நடிகை மோனலி தாக்கூர் | Actress Monali Thakur

மோனலி தாக்கூர் (Monali Thakur) நவம்பர் 3, 1985இல் பிறந்த ஒரு இந்திய பாடகர் மற்றும் நடிகை ஆவார். தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார் , 2013இல் “லூட்டெரா” என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற “சாவார்” என்ற பாடலுக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். மேலும் ,2015இல் “தம் லகா கே ஹைசா” என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற “மோ மோகே தாஹே” என்ற பாடலுக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினையும் வென்றுள்ளார். அவர் ஜீ தொலைக்காட்சியின் “ச ரி க கா மா பா சாம்பியன்ஸ்” (2014) என்ற இசை நிகழ்ச்சியின் ஒரு நீதிபதியாக இருந்தார். மேலும் கலர் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பான “ரைசிங் ஸ்டார்” என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு நிபுணராக இருந்தார்.


வாழ்க்கை மற்றும் தொழில்


தாக்கூர் கொல்கத்தாவில் உள்ள பெங்காலி இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர், இவரது தந்தை சக்தி தாக்கூர் ஒரு பெங்காலி பாடகர், மற்றும் இவரது ச்கோதரி மெஹூலி தாக்கூரும் ஒரு பின்னணி பாடகர் ஆவார். இவர் பண்டிட் ஜகதீஸ் பிரசாத் மற்றும் பண்டிட் அஜய் சக்ரபோர்தி ஆகிய இருவரிடமும் இந்துஸ்தானி இசையை. அவர் “ஹிப்-ஹாப்” மற்றும் “பரதநாட்டியம்” கற்றுக் கொண்டார், மேலும் “சல்சா” நடனம் பயிற்சி பெற்ற நடன கலைஞராகவும் இருக்கிறார்.


தக்கூர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகளில் பாடுவதைத் தொடங்கி, உள்ளூர் திருவிழாக்களிலும் பங்கேற்றார், மற்றும் “ராம் கிருஷ்ணா” என்ற தொடரில் பாடியமைக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான “ஆனந்தலோக் விருது” பெற்றார் அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. “இந்திய ஐடால்” போட்டிகளில் ஒன்பதாவது இடத்தை அடைந்தபின் அவர் புகழ் பெற்றார்.


இசைத் துறையில் ஒரு வலுவான பாதையைப் பெற அவள் “இந்திய ஐடாலுக்கு” பிறகு கூட போராட வேண்டியிருந்தது. 2008 இல் பாலிவுட் திரைப்படமான “ரேஸ்” படத்தில் இரண்டு பாடல்களை பாடுவதற்கு இசை இயக்குனரான பிரீத்தம் சக்ர்போர்த்தி ஒரு வாய்ப்பை வழங்கினார். முதலில் ஒரு பாடல் பாடலை பாட திட்டமிடப்பட்டது, ஆனால் அவரின் முதல் பதிவு கண்டு, படத்தின் இயக்குனர்கள் அப்பாஸ்-முஸ்டன் ஆகிய இருவரும் இரண்டாவது பாடலை இவருக்கு வழங்கினர்.

வெளி இணைப்புகள்

நடிகை மோனலி தாக்கூர் – விக்கிப்பீடியா

Actress Monali Thakur – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *