று சுவிட்சர்லாந்தில் இறந்தார்.


திரைப்படவியல்


இவரது படங்களில் பின்வருவன அடங்கும்:


விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்


மிஸ்ரா 1975 ஆண் ஆண்டு ஒரிசா சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். மேலும் இவர் கலிங்க சாஸ்திர சங்க பரிஷத் விருதையும் பெற்றார். 2000 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றார் . 2012 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.

நடித்த திரைப்படங்கள்

1963 சூர்யமுகி
1963 ஜீவன் சதி
1963 நிர்ஜன் சாய்கேட்
1964 சாதனா
1967 அருந்ததி
1967 பாய் ப au ஜா

வெளி இணைப்புகள்

நடிகை மினாட்டி மிஸ்ரா – விக்கிப்பீடியா

Actress Minati Mishra – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *