நடிகை நபீசா அலி | Actress Nafisa Ali

நபீசா அலி (Nafisa ali, பிறப்பு 18 ஜனவரி, 1957) இந்திய, வங்காள திரைப்பட நடிகையும், இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.


இளமை


நபீசா அலி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அஹமது அலி என்ற வங்காள இசுலாமியத் தந்தைக்கும், பிலோமினா டாரிசன் என்ற ரோமன் கத்தோலிக்க ஆங்கில இந்திய வம்சாவழியில் வந்த தாய்க்கும் பிறந்தவராவார். இவரது தாத்தா வாஜித் அலி வங்காளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவருடைய தந்தையின் சகோதரி (அத்தை), ஜாயிப்புன்னிசா ஹமைதுல்லா, பாகிஸ்தானின் இதழியலாளரும் பெண்ணியவாதியுமாவார். வங்கதேச சுதந்திரப் போராளியும் சிப்பாயுமான பிர் ப்ரதிக் அக்தர் அகமது ஆகியோருடன் நபீசா உறவினராவார். நபீசாவின் தாயார் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்..


நபீசா கொல்கத்தாவின் லா மார்டினியெர் இலிருந்து சர் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இணைந்தார். மேலும் உலகப்புரிதலுக்கான சின்மயா மிஷனில் சுவாமி சின்மயா அவர்களிடம் வேதாந்தத்தையும் கற்றார். இவருடைய கணவர் கோல். ஆர். எஸ் சோதி, புகழ்பெற்ற போலோ விளையாட்டு வீரர் ஆவார். இவர் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது வென்றவர். திருமணத்திற்குப் பிறகு நபீசா தன் தொழிலை நிறுத்தி தனது மூன்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதிலேயே கவனம் கொண்டு நேரம் செலவழித்தார். இவருடைய மகள்கள் ஆர்மனா, பியா, மகன் அஜித் ஆகியோராவார்கள். இதன் பிறகு 18 வருடங்கள் கழித்து மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.


பணி


நபீசா பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர். 1972-1974 இல் தேசிய நீச்சல் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றவர்; 1976 இல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்; அகில அழகிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநியாகக் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்றார். கொல்கத்தா ஜிம்கானா எனப்படும் குதிரைப்பந்தய மைதானத்தில் ஜாக்கியாக 1979 இல் பணியாற்றினார்.


திரையுலகப்பணி


நபீசா பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1978 இல் சசி கபூருடன் நடித்து வெளிவந்த ஜனூன், அமிதாப் பச்சனுடன் 1998 இல் நடித்த மேஜர் சாப், 2005 இல் பிவாஃபா, 2007 இல் லைஃப் இன் அ மெட்ரோ மற்றும் தர்மேந்திராவுடன் 2010 இல் நடித்த யாம்லா பாக்லா தீவானா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் 2007 இல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஆக்‌ஷன் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து பிக் பி என்ற மலையாளப்படத்திலும் நடித்துள்ளார். இதில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார்.


அரசியல்


2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் கொல்கத்தா தொகுதியில் நபீசா அலி போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். பின்னர் 2009, ஏப்ரல் 5 இல் லக்னோவில் போட்டியிட்ட சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தால் முன் தகுதி அடிப்படையில் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்திற்கான மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் நபீசா அலி போட்டியிட்டார்.பின்னர் 2009 நவம்பரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இனி காங்கிரசே தனது வாழ்க்கை எனக் கூறினார்.


குடும்பம்


இவர் கொலோனல் சோதி என்ற போலோ (விளையாட்டு) வீரரை மணந்தார். இவரது கணவர் அர்ஜூனா விருது வென்றவராவார். இவர் செப்டம்பர் 5, 2005 இல் இந்தியாவின் குழந்தைகள் திரைப்படச் சங்கத்தின் (CFSI) தலைவராக நியமிக்கப்பட்டார். நம்பர் 2008 இல் இவற்றுக்கு மூன்றாம் நிலையில் வயிற்றில் புற்றுநோயும், சினைப்பைப் புற்றுநோயும் இருப்பது கண்டறியப்பட்டது.


வெளி இணைப்புகள்

நடிகை நபீசா அலி – விக்கிப்பீடியா

Actress Nafisa Ali – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *