நடிகை ரிங்கு ராஜ்குரு | Actress Rinku Rajguru

ரிங்கு ராச்குரு (Rinku Rajguru) ( 3 ஜூன் 2001) இவர் மராத்தி மொழி திரைப்பட நடிகையாவார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சைராட் என்ற திரைப்படதில் சிறப்பாக நடித்து புகழைப்பெற்றார். இவருக்கு கதாநாயகனாக அறிமுக நாயகன் ஆகாஸ் தோசார் என்பவர் நடித்துள்ளார். தற்சமயம் இவர் மகாரஷ்டிரா மாநிலம், சோலாபூர் அக்லுஜ் என்ற இடத்தில் உள்ள ஜிஜமதா கன்ய பிரசாலா பள்ளியில் 10 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார். சாய்ராட் படத்தின் இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே இவரை 2013 ஆம் ஆண்டு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த சிறிய வயது நடிகை என்பதற்காக இந்திய ஜனாதிபதியிடம் விருது பெற்றார். இவரின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் ஆசிரியர்களாக வேலை செய்கிறார்கள். இவரது ஆசை மருத்துவராக படிக்க வேண்டும் என்பதாகும். சாய்ராட் திரைப்படம் 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டாலும் இந்தியாவில் 50 கோடியும், வெளிநாடுகளில் 100 கோடிகளும் வசூல் செய்து சாதனை செய்துள்ளதால் இவருக்கு இப்படத்தின் தாரிப்பாளர் ஊக்க தொகையாக 5 கோடி கொடுத்து பாராட்டியுள்ளார். இதேபோல் இவருடன் நடித்த ஆகாஸ் தோசாருக்கும் 5 கோடி ஊக்க தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பின்னர் இவர் மறுத்தார்.


திரைப்படம்


விருதுகள்


 • சிறப்பு ஜூரி விருது 63 வது தேசிய திரைப்பட விருதுகள். சைராட்

 • மேலும் பார்க்க


  நடித்த திரைப்படங்கள்

  2016 சைராட்

  வெளி இணைப்புகள்

  நடிகை ரிங்கு ராஜ்குரு – விக்கிப்பீடியா

  Actress Rinku Rajguru – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *