நடிகை ரீனா ராய் | Actress Reena Roy

ரீனா ராய் (Reena Roy) 1957 ஜனவரி 7 அன்று பிறந்த ஒரு இந்தித் திரைப்பட நடிகையாவார். 1972 இலிருந்து 1985 வரை பல படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார் மற்றும் அந்த சகாப்தத்தின் முன்னணி நடிகை ஆவார். அவருடைய காலத்தின் மிக உயர்ந்த ஊதியம் வாங்கும் நடிகையாக அவர் இருந்தார். இவருக்கு, சினிமாவில் பங்களிப்புக்காக ஷர்மிளா தாகூருடன் இணைந்து 1998 இல் பிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் சார்ந்த பாத்திரங்களில் நடித்து வந்தார். அவருடைய படமான “அப்னாபன்” (1977) திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றார், மேலும் நாகின் (1976) மற்றும் ஆஷா (1980). ஆகிய படங்களில் நடித்ததனால் சிறந்தத் துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி


ரீனா ராய் “சாய்ரா அலி” என்ற பெயருடன் நடிகர் சாதிக் அலிக்கும் , சர்தா அலிக்கும் மூன்றாவது மகளாகப் பிறந்தார். பெற்றோர் விவாகரத்து பெற்றுக் கொண்டனர், இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் அவளுக்கு உண்டு. அவரது தாயார் விவாகரத்திற்குப் பிறகு நான்காவது குழந்தைக்கு ரூபா ராய் என மறுபெயரிட்டார். அவரது முதல் படத்தின் தயாரிப்பாளரால் ரீனா ராய் என மாற்றப்பட்டது மற்றும் அவரது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் பொருளாதாரதிற்கு உதவியாக இருக்க முடிவெடுத்து தனது இளம் வயதிலேயே திரைப்படங்களில் நடிக்கத் முடிவெடுத்து திரைப்படங்களில் நுழைந்தார்.


சொந்த வாழ்க்கை


அவருக்கு பார்கா மற்றும் அஞ்சு என இரு சகோதரிகள் இருக்கிறார்கள். மேலும் ராஜா என்ற ஒரு சகோதரன் உண்டு. 1983 இல், அவர் புகழின் உச்ச நிலையில் இருந்தபோது, திரைப்படத் தொழிலில் இருந்து வெளியேறி பாக்கித்தான் மட்டை பந்து வீரர் முகுசின் கானை திருமணம் செய்து கொண்டார். பிற்கு இவர்கள் விவாகரத்து பெற்றனர். ஆரம்பத்தில் ரீனா இவரது தனது மகள் சனம் உடன் இருந்தார்.

வெளி இணைப்புகள்

நடிகை ரீனா ராய் – விக்கிப்பீடியா

Actress Reena Roy – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.