நிவேதிதா திவாரி (Nivedita Tiwari) (பிறந்தது: 1985 நவம்பர் 24) ஜீ தொலைக்காட்சியின் பாகோன்வாலி – பாண்டே அப்னி தக்தீர் என்ற தொடரில் ரன்ஜுன் என்ற வேடத்திலும் & தொலைக்காட்சியின் கங்கா என்றத் தொடரில் சுப்ரியா என்ற வேடத்தில் நடித்ததற்காக பிரபலமான இந்திய நடிகையாவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
நிவேதிதா உத்தரப்பிரதேச அயோத்தியில் பிறந்து வளர்ந்தார். அயோத்தியின் ஜே.பி. அகாடமியிலிருந்து பள்ளிப்படிப்பை முடித்த இவர் , தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி வாழ்க்கை
கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பாலிகா வாதுவில் ஆனந்தி என்றா வேடத்தில் நடிக்க மூன்று பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டபோது நிவேதிதா ஆரம்பத்தில் அறியப்பட்டார். பின்னர் இவர் பாகோன்வாலி – பாண்டே அப்னி தக்தீர் என்ற படத்தில் ரன்ஜுன் மிஸ்ரா என்ற பெண்ணாக நடித்த்ரிந்தார். இந்த நிகழ்ச்சி 2010-2012 முதல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில், யாகான் மெயின் கர் கர் கெலி மற்றும் ஸ்டார் யா ராக்ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளில் நிவேதிதா விருந்தினராக தோன்றினார். இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் ராம் மிலாயி ஜோடியின் ஒரு அத்தியாயத்திலும் தோன்றினார்.
காப் என்றத் திரைப்படத்தில் நிவேதிதா சுரேலி என்ற பெண்ணாக நடித்தார். கௌரவக் கொலைகளைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைத் திரைப்படம் தொட்டது.
2012 ம் ஆண்டின் இறுதியில், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் லகோன் மெய்ன் ஏக்கின் என்ற வாராந்திர நிகழ்ச்சியின் இரண்டு வெவ்வேறு அத்தியாயங்களில் தோன்றினார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயமும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித்தியாசமான கதையை பிரதிபலித்தது. முதல் தோற்றத்தில், ரவி துபே ஜோடியாக அஃப்ரீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் வரதட்சணை பிரச்சினையில் கவனம் செலுத்தியது. அடுத்து, அங்கித் பாத்லா மற்றும் ரீட்டா பதுரி ஆகியோருடன் ப்ரீத்தி மற்றும் சுனில் ஆகியோரின் கதையையும், அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான போராட்டத்தையும் சொன்ன ஒரு அத்தியாயத்தில் நடித்தார். ராஜ் சிங் அரோரா மற்றும் பல்லவி குப்தா ஆகியோருடன் யே ஹை ஆஷிகிவியின் ஒரு அத்தியாயத்திலும் இவர் தோன்றினார்.
2014 ஆம் ஆண்டில், சஹாரா ஒன் தொலைக்காட்சியின் ஃபிர் ஜீன் கி தமன்னா ஹை என்பதில் தேவயானியாகவும், நீலி சத்ரி வாலி என்பதில் பார்வதியாகவும் நடித்தார் . நிவேதிதா பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.
கங்கா என்றத் தொடரில் சுப்ரியாவாக நிவேதிதா தோன்றினார் அடுத்ததாக பிரகாஷ் ஜா தயாரிக்கும் பிராடு சயான் படத்தில் காணப்படுகிறார். இவர் தற்போது புது தில்லியைச் சேர்ந்த விஷன் இந்தியா அறக்கட்டளையில் ஒரு ஆராய்ச்சி சக ஊழியராக உள்ளார். இது இளைஞர்களிடையே பொதுத் தலைமையில் செயல்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
நிவேதிதா படைப்பு எழுத்து, பாடல், வாசிப்பு ஆகியவற்றை ரசிக்கிறார். டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒரு சிறு கவிதையுடன் ஒரு கருத்துக் கட்டுரையும், தனது சொந்த படைப்புகளை தனது வலைப்பதிவில் தவறாமல் இடுகிறார். நிவேதிதா தனது சொந்த ஊரான பைசாபாத்தில் 2011 திசம்பர் 4, அன்று ஸ்வஸ்த் இந்தியாவின் இணை நிறுவனரும் இயக்குநருமான அங்கூர் பெகு என்பவரை மணந்தார்.