நடிகை ரூபினா அலி | Actress Rubina Ali

ரூபினா அலி (Rubina Ali) ( 21 ஜனவரி 1999), என்றும் ரூபினா குரேஷி மற்றொரு பெயர் கொண்ட இவர் இந்தியாவின் குழந்தை நடிகையாவார். 2008இல் வெளியான ஆஸ்கார் விருதினை வென்ற “சிலம்டாக் மில்லியனர்” என்றத் திரைப்படத்தில் லத்திகா பாத்திரத்தின் சிறு வயது குழந்தையாக நடித்தார், இதற்காக 2008இல் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதினை பெற்றார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2009இல் பாலிவுட் படமான கல் கிஸ்னே தேகா படத்தில் நடித்தார்.


சொந்த வாழ்க்கை


இவரது திரைக்கதாப் பாத்திரத்தைப் போலவே, ரூபினா மும்பை சேரி ஒன்றில் இருந்து திரையுலகிற்கு வந்தார், பாந்த்ரா இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கரிப் நகர் சேரியில் வசித்தார். அவருடைய தந்தை ரபீக், சகோதரி சானா, சகோதரன் அப்பாஸ் மற்றும் அவரது இரண்டாவது தாய் மூன்னி ஆகியோருடன் அவர் வசித்து வந்தார். ரூபினாவின் தாயார், குர்ஷித், ரபிககை விவாகரத்து செய்துவிட்டு, மனிஷை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை ரபீக்குக்கு முன்னியின் மூலம் சுரையா, சஞ்சீதா, பாபு மற்றும் இர்பான் ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டில் மகாராட்டிர அரசின் அகாதமி விருது, பெற்ற “ஸ்லம்டாக் மில்லியனர்” வெற்றியைத் தொடர்ந்து, வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் அதில் நடித்த குழந்தைகளுக்கு வீடு மற்றும் வெகுமதியினை அறிவித்தது. 25 பிப்ரவரி 2009 அன்று, மகாராட்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் அசாருதீன் மற்றும் ரூபினா ஆகியவர்களுக்கு மும்பை சேரி கரிப் நகர் பகுதியிலேயே இலவச வீடுகளை வழங்குவதாக அறிவித்தனர். எனினும் மார்ச் 2011 வரை அலி கரிப் நகரிலுள்ள ஒரு குடிசையில் வசித்து வந்தார். பிரிட்டிஷ் இயக்குனரான டேனி பாயல் மூலம் வாடகைக்கு ஒரு தற்காலிக புகலிடத்தை தேடிக் கொண்டபின், ரூபினாவும் அவரது குடும்பத்தாரும் கடைசியாக மும்பையின் பாந்த்ரா மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சொந்த குடியிருப்பில் மறுபடியும் சேர்த்து வாழ்ந்தனர்,


தொழில்


ரபினாவின் நடிப்பு சிலம்டாக் மில்லியனயர் (திரைப்படம்) தயாரிப்பாளர்களிடம் சர்ச்சைக்குள்ளானது, படத்தில் உண்மையான குடிசைக் குழந்தைகளைப் பயன்படுத்தலாமா என விவாதிக்கப்பட்டது. இயக்குனர் டேனி பாயில் இவ்வாறு நியாயப்படுத்தினார்: “இந்த மக்களுக்கு எதிராக தவறுதலான் எண்ணம் இருக்கிறது, நாம் ஏன் அவர்களுக்கு எதிராகத் துரோகம் செய்ய வேண்டும்?”


இந்த படத்தில் ரூபினா மற்றும் அவரது துணை நடிகருமான அசாருதீன் முகம்மது இஸ்மாயிலுக்கும் பிரிட்டனில் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியத்திற்கு சமமாக ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக திரைப்பட தயாரிப்பாளரால் கூறப்பட்டது. அவர்கள் பதினெட்டு வயது வரை தொடர்ந்து கல்விக்காக உதவ ஒரு அறக்கட்டளை நிதி அமைக்கப்பட்டது. அஸாருதின் மற்றும் ரூபினா இருவரும் 2009 பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற 81வது அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுடன் படத்தில் சலீம் , ஜமால், மற்றும் லத்திகா எனற பாத்திரங்களில் நடித்தவர்களும் அங்கு சென்றனர். அஸாருதீன் தனது தாயார் ஷமீம் இஸ்மாயிலுடனும், ரூபினா தனது மாமாவுடனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரூபினா மும்பையை விட்டு வெளியே பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்


மார்ச் 209 இல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் தன்னுடன் நடித்த அஸாருதினுடன் பாலிவுட் திரைப்படமான கல் கிஸ்னே தேகா என்ற படத்தில் நடித்தார். இதன் இயக்கம் விவேக் சர்மா மேலும், இப்படத்தில் பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான சாருக் கான், ரிசி கபூர் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றனர்.. ஜூலை 2009இல் 9 வயதான ரூபினா “ஸ்லம்கேர்ல் ட்ரீமிங்” எனும் சுயசரிதையை எழுதியுள்ளார், இதில் அவரது “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படத்தில் அவரது அனுபவம் மற்றும் தனது வாழ்க்கையை விவரிக்கிறார். 2009 ஆம் ஆண்டில், இவர் ஆன்ட்னி ஹாப்கின்ஸ் என்ற நடிகருடன் காதல் நகைச்சுவைப் படமான “லார்ட் ஓவன்ஸ் லேடி” என்றப் படத்தில் நடித்திருப்பதாக அறிவித்தார், ஆனால் 2013 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை.


ஊதியம்


இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகையின் கூற்றுப்படி, ரூபினா அலிக்கு ஒரு மாத கால படப்பிடிப்பிற்கு 500 டாலர் வழ்ங்கப்பட்டது எனத் தெriகிறது.. ஃபாக்ஸ் சர்ச்லைட் செய்தித் தொடர்பாளர் இந்த திரைப்படத்தின் ஒரு மாத வேலைக்காக வீட்டிலுள்ள வயது வந்தோருக்கான சராசரி வருடாந்திர ஊதியத்தின் அளவில் மூன்று மடங்காக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார். டேனி பாயில் இவற்றிக்கான பதிலை இவ்வாறு விளக்கினார், “அறக்கட்டளை நிதியத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை நாங்கள் வெளியிட விரும்பவில்லை, அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஒரு கணிசமான தொகை இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் நன்மை அடைவார்கள், இது சரியான அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன்”.


விருதுகள்


வெற்றி


  • 2009: “சிலம்டாக் மில்லியனயர்” படத்தின் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது

  • பரிந்துரை


  • 2008: “சிலம்டாக் மில்லியனயர்” படத்திற்காக பிளாக் ரீல் விருதுகள்
  • நடித்த திரைப்படங்கள்

    2008 சிலம்டாக் மில்லியனயர் (திரைப்படம்)
    2009 கல் கிஸ்னே தேகா
    2013 லா அல்போம்ப்ரா ரோஜா

    வெளி இணைப்புகள்

    நடிகை ரூபினா அலி – விக்கிப்பீடியா

    Actress Rubina Ali – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *