நடிகை ரிதுபர்ணா சென்குப்தா | Actress Rituparna Sengupta

ரிதுபர்ணா சென்குப்தா (Rituparna Sengupta பிறப்பு 7 நவம்பர் 1971) இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளரும் ஆவார். வங்காள, இந்தி, திரைத்துறைகளில் பணிபுரிந்துள்ளார். ஒரு தேசிய விருது, இரு பிலிம்பேர் விருதுகள், நான்கு பி.எப்.ஜி.ஏ விருதுகள் மற்றும் நான்கு அனலாக் விருதுகளைப் பெற்றுள்ளார்.


ரிதுபர்ணா முதலில் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார். 1989 இல் வங்காளத் தொலைக்காட்சித் தொடரான சதா பைராவில் நடித்தார். 1992 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற சுவட் பதரேர் தலா என்ற வங்காள திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். இப்படத்தில் பிரபுத் ராயுடன் நடித்தார். 1994ஆம் ஆண்டு பார்ததோ கோஷ் இணைந்து தீஷ்ராகான் திரைப் படத்தின் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் ப்ரோசென்ஜிர் சட்டர்ஜி மற்றும் சிரன்ஜித் சக்ரபூத் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிஜோய் பாஸ்கரின் நாக் பஞ்சமி (1994) திரைப்படத்தில் முதன்முறையாக பிரன்சிக் சாட்டர்ஜியுடன் நடித்தார். இவர் நடித்த சாகரிக்கா (1998), துமார் அமர் பிரேம் (1998), ரங்கு பூ (1999) ஆகியன வெற்றி திரைப்படங்களாகும்.


1996 ஆம் ஆண்டு கர்நாடக சுபுத்ரா என்ற கன்னட திரைப்படத்தில் பணிபுரிந்தார். 2013 ஆம் ஆண்டு சொகன்லால் உடன் கதவீடு திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.


ஆரம்பகால வாழ்க்கை


இளம் வயதிலிருந்தே கலைகளில் ஆர்வமாக இருந்தார். ஓவியம், நடனம், பாடல் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினார்.


மவுன்ட் கார்மெல் பள்ளியில் படித்தார். பின்னர் லேடி பிரபூர்ன் கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம். ஏ பட்டத்திற்கான நவீன வரலாற்றைப் படிக்க துவங்கினார்.


சொந்த வாழ்க்கை


சென்குப்தா தனது பால்ய நண்பரும் மொபி ஆப்ஸ் இன் நிறுவனரும் தலைவருமான சஞ்சய் சக்கர்பார்தி என்பவரை 13 டிசம்பர், 1999 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார். இத் தம்பதியினருக்கு அன்கன் என்ற மகனும் ரிசோனா என்ற மகளும் உள்ளனர்.

வெளி இணைப்புகள்

நடிகை ரிதுபர்ணா குறிப்புகள் – விக்கிப்பீடியா

Actress Rituparna Sengupta – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *