நீது சிங் (Neetu Singh), பிறப்பு 8 ஜூலை 1958), “நீத்து கபூர்” என்ற பெயரில் அறியப்பட்ட இந்திய பாலிவுட் திரைப்பட நடிகையாவார். அவர் பேபி சோனியா என்ற பெயரில் 8 வயதில் நடிக்கத் தொடங்கினார். குழந்தைக் கலைஞராக அவரது முதல் பாத்திரம் “சுராஜ்” (1966) படத்தோடு ஆரம்பமானது. பின்னர் “ரூபா”, “தஸ் லுக்”, “தோ காலியான்” (இரு வேடங்களில்) ஆகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். “வாரிஸ்” (1969) மற்றும் “பவித்ர பப்பி” என்ற படங்களிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1973 இல் “ரிக்சாவாலா” திரைப்படத்துடன் நடிக்க ஆரம்பித்த இவர், 1973 முதல் 1983 வரை முன்னணி கதாநாயகியாக 50 படங்களில் தோன்றினார். 1983 ஆம் ஆண்டில் தன்னுடன் அடிக்கடி நடித்து வந்த இணை நட்சத்திரமான் ரிசி கபூருடன் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்த இவர் சில காலம் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். 26 ஆண்டுகளுக்குப் பின்னர் 2009இல் மீண்டும் திரையில் தோன்றிய இவர் “லவ் ஆஜ் கல்” என்ற காதல் படத்தின் மூலம் ஒரு வெற்றிப் படத்தை அளித்தார். “தோ தோனி சார்” (2010), “ஜப் தக் ஹை ஜான்” (2012) “பேஷ்ரம்” (2013) போன்ற படங்களிலும் தோன்றினார்.
ஆரம்ப வாழ்க்கை
நீது சிங் தில்லியில் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.
தொழில்
நீது சிங் 1966இல் குழந்தை நட்சத்திரமாக “சுராஜ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் முன்னணி ஜோடிகளான ராஜேந்திர குமார் மற்றும் வைஜெயந்திமாலா ஆகியோருடன் நடித்திருந்தார். நடிகை வைஜெயந்திமாலாவின் நடனப் பள்ளியில் காணப்பட்ட இவரை, தத்தினேனி பிரகாஷ் ராவ் என்பவரிடம் அறிமுகப்படுத்தப் பட்டார். “சூராஜ்” படத்தில் சிறிய அளவிலான ஒரு அசத்தலான பாத்திரத்திற்காக நீத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். “தஸ் லக்” , “வாரிஸ்”(1969), “பவித்ரா பாப்பி” மற்றும் “கர் கர் கி கஹானி” போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தையும் தெய்வமும் என்றத் தமிழ்ப் படத்தில் குட்டி பத்மினியின் பாத்திரத்தில் ” தோ காலியன்” என்ற பெயரில் மறுபதிப்பு செய்த படத்தில் தோன்றினார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1973இல் இராம. வீரப்பன் அவர்களின் சத்யா மூவீஸ் தயாரிப்பில் தமிழில் வந்த மிகப் பெரிய வெற்றிப்படமான ரிக்சாக்காரன் என்ற படத்தை இந்தி மொழியில் “ரிக்சாவாலா” என்ற பெயரில் எடுக்கத் திட்டமிட்டார். தமிழில் ம. கோ. இராமச்சந்திரன் நடிப்பிற்காக தேசிய விருது பெற்றிருந்தார். எம். ஜி. ஆரின் நண்பர் கே. சங்கர் நடிகர் ரன்தீர் கபூர் மற்றும் ,நீது சிங் ஆகிய இருவரையும் வைத்து இப்படத்தை இயக்கினார். தமிழில் மஞ்சுளா விஜயகுமார் ஏற்று நடித்த வேடத்தில் நீது நடித்தார். இதில் நீது சிங் 15 வயதில் அறிமுகமானார். எனினும், மறு ஆக்கம் ஒரு தோல்வியாக இருந்தது.
“யாதோங்க் பாரத்”(1973) என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடனமாடுபவராக தோன்றினார். ” லேகர் ஹம்” என்ற அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும், இவருக்கு மீண்டும் முக்கிய வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தன. பல படங்களில் இவருக்கு வேடிக்கையான அன்பான மகள், அல்லது நம்பிக்கையான் உயிரோட்டமுள்ள காதலி பாத்திரங்கள் கிடைத்தன. நடிகர் ரிசி கபூருடன் 12 படங்களில் நடித்துள்ள இவர் பின்னர் தனது 21வது வயதில் 1980இல் அவரையே மணந்தார். அப்போது அவர் நடிப்பின் உச்சத்தில் இருந்தார். “காலா பத்தார்” படத்திற்காக “சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருததிற்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனாலும் இவர் திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கினார்.
சொந்த வாழ்க்கை
திரையில் நடித்த வந்த நீது மற்றும் ரிசி கபூர் ஆகிய இருவரும் காதலில் விழுந்தனர். 1980 ஜனவர் 22 அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரித்திமா கபூர் சாஹ்னி மற்றும் ரன்பீர் கபூர் என்ற குழந்தைகள் உண்டு. ஆடை வடிவமைப்பாளராக உள்ள ரித்திமா கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் பரத் சாஹ்னி என்பவரை 2006 இல் மணந்து கொண்டார். இவர்களுக்கு சமாரா என்ற ஒரு மகளுண்டு. ரன்பீர் கபூர் ஒரு நடிகராக இந்தி பட உலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.
மரியாதை
மும்பையிலுள்ள பாந்த்ரா பாண்ட்ஸ்டான்டில் இவரது கை அச்சிடப்பட்டது. மேலும் “வாக் ஆப் த ஸ்டார்” என்ற பட்டமும் கிடைத்தது.