நடிகை ரோஷன் குமாரி | Actress Roshan Kumari

ரோஷன் குமாரி (Roshan Kumari) ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் என்ற பல பரிமாணங்களை கொண்டவராவார். கதக் என்ற பாரம்பரிய நடன வடிவத்தில் முன்னணியில் இருக்கும் கலைஞர்களில் ஒருவராக பலராலும் கருதப்படுகிறார். ஜெய்ப்பூர் கரானைவைப் பின்தொடரும் இவர் கதக் நடனத்தை ஊக்குவிக்கும் அகாதமியான மும்பையின் நிருத்யா கலா கேந்திராவையும் நிறுவினார். இந்தியாவில் இசை,நடன நாடகக் கலைகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி விருது 1975 ஆம் ஆண்டு ரோசன் குமாரிக்கு வழங்கப்பட்டது . இந்திய அரசு வழங்கும் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு 1984 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


சுயசரிதை


ரோசன் குமாரி கிறித்துமசுக்கு முன்னர் திசம்பர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை. வட இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள அம்பாலாவில் (முந்தைய பஞ்சாப்) ஒரு பிரபலமான கைம்முரசு இணைக் கலைஞர் சவுத்ரி பக்கிர் முகமது மற்றும் புகழ்பெற்ற இந்துசுதான் மற்றும் பின்னணி பாடகர் யோகராபாய் அம்பலேவாலி ஆகியோருக்குப் பிறந்தார். . கே. எசு. மோரேவிடமிருந்து கதக்கின் அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்ட இவர், சுந்தர் பிரசாத்திடம் மும்பையின் கதக் மகாராச் பிந்தாடின் பள்ளியில் தனது நடனப் பயிற்சியைத் தொடர்ந்தார். . பின்னர், இவர் குலாம் உசேன் கான் மற்றும் அனுமன் பிரசாத் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். கோவிந்தராச் பிள்ளை மற்றும் மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடமிருந்து பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார்.


குமாரி, குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நடனமாடியது உட்பட இந்தியாவில் பல இடங்களில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நிகிட்டா குருசேவ், மில்டன் ஒபோட், சோர்டானின் உசைன் மற்றும் நேபாள மன்னர் போன்ற ஆளுமைகளுக்கு முன்னால் இவர் தனது தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். . 1971 ஆம் ஆண்டில், மும்பையிலுள்ள பாந்த்ராவில் நிருத்யா கலா கேந்திரா என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். அங்கு இவர் பல மாணவர்களுக்கு நடனம் கற்பித்து வருகிறார். முக்தா யோசி, அதிதி பகவத், நந்திதா பூரி, அனோனா குகா மற்றும் சைலா அரோரா போன்றவர்கள் இவரது குறிப்பிடத்தக்க மாணவர்களில் ஒரு சிலராவர். தற்போது குமாரி மும்பையில் வசித்து வருகிறார்.


விருதுகள் மற்றும் கௌரவங்கள்


குமாரி 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னிரண்டாவது அகில இந்திய இசை மாநாட்டில் பிரயாக் சங்கீத் சமிதி என்ற அமைப்பிடமிருந்து நிருத்திய சிரோமணி என்றப் பட்டத்தை பெற்றார். . 1976 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, சுர் சிங்கர் சம்சாத் இவருக்கு நிருத்யா விலாசு என்ற கௌரவத்தை வழங்கினார். இந்திய அரசு 1984 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கியது மேற்கு வங்காள அரசு இவருக்கு 1989 ஆம் ஆண்டு விசுவ உன்னியன் சம்சத் என்ற பட்டத்தினை வழங்கியது. 1990 ஆம் ஆண்டில் மகாராட்டிரா அரசிடமிருந்து மகாராட்டிர கௌரவ புரசுகார் விருதும் 1993 ஆம் ஆண்டு செய்ப்பூரில் உள்ள கதக் கேந்திராவிடமிருந்து மன் பத்ரா ஆகிய கௌரவங்களையும் பெற்றார். அகில இந்திய புவல்கா விருது (2005) மற்றும் அனுமந்த் விருது (2008) ஆகியவற்றையும் குமாரி பெற்றுள்ளார். இந்திய அரசின் மதிப்புமிக்க சக கூட்டாளர் கௌரவும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


திரைப்பட வரலாறு


  • பரிநீட்டா (1953) – நடிகை

  • வாரிசு (1954) – நடிகை

  • மிர்சா காலிப் (1954) – நடிகை

  • பாசந் பகார் (1956) – நடிகை

  • யல்சாகர் (1958) – நடிகை

  • கோபி (1970) – நடன அமைப்பாளர்

  • லெக்கின் (1990) – நடன அமைப்பாளர்

  • சைத்தாளி (1975) – நடன அமைப்பாளர்

  • சர்தாரி பேகம் (1996) – நடன அமைப்பாளர்
  • வெளி இணைப்புகள்

    நடிகை ரோஷன் குமாரி – விக்கிப்பீடியா

    Actress Roshan Kumari – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *