நடிகை மௌஷ்மி சட்டர்ஜீ | Actress Moushumi Chatterjee

மௌஷ்மி சட்டர்ஜீ (Moushumi Chatterjee) (பிறப்பு 1948) ஒரு இந்திய நடிகை ஆவார், இந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜேஷ் கன்னா , சசி கபூர் , ஜீத்தேந்திரா , சஞ்சீவ் குமார் மற்றும் வினோத் மெஹ்ரா போன்ற நடிகர்களுடன் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தி திரைப்படங்களில் ஆறாவது அதிக சம்பளம் பெற்ற நடிகை ஆவார். 2 சனவரி 2019இல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி


மௌசமி சட்டர்ஜி கொல்கத்தாவில் பிறந்தார். இவர் ஜெயந்த் முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை பிரான்தோஷ் சட்டோபாத்தியாயா இந்திய இராணுவத்தில் இருந்தார். இவரது தாத்தா நீதிபதியாக இருந்தார்.


ஜெயந்த் முகர்ஜியை (புகழ்பெற்ற பின்னணி பாடகர் ஹேமந்த் குமாரின் மகன்) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பாயல் மற்றும் மேகா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது திருமணத்திற்குப் பிறகு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


தொழில்


மௌசமி தனது 15 வது வயதில் தருன் மஜும்தர் இயக்கிய பெங்காலி திரைப்படமான பாலிகா பாது (1967) படத்தில் அறிமுகமானார். ஒரு நேர்காணலில், மௌசமி சட்டர்ஜி “பாலிகா பாதுக்குப் பிறகு, நான் பெங்காலி திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் என் படிப்பை நிறைவு செய்ய விரும்பினேன். எவ்வாறாயினும், நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே திரைப்படங்கள் எனது தலைவிதியாய் இருந்தது. மரண படுக்கையில் இருந்த என் நெருங்கிய அத்தை, கடைசியாக நான் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆகையால், அவரது விருப்பத்தை நிறைவேற்ற நான் திருமணம் செய்து கொண்டேன் ” எனக் கூறினார். இவர் வீட்டில் இந்திரா என அழைக்கப்பட்டார். ஹேமந்த் குமாரின் மகன் ஜெயந்த் முகர்ஜி (பாபு) பாதுகாப்பாளராகவும், அண்டை வீட்டாராகவும் இருந்தார். “பாபுவை நான் காதலித்தேன். என் குடும்பத்துக்கு வெளியே நான் தொடர்பு கொண்ட முதல் ஆண் அவர். எனவும் குறிப்பிட்டுள்ளார் ”

வெளி இணைப்புகள்

நடிகை மௌஷ்மி சட்டர்ஜீ – விக்கிப்பீடியா

Actress Moushumi Chatterjee – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *