நுஸ்ரத் ஜஹான்(Nusrat Jahan) (வங்காளம்: নুসরাত জাহান , பிறப்பு:8 சனவரி 1990) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் திரைப்பட நடிகையும், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் சார்பாக பசிர்ரத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் முன், நிகில் ஜெயின் எனும் தொழில் அதிபரை துருக்கியில் வைத்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் இந்தியாவிற்கு வந்து மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
வெளி இணைப்புகள்
நடிகை நுஸ்ரத் ஜஹான் – விக்கிப்பீடியா