நந்தா கர்னாடகி (Nanda)(8 ஜனவரி 1939 – 25 மார்ச் 2014) நந்தா என்ற பெயரில் அறியப்பட்டவர், இந்தி மற்றும் மராத்தி படங்களில் தோன்றிய இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது தொழில் மற்றும் அவரது நடிப்பிற்காக மிகவும் புகழ்பெற்றவர், சோட்டி பேஹன் , டூல் கா ஃபூல் , பாபி , கலா பஜார் , கனுன் , ஹம் டோனோ , ஜப் ஜப் ஃபூல் கிலே , கும்னாம் , இட்டெஃபக் , தி டிரெயின் மற்றும் பிரேம் ரோக் ஆகியவற்றில் அவரது நடிப்பிற்காக நன்கு அறியப்பட்டவர்.
ஆரம்ப வாழ்க்கை
நந்தா ஒரு மஹாராஷ்டிராவில் ஒரு வியாபார குடும்பத்தில் பிறந்தார் தந்தை வினாயக் தாமோதர் கர்னாடாக்கி (மாஸ்டர் விநாயக்) என்பராவார், இவர் ஒரு வெற்றிகரமான மராத்தி நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். 1947-ல் நந்தாவிற்கு எட்டு வயது இருக்கும் போது அவரது தந்தை தனது 41 ஆவது வயதில் இறந்தார். குடும்பம் கடினமான நேரங்களை சந்தித்தது. 1950 களின் முற்பகுதியில் திரைப்படங்களில் பணிபுரிந்ததன் மூலம் ஒரு குழந்தை நடிகை ஆனார். 1948 ல் மந்திர் என்றப் படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.
வெள்ளி திரையில் அவர் “பேபி நந்தா” என முதலில் அறியப்பட்டார். அவர் 1948 முதல் 1956 வரை மந்திர், ஜக்கு, அங்காரே, மற்றும் ஜாக்ரித்தி போன்ற படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். திரைப்படங்களில் அவரது ஈடுபாட்டின் விளைவாக, அவரது கல்வி பாதிக்கப்பட்டது, எனவே புகழ்பெற்ற பள்ளி ஆசிரியர் மற்றும் பாம்பாய் சாரண ஆணையர் கோகுல்தாஸ் வி. மக்ஹி என்பவர் வீட்டில் அவர் கல்வி கற்றார். திரைப்படங்களில் நடிப்பதை ஒரு வாழ்க்கையாகக் கொண்டதன் மூலம், அவருடைய ஆறு உடன்பிறந்தவர்களை அவர் ஆதரித்தார். அவரது சகோதரர்களில் ஒருவர் மராத்தி திரைப்பட இயக்குனர் ஜெயபிரகாஷ் கர்னாடாக்கி. நடிகை ஜெயஸ்ரீ தல்பேடி அவளுடைய அண்ணி ஆவார்.
தொழில்
குழந்தை நடிகை மற்றும் துணைப் பாத்திரங்கள்
வெள்ளி திரையில் அவர் “பேபி நந்தா” என முதலில் அறியப்பட்டார். அவர் 1948 முதல் 1956 வரை மந்திர், ஜக்கு, அங்காரே, மற்றும் ஜாக்ரித்தி போன்ற படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நந்தாவின் தந்தைவழி மாமா, புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான வி. சாந்தாராம் நந்தாவை ஒரு வெற்றிகரமான படமான டூஃபான் அவுர் தியா (1956) படத்தில் சகோதரர் சகோதரி வேடங்களில் நடித்து வைத்தார். இது ஒரு பார்வை இழந்த பெண் உட்பட அனாதைச் சகோதரன் மற்றும் சகோதரியின் கதையாக இருந்தது. பாபி (1957) என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார், ஆனால் இவருக்கு விருது கிடைக்கவில்லை. தேவ் ஆனந்த் உடன் காலா பஜார் என்ற படத்தில் முன்னணி வேடத்திலும் தூல் கா ஃபூலில் இரண்டாவது முன்னணி பாத்திரத்திலும் நடித்தார்