ரூபா (பிறப்பு 7 நவம்பர் 1960) ரூபா தேவி என்றும் அறியப்படுபவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் மூத்த நடிகையான அத்வானி லட்சுமி தேவியின் மகளாவார். இவர் தமிழில் 365 நாட்கள் ஓடிய ஒரு தலை ராகம் என்ற சோகமான காதல் சித்திரத்தில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். அதில் இவர் புதுமுகம் ஷங்கருடன் ஜோடியாக நடித்தார்.
தொழில்
தேவி 1980 களில் முதன்மையாக கன்னட திரைப்படங்களில் பணியாற்றினார். இவர் 1979 ஆம் ஆண்டில் கமலா என்ற சோதனை திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்ற பாலியல் தொழிலாளியின் பாத்திரம் பரந்த அளவில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1980 ஆம் ஆண்டில் சிம்ஹா ஜோடி படத்தின் வழியாக வணிக திரைப்படத்தில் நுழைந்தார், அதில் விஷ்ணுவர்தனின் சகோதரி வேடத்தில் நடித்தார். 1983-87 காலப்பகுதியில் கன்னட திரைப்படங்களில் இரண்டாவது நாயகி மற்றும் துணை வேடங்களுக்கு இவர் முதல் தேர்வாக இருந்தார். இவரது பிரதான கன்னடத் திரைப்படங்ளாக ஹாலு ஜேனு, முள்ளின குலாபி, பந்தனா, அவள அந்தரங்கா, மரலி குடிகே, திரிசூலா, அகுதி, தர்மா, பாலா நௌகே ஆகியவை அடங்கும். அவள அந்தரங்கா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு திரைப்பட விருதை (1984–85) பெற்றார்.[சான்று தேவை]
இவரது காலத்தில் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான ராஜ்குமார், கல்யாண் குமார் , விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், அம்பரிஷ், அனந்த் நாக், சங்கர் நாக், லோகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஹாலு ஜேனு, சமயதா கோம்பே, யாரிவனு ஆகியவற்றில் ராஜ்குமருடன் ஜோடியாக நடித்தார், இவை அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. 1989 க்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்குபோட்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் கங்கா காவேரி படத்தின் வழியாக வெள்ளித்திரைக்குத் திரும்பினார். 2011 ஆம் ஆண்டில் துனியா விஜய்யின் தாயாக ஜராசந்தா படத்தில் நடித்தார்.
ரூபா தேவி மற்றும் அவரது தாயார் அத்வானி லட்சுமி தேவி ( ஸ்ரீ ராமஞ்சநேய யுத்தா ) இருவருடனும் நாயகனாக நடித்த பெருமையை ராஜ்குமார் பெற்றுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
1978 | நாளாகா எந்தரோ |
---|---|
1979 | காளி கோயில் கபாலி |
1979 | பக்கா குள்ளா |
1979 | கமலா |
1980 | ஒரு தலை ராகம் |
1980 | தீக்கடல் |
1980 | ஹிருதயம் பாடுண்ணு |
1980 | அந்தரங்கம் ஊமையானது |
1980 | அம்பலவிளக்கு |
1980 | பாப்பு |
1980 | வசந்த அழைப்புகள் |
1980 | சிக்ஹ ஜோடி |
1981 | சினேகம் ஓரு பிரவாகம் |
1981 | அம்பாள்பூவு |
1981 | வழிகள் யாத்ரக்கர் |
1981 | மயில் |
1981 | ஆடுகள் நனைகின்றன |
1981 | கண்ணீர் பூக்கள் |
1981 | ஆம்பல்பூவு |
1981 | அவசரக்காரி |
1981 | மவுனயுத்தம் |
1981 | எங்கம்மா மகாராணி |
1981 | அன்று முதல் இன்று வரை |
1982 | எச்சில் இரவுகள் |
1982 | எனிக்கம் ஒரு திவாசம் |
1982 | கனவுகள் கற்பனைகள் |
1982 | ஹாலு ஜேனு |
1982 | முள்ளின குலாபி |
1982 | ராகம் தேடும் பல்லவி |
1982 | நடமாடும் சிலைகள் |
1982 | புடி முச்சிடா கெண்டா |
1982 | துணைவி |
1982 | சிலந்திவலா |
1983 | பல்லாங்குழி |
1983 | காயத்திரி மதுவே |
1983 | நியாயா கெட்டிட்டு |
1984 | பந்தனா |
1984 | சிவ கன்யே |
1984 | யாரிவனு |
1984 | அவள அந்தரங்கா |
1984 | பவித்ர பிரேமா |
1984 | மரியாதே மகாலு |
1984 | மராலி குடிகே |
1984 | சமயத கொம்பே |
1984 | மகா புருஷா |
1984 | யாரிவானு |
1985 | தர்மமா |
1985 | பெங்களூர் ராத்ரியள்ளி |
1985 | திரிசூலா’ |
1985 | பெட்டத ஹூவு |
1985 | ஆகுதி |
1985 | கூடம் தேடி |
1986 | நெனபினா தோணி |
1986 | ரதசப்தமி |
1987 | சிவ பக்த மார்க்கண்டேயா |
1987 | ஜெகன்மாதா |
1987 | பாலா நௌக் |
1988 | தாசி |
1988 | சம்யுக்தா |
1989 | பத்ரசிட்டா[4] |
1989 | கண்டந்தரே கண்டு |
1990 | அப்பு[5] |
1994 | போலீஸ் அல்லுடு |
2005 | கர்ணன சம்பத்து |
2006 | கமலி |
2008 | கங்கா காவேரி |
2010 | மத்தே முங்காரு |
2011 | ஜராசந்தா |
2012 | கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் |
2015 | அசுரா |